அன்புத்
தோழர்களே, தோழியர்களே.....
09.08.13 அன்று மதுரையில், குளு குளு அரங்கில் மத்திய அரசு ஊழியர்களின்
மாபெரும் இயக்கமான NFPE-ன் எழுச்சி மிகு பயிலரங்குக் கூட்டத்தினை நடத்த மதுரைக்
கோட்டம் வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது. மாநிலம் முழுவதும் இருந்து
முன்னணித் தோழர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
கீழ்க்காணும் தலைப்புகளில், மாநில, மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள், பயிற்சி
அளித்தனர்.
இளைஞர்களும் தொழிற்சங்க வரலாறு, தொழிலாளர்
பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாநிலத் தலைவர் சிரி. வெங்கடேசன் அவர்களும்,
தாந்தோன்றித் தனமாக செயல்படும் அதிகாரிகளுக்கு கடிவாளம் போடக் கையாள வேண்டிய RTI
சட்டம் குறித்தும், CONTRIBUTORY NEGLIGENCE குறித்து முன்னாள் மாநிலச் செயலர்
தோழர் S.சுந்தரமூர்த்தி அவர்களும், மாறி வரும் காலகட்டத்தில் அஞ்சல் துறை வளர்ச்சி,
ஊழியர் பணிப்பாதுகாப்பு, எதிர்காலத் திட்டங்கள், அஞ்சல் துறையில்
வரவேற்கத்தக்கதும், எதிர்க்கத்தக்க அம்சங்கள் குறித்து மாநிலச் செயலர் தோழர்
J.ராமமூர்த்தி அவர்களும், CCS-CCA விதிமுறைகள், அடாவடித்தனம் செய்யும் அதிகாரிகளின்
பழிவாங்கும் போக்கில் இருந்து ஊழியர்கள் தங்களைக் காத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய
வழிமுறைகள் குறித்து முன்னாள் மத்திய செயலர் அறிவு ஜீவி தோழர் K.V.ஸ்ரீ தரன்
அவர்களும் விரிவாக உரையாற்றியது, கலந்து கொண்ட தோழர்களுக்கு, அறிவமுதை வார்த்ததாக
இருந்தது என்றால் அது மிகையல்ல.... !!!
இதுபோன்ற தொடர்ச்சியான பயிலரங்க்குக்
கூட்டங்கள் இனிவரும் காலங்களில் நடத்தப்படும் என்றும் கோட்டத்திற்கு 5 இளைய
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலாக்கா விதிமுறைகள், தொழிலாளர் சட்டங்கள்
குறித்து பயிற்றுவிக்கப்பட்டு, எதிர்காலத்திலும் NFPE இயக்கத்தை இதே போல வலுமையான
இயக்கமாக, ஊழியர் பாதுகாப்புக்கு உறுதி சேர்க்கும் இயக்கமாக தொடர சூளுரைக்கப்பட்டது
No comments:
Post a Comment