புதிய CONFIRMATION /PROBATION விதி -
இளைஞர்களின் தலைக்குமேல் தொங்கும் கத்தி !
கீழே காணும் நேரடி எழுத்தருக்கான PROBATION மற்றும் CONFIRMATIONக் கான 16.04.2015 இல் அளிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி
முதலாவதாக
1. பணிப் பயிற்சியின் போது வைக்கப்படும் தேர்வில் குறைந்த பட்சம் 60%
மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் .(இது 2011 க்கு பின்னர்
நடைமுறையில் உள்ளது )
2. அப்படி 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவில்லையானால் , இரண்டு
வாரம் பணிப் பயிற்சி நீட்டிக்கப்படும் . அந்த காலத்தில் இரண்டு TEST
வைக்கப்படும். அவற்றில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்று
தேர்ச்சி பெறவேண்டும் .
3. அப்படி தேர்ச்சி பெறவில்லையானால் SATISFACTORY COMPLETION OF
TRAINING REPORT அளிக்கப்படமாட்டாது.
4. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும் இரண்டு
வாய்ப்புகளில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்பெறவில்லையானால்
அவர்களை இலாக்கா பணியிலிருந்து TERMINATE செய்திட
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
5. இது தவிர, தேர்வில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்று தேர்வு
பெற்றாலும் கூட, அவர்களது PROBATION காலத்தில் அவர்களது
CONDUCT & PERFORMANCE UNSATISFACTORY என்று தீர்மானிக்கப்
பட்டால் அவர்களது சேவை TERMINATE செய்யப்படும் .
இந்த உத்தரவில் நம் மாநிலச் சங்கத்தின் கருத்து :-
1. REVISED P .A . RULES ,2011 அடிப்படையில் எழுத்தர் தேர்வில் கலந்து
கொள்வதற்கு அடிப்படைத் தகுதி 60%, 50%, 45% (GEN , OBC, SC /ST )
மதிப்பெண் என்பது நீக்கப்பட்டு MINIMUM PASS என்பது அறிமுகப்
படுத்தப் பட்ட பிறகு, பணிப் பயிற்சியில் குறைந்தபட்சம்
60% மதிப்பெண் பெற வேண்டும் என்பது அடிப்படையில் தவறானது,
2. எழுத்தர் தேர்வில் BASED ON MERIT தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ,
பணிப் பயிற்சியில் கட்டாய மதிப்பெண் வேண்டுவது சட்டத்திற்கு
புறம்பானது. CONSTITUTION க்கு எதிரானது.
3. எழுத்தர் தேர்வில் QUALIFYING MARKS 40%, 37%, 33% என்று வைக்கப்
பட்ட பிறகு , பணிப் பயிற்சியில் QUALIFYING MARKS 60% என்று
நிர்ணயிக்கப்பட்டது முற்றிலும் முரணானது.
4. சமூக நீதி அடிப்படையில் மத்திய அரசின் நேரடித்தேர்வுகளுக்கே SC
/ST, OBC பிரிவினருக்கு பெறவேண்டிய குறைந்த பட்ச மதிப்பெண்கள்
RELAX செய்து வழங்கப்படும்போது , சாதாரணமான இலாக்காவின்
பணிப்பயிற்சிக்கு கட்டாயமாக குறைந்தபட்ச மதிப்பெண்60%அனைத்து
பிரிவினருக்கும் என்று நிர்ணயிக்கப் பட்டது சமூக நீதிக்கும் , அரசியல்
அமைப்புச் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது.
5. இலாக்காவில் அளிக்கப் படும் பணிப் பயிற்சி என்பது , இலாக்கா
விதிகள் மற்றும் பணிகளின் செயல்பாட்டு முறைகள் குறித்து
தெரிந்துகொள்ளத் தானே தவிர , இதில் பெறப்படும் மதிப்பெண்கள்
அடிப்படையில்தான் பணி நிரந்தரம் செய்யப்படும் என்பது அடிப்படை
விதிகளுக்கு எதிரானது.
6. PROBATION காலத்தில் CONDUCT & PERFORMANCE UNSATISFACTORY
என்று கருதினால் பணி நீக்கம் செய்யலாம் என்பது CORPORATE சட்டம்
போல உள்ளது. CONDUCT & PERFORMANCE க்கு எந்தவித அளவுகோலும்
நிர்ணயிக்கப் படவில்லை.
PTC யில் கூட "கழிப்பறை ஏன் கழுவவில்லை , காந்தியார் செய்ய
வில்லையா"என்று கேட்ட/கேட்கும் அதிகாரிகள் உள்ளனர்.
SHRAMDHAN செய் , YOGA செய் . காலை 4.00 மணிக்கு படுக்கையில் இருந்து எழு, 12 மணிநேரம் பயிற்சி வகுப்பில் தொடர்ந்து இரு. விடுமுறை தினங்களில் கூட ஊருக்கு செல்ல அனுமதி கிடையாது, முடி வெட்டிக் கொள் , SHOE போடு , TIE கட்டு. தமிழ் நாட்டில் வேட்டி கட்டக் கூடாது" என்றெல்லாம் தடாலடி உத்திரவிட்டு ஊழியர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது இங்கு உண்டு. இந்த சூழ்நிலையில் எந்த ஊழியராவது எதிர்த்துக் கேட்டால் இனி CONDUCT & PERFORMANCE சரியில்லை என்று REPORT அளிக்க முடியும்.
ஆக இந்த விதி கொத்தடிமைத்தனத்தை மத்திய அரசு சேவையில் நிச்சயம் அதிகப்படுத்தும். " MODEL EMPLOYER "ஆக இருக்க வேண்டிய மத்திய அரசுத் துறையான அஞ்சல் துறை , அதற்கு மாறாக கொத்தடிமை காலத்திற்கு நம்மை இட்டுச் செல்வதாகவே " இந்த விதி " நமக்கு அறிவுறுத்துகிறது.
ஏற்கனவே CONFIRMATION EXAMINATION வைக்கப் பட்டதே தவறு என்று
போராடி அதனை நீக்கிய நாம் , இன்று அந்த சட்டமே பரவாயில்லை என்று கூறுமளவுக்கு புதிய சட்டத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த சட்டத்தை நிச்சயம் நாம் எதிர்க்கவேண்டிய கடமையில் உள்ளோம்.
தமிழக அஞ்சல் மூன்று அதற்கான முன் கை எடுக்கும் . நம்முடைய அகில இந்திய சங்கம் மற்றும் சம்மேளனத்தின் பார்வைக்கு இதனை நாம் கொண்டு செல்வோம். இதனை நீக்குவதற்கான முழு நடவடிக்கை களில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம் . இதன் மீது உங்கள் கருத்துக்களை நிச்சயம் மாநிலச் சங்கத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டுகிறோம். உடன் EMAIL மூலமோ அல்லது COMMENTS பகுதியிலோ உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.
தோழமையுடன்
மாநிலச் செயலர் ,
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம்
No comments:
Post a Comment