INFORMAL MEETING WITH CPMG , TN ON PONDICHERY AND SOUTHERN REGION ISSUES
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
இன்று (08.08.2014) நமது CPMG அவர்களுடன் பாண்டிச்சேரி கோட்டத்தில் நூற்றுக் கணக்கான தோழர்களுக்கு அளிக்கப் பட்ட FR - 17 A குறித்தும் தென் மண்டலத்தில் பரவலாக அளிக்கப் பட்ட DIES- NON குறித்தும் விவாதித்திட ஒரு சிறப்பு நேர்காணல் கேட்டிருந்தோம் .
அதன்படியே அஞ்சல் மூன்று சங்கத்திற்கும் அஞ்சல் நான்கு சங்கத்திற்கும் இது அனுமதிக்கப்பட்டு மாலை 05.00 மணியளவில் CPMG . TN அவர்களுடன் இது நடைபெற்றது. நிர்வாகத் தரப்பில் நமது CPMG அவர்களும், DPS (HQ) அவர்களும் DPS , CCR அவர்களும் கலந்துகொண்டார்கள்.
ஊழியர் தரப்பில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் J .R ., அவர்களும் அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். ரவிச்சந்திரன் அவர்களும் , பாண்டிச்சேரி அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். சத்தியமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்கள். பாண்டிச்சேரி கோட்டத்தின் அஞ்சல் நான்கின் செயலர் தோழர். பன்னீர்செல்வம், அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர் ராஜேந்திரன் மற்றும் முன்னணித் தோழர் வாசு அவர்களும் வந்திருந்தார்கள்.
சிறப்பு நேர்காணலில் கீழ்க்காணும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது :-
1. பாண்டிச்சேரி கோட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு தபால்காரர் மற்றும் MTS பதவிகள் தன்னிச்சையாக ஒழிக்கப் பட்டதை எதிர்த்து நடத்தப் பட்ட JCA வின் வேலை நிறுத்தத்தை ஒட்டி வழங்கப் பட்ட 200 க்கு மேற்பட்ட தோழர்களுக்கான FR 17 A ரத்து செய்திட வேண்டியும் , தற்போது இதன் காரணமாக LGO தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட தோழர்களுக்கு தேர்வு எழுதிட PROVISIONAL PERMISSION வழங்கிட வேண்டியும் கோரினோம்.
இது குறித்து CPMG அவர்கள் நிர்வாகத் தரப்பின் மன வருத்தத்தை தெரிவித்தார். இதுவரை PMG, CCR இடம் ஏன் பேசவில்லை என்று வினவினார். இருந்தபோதிலும் இந்த பிரச்சினையில் ஊழியரின் பாதிப்புகள் குறித்து நாம் விளக்கமாக எடுத்துரைத்து பிரச்சினையை உடன் தீர்த்திட வேண்டினோம் . மாநில அளவில் நிர்வாகத்திற்கும் தொழிற் சங்கத்திற்கும் இடையே சுமூகமான உறவை உறுதி அளித்தோம். இதன் அடிப்படையில் CPMG அவர்கள் இந்தப் பிரச்சினை குறித்து PMG, CCR இடம் சந்திக்குமாறும் நிச்சயம் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்றும் நமக்கு தெரிவித்தார். அவரின் வழி காட்டுதல் படி எதிர்வரும் வாரத்தில் PMG, CCR இடம் நேர்காணல் பெற்று பிரச்சினையை தீர்த்திட வேண்டுவோம் என்று உறுதி அளித்தோம். நிச்சயம் PMG, CCR அவர்கள் ஊழியர் பிரச்சினையில் பரிவுடன் அணுகி பிரச்சினையை தீர்த்திடுவார் என்று நம்புகிறோம்.
2. தென் மண்டலத்தில் தன்னிச்சையாக , இலாக்கா விதிகளை மீறி COC இன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு 'DIES NON ' அளிக்கப் பட்டது சட்ட விரோதம் என்பதை எடுத்துக் கூறினோம். மேலும் 05.08.2014 அன்று NFPE ஆல் அறிவிக்கப் பட்ட 'DHARNA ' போராட்டத்திற்கு தென் மண்டலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் , மதுரை மற்றும் திருநெல்வேலி கோட்டத் தோழர்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்து இது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதை சட்ட விதிகளின் படி சுட்டிக் காட்டினோம்.
மேலும் நடைபெற்ற FOUR MONTHLY MEETTING இல் CPMG அவர்கள் அளித்த அறிவுறுத்தல்படி PMG, SR அவர்களை நேரில் சந்தித்துப் பேசியும், சட்ட விதிகள் மதிக்கப்படாமல் ஊழியர்கள் பழி வாங்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்தோம் . இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டறிந்த CPMG அவர்கள் இந்தப் பிரச்சினையில் நிச்சயம் தலையிட்டு ஒரு தீர்வு தருவதாக உறுதி அளித்தார்.
3. எதிர்வரும் 25.08.2014 முதல் 30.08.2014 வரை மதுரை PTC இல் அறிவிக்கப் பட்டுள்ள MACP பயிற்சி வகுப்புகளில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஊழியர்கள் DEPUTE செய்யப் பட்டுள்ளது குறித்தும் , எதிர்வரும் 29.08.2014 அன்று 'விநாயகர் சதுர்த்தி ' பண்டிகை வருவதால் 29.08.2014 அன்று அவரவர் ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் ஒருநாள் 30.08.2014 அன்று பயிற்சி வகுப்பிற்கு வந்துவிட்டு 31.08.2014 ஊர் திரும்புவதில் உள்ள சிரமம் குறித்து எடுத்துரைத்தோம் .எனவே TRAINING SCHEDULE இல் மாறுதல் அளித்து 'விநாயகர் சதுர்த்தி'க்கு முதல் நாளுடன் TRAINING முடித்திட ஏற்பாடு செய்திட வேண்டினோம். இது குறித்து DIRECTOR , PTC . மதுரை யுடன் பேசி நிச்சயம் தீர்வு காணப்படும் என்று CPMG அவர்கள் உறுதி அளித்தார்கள்.
4. சென்னை DPA பிரச்சினை குறித்து முடிவு எடுக்க வேண்டியும் , AUDIT பிரிவு மாநிலச் செயலர் கொடுத்த கடித நகலை பரிசீலித்து அதன் அடிப்படையில் தீர்வு காணவும் வேண்டினோம். இது குறித்து DIRECTORATE க்கு பதில் அளிக்க உள்ளதாகவும் அப்போது இது குறித்த விஷயங்கள் கணக்கில் கொள்ளப்படும் என்றும் CPMG அவர்கள் பதில் அளித்தார்.
நேர்காணல் சுமுகமாக நடைபெற்றது. CPMG அவர்களின் வழி காட்டுதல் படியும் , அளித்த உறுதியின் படியும் நிச்சயம் இந்தப் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். நாம் அளித்த ஊழியர் பிரச்சனைகளை பொறுமையுடன் பெற்று பரிசீலனை செய்து தீர்வுக்கு உரிய உறுதிகள் அளித்த CPMG அவர்களுக்கும் , DPS HQ மற்றும் DPS CCR அவர்களுக்கும் நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment