NFPE

Saturday, 19 September 2015

"விடுதலைக்காக உயிர் நீத்தவர் கல்லறைகளில் விடுதலை விதை முளைக்காத கல்லறை ஏதுமில்லை"



"விடுதலைக்காக உயிர் நீத்தவர் கல்லறைகளில்
விடுதலை விதை முளைக்காத கல்லறை ஏதுமில்லை"
மத்திய அரசு ஊழியர்களின் ''தியாகிகள் தினம் '' இன்று !
1968 ஆம் ஆண்டு செப்டெம்பர் 19... மத்திய அரசு ஊழியர்களின் வரலாற்றில் சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்ட அத்தியாயம். அன்று தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியம் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்து அஞ்சல் தொலை தொடர்பு உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தேச விரோதிகளை ஒடுக்குவது போன்று போராட்டத்தை நசுக்கிட அரசு இயந்திரம் களத்தில் இறங்கி செயல்பட்டது. தங்கள் ஜனநாயக உரிமையாக அமைதியான முறையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தனது சொந்த ஊழியர்கள் மீது ராணுவம் மற்றும், துணை ராணுவத்தை ஏவி அரசு இயந்திரம் தாக்குதல் நடத்தியது. பத்தன்கோட் ,பிகானீர்,குவஹாதி, இந்திரபிரஸ்த பவன் ,டெல்லி ஆகிய இடங்களில் 17 ஊழியர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கைது,சிறையில் அடைப்பு,பணியிடை நீக்கம், பணி நீக்கம், தண்டனைகள். அரசின் பழி வாங்குதலை எதிர்த்து மூன்று ஆண்டுகள் தொழிலாளர் இயக்கங்கள் தொடர்ந்தன. பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் பணியில் சேர்ந்தனர்.
அடக்குமுறைகளை மீறி துணிச்சலுடன் போராடிய தியாகிகளை நன்றியுடனும், மரியாதையுடனும் மத்திய அரசு ஊழியர்கள் நினைவு கூறும் நாள் இன்று .

No comments:

Post a Comment