இந்திய தேசத்தின் மிகப் பெரும் தொழிற் சங்கங்களான INTUC, AITUC, CITU, BMS, HMS உள்ளிட்ட 11 தொழிற்சங்க மையங்கள், மத்திய , மாநில, பொதுத் துறை ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள 48 மணி நேர வேலை நிறுத்தம்.
NFPE, FNPO சம்மேளனங்கள் மற்றும் GDS ஊழியர் சங்கங்கள் சேர்ந்து நடத்தும் வேலை நிறுத்தம்.
7 ஆவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி இணைப்பு, GDS போனஸ், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்தல் போன்ற 25 அம்சக் கோரிக்கைகளுக்கான வேலை நிறுத்தம்.
பிப்ரவரி 20 & 21 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் ! வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !
வேலை நிறுத்த சிறப்புக் கூட்டம்.
மண்டல ரீதியான சிறப்புக் கூட்டங்கள்.
14.02.13 - திருச்சி RMS மனமகிழ் மன்ற கூடம்.
15.02.13 - மதுரை தலைமை அஞ்சலகம்.
16.02.13 - கோவை தலைமை அஞ்சலகம் .
மண்டலக் கூட்டங்களில் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொள்வார்கள்.
மண்டலக் கூட்டங்களில் அந்தந்த மண்டலங்களில் உள்ள அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
அனைத்து கோட்ட/ கிளைகளிலும் வேலை நிறுத்த விளக்கக் கூட்டங்களை அந்தந்த மண்டல/ மாநிலச் சங்க நிர்வாகிகளைக்
கலந்து கொண்டு நடத்திட வேண்டுகிறோம். தல மட்டத்திலும் மண்டலக் கூட்டங்களிலும் JCAவை ஒருங்கிணைத்து கூட்டங்களை நடத்திட வேண்டுகிறோம் .
அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் வேலைநிறுத்தம் சம்பந்தமான விளக்க நோட்டீஸ் உடன் வெளியிட வேண்டுகிறோம்.
அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிட வேண்டுகிறோம்.
இணைப்புக் குழுவின் விரிவான சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளது.
இவண்
அஞ்சல், ஆர்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., GDS ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு,
தமிழ் மாநிலம்
தமிழ் மாநிலம்
No comments:
Post a Comment