NFPE

Tuesday 4 June 2013

அஞ்சல் மூன்றின் 36 வது மாநில மாநாடு

அஞ்சல் மூன்றின் மாநில மாநாடு ! 36 வது மாநாடு ! இது ஒரு ஒற்றுமை மாநாடாக மலரட்டும் ! உங்கள் அனைவரின் மனம் திறந்த ஒத்துழைப்போடு ! கடந்த காலத்தின் கசப்புகள் மறைந்தே போயின ! எதிர்காலம் ஒற்றுமை ! மேலும் ஒற்றுமை ! ஆம் ! இது காலத்தின் கட்டாயம் !

முதலாளித்துவ, ஏகாதிபத்திய சக்திகள் , உலகமயம் என்ற பெயரில் , தாராளமயம் என்ற பெயரில், வணிக மயம் என்ற பெயரில் அடித்தட்டு மக்களுக்கு எதிராக , உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக தாக்குதலைத் தொடுத்திருப்பது கண்கூடு ! தபால் துறை ஏதோ தனித்தீவு அல்ல ! இன்சுரன்சு துறை போல , வங்கித்துறை போல, பொதுத் துறை போல , சில்லறை வர்த்தகம் போல, விவசாயம் போல எங்கும் எதிலும் தனியார் மய ஆதிக்கம் ! அதற்கு நடைபாவாடை விரிக்கும் மத்திய அரசு ! BSNL ஐக் 'கபளீகரம்' செய்தது போல நம்மையும் 'கபளீகரம்' செய்யக் காத்திருக்கும் பன்னாட்டுநிறுவனங்கள்!

இந்த முதலாளித்துவ சக்திகள் கொடுத்த பலத்தால், அரசு கொடுத்த தைரியத்தால் , அடக்கி ஆள நினைக்கும் அதிகார வர்க்கம் ! இதனை எதிர்க்க உலகத் தொழிலாளர்கள் மட்டும் ஒன்றுபடுங்கள் என்று நாம் குரல் கொடுத்தால் போதாது ! நம்மிடமும் ஒற்றுமை வேண்டும் ! அந்த திசை நோக்கி தீர்மானிக்கும் மாநாடாக இது மலரட்டும்! எதிர்காலத்தின் போராட்டங்களுக்கு இது விதை களமாகட்டும் !

No comments:

Post a Comment