NFPE

Wednesday 1 April 2015

மார்ச் 31 உன் மகிமைதான் என்ன ?

அப்படி என்ன மார்ச் 31 க்கு மட்டும் இத்தனை மகத்துவம் 

மார்ச் 31க்கு பிறகு சுகன்யா சம்ரிதி தொடங்க சாப்ட்வர் சம்மதிக்காதா?  
மார்ச் 31க்கு பிறகு RPLI  பாலிசை  மெக்காமீ ஸ் ஏறெடுத்து பார்க்காதா ?
பிறகு என்ன இத்தனை 
முஸ்திப்பு .முண்டியடிப்பு .மும்முரம் ,மூர்க்கத்தனம் 
இலக்கை எட்ட மட்டுமா இத்தனை முகங்கள் 
இது ஆர்வமா?  இல்லை நாடகமா ?

நாங்கள் பார்த்த மார்ச் 31இருக்கிறது 

சாக்கு   சாக்யாய் பண மூட்டைகள் 
மாநில அரசின் ஒத்துழைப்போடு வந்து குவிந்ததுண்டு 
5 வருட  இந்திரா பத்திரம் இன்ச ன்டிவ் கிடைத்தாலும் விற்று கொடுக்க இருக்கின்ற ஆட்களால் முடியாது 
ஆரம்பகால MIS [13.5 ) சமாளிக்க முடியாது 
திருவிழா கோலமாக இருந்தது அஞ்சல் அலுவலகம்  

  நாங்கள் கேட்ட  மார்ச் 31இருக்கிறது 

எந்தெந்த அலுவலகங்களுக்கு என்னன்ன தேவையோ அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மீதி இருக்கும் தொகையில் SPM தோழர்கள் கேட்டதை மறுக்காமல் /மறக்காமல் சப் ளை செய்த காலங்களும் உண்டு 
அது வசந்த காலம் 
இது கசந்த காலம் -களம் கண்டால் தான் 
வசந்தம் பிறக்கும்என்றால்  அங்கே அசந்து கிடக்கும் நம்   ஊழியர்களுக்கு
ZINDABAD சொல்லிகொடுங்கள் -இன்குலாப் பேச சொல்லுங்கள்  

இன்று பார்க்கும் மார்ச் 31 இருக்கிறது 

இரவு எத்தனை மணி ஆனாலும் அத்தனையும் முடித்து விட்டுதான் போக வேண்டும் .நெல்லையில் வழிப்பறி கொள்ளை கிடையாது ,கொலை நடப்பது இல்லை கழுத்தில் நகை அணிந்து கொண்டு நள்ளிரவிலும் தோழியர்கள் வீட்டிற்கு தைரியமாக போகலாம் என்ற நிலையிலா இருக்கிறோம். வாரியம் நிர்ணயம் செய்த இலக்கை வரிந்து கட்டிக்கொண்டு மாநில நிர்வாகம் மண்டல நிர்வாகத்தை முடுக்குகிறது 
மண்டல நிர்வாகம் கோட்டங்களை விரட்டுகிறது 
கோட்ட நிர்வாகம் மத்தளம் போல் இரண்டு பக்க இடிகளுக்கு மத்தியில் 
ஊழியர்களை புண் படுத்தும் வகையிலும்  ,உரக்கவும் பேச தொடங்குகிறது 
ஊழியர்களோ உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு 
நாலும் ஏங்குகிறான் -நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் தான் தூங்குகிறான்  
சாப்பாடு நல்லா இருந்தாலும் 4 இட்லிக்கு   பதில் 6 சாப்பிடலாம் 40சாப்பிட சொல்லி கட்டாய படுத்த முடியுமா ?
வேறு எந்த துறையிலும் இப்படி ஒரு நெருக்கடிகளை அதிகாரிகள் தன்சொந்த  சக ஊழியர்களுக்கு கொடுத்ததில்லை 

மார்ச் 31 -2015 யோடு இந்த நெருக்கடிகள் முடியட்டும் .மார்ச் 2016 வது தமிழக அஞ்சல் ஊழியர்களின்  ஆகஸ்து 15 ஆக கொண்டாடுவோம்  

                                               தோழமையுடன் 
                                                SK ஜேக்கப்ராஜ், கோட்டச் செயலர், திருநெல்வேலி.

No comments:

Post a Comment