NFPE

Friday, 13 January 2012

17 .01 .2012 முதல் நடைபெறயுள்ள காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பை முன்னிட்டு பொது செயலரின் மேசையிலிருந்து!


அடிக்கடி அல்ல -ஆனால்?
            ஏற்கனவே ஜூலை 2011 ல் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு ஏதிராக MNOP ஐ செயல்படுத்துவதை தடுக்கும் முகத்தான் JCA ஒரு தெளிவாக 17 .01 .2012 காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  ஒரு ஆறு மாத குறுகிய இடைவெளியில் மீன்டும் ஏன்? இந்த வேலைநிறுத்த அறிவிப்பு என நீங்கள் நினைக்கக்கூடும்.  இந்த வேலைநிறுத்த அறிவிப்பு உங்களின் கஷ்டங்கள் நீங்கள் களப்பணிகளில் அன்றாடம் அதிகமாக ஏதிர் கொள்ளும் ஊழியர்களின் வெளிப்பாடு ஆகும்.

மிகுந்த நம்பிக்கையுடன்
            அஞ்சல் துறை செயலர் கொடுத்த நம்பிக்கை மற்றும் எழுத்து வடிவில் கொடுத்த உறுதியின் நம்பகத்தன்மையில் JCA ஜுலை 2011 வேலைநிறுத்தை ஒத்தி வைத்தது.  ஆனால் நடந்தது என்ன? ஓரிறு சிறிய கோரிக்கைகளை தவிர்த்து முக்கியமான கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டது.  இதனிடையில் L1 , L2 என்ற இரு பிரிப்பக திட்டங்களை செயல்படுத்த இலாக்கவனது தன்னிச்சையாக  முடிவெடுத்தது. இந்த ஒருதலைபட்ச செயலை கண்டிக்க JCA க்கு வேறு என்ன வழி இருக்கிறது?  1968 க்கு பின் எத்தினியோ ஒருநாள் மற்றும் தொடர் வேலை நிறுத்தங்களை களம் கண்ட நமது ஒற்றுமை மற்றும் போராட்ட வலிமை குறித்து ஒரு மேலான எண்ணம் உள்ளது.  அதுவே நமது துறை உழியரின் அதீத சக்தியாகும், மேலும் அடிவேர்வரை உள்ள தோழர்களிடம் உள்ள  தன்னார்வ செயல்கள் , விழிப்புணர்வு, சுகநினைவு மற்றும் எந்த நிலையிலும் தயார் போன்ற குணதிசயங்கள் மிகவும் அதிகமாகவே வேருன்றி உள்ளது.

ஆலோசனையா? அன்றி கூட்டு சதியா ?
    நாம் ஒன்றை தனியாக புரிந்து கொள்ளவேண்டும்.  நாம் நவீனமயமாக்கலுக்கு எதிரானவர்கள் அல்லர் இருந்து ஏன்? L1 , L2 க்கு கடும் எதிப்பை தெரிவிக்கின்றோம் நவீனமயமகுதல் என்ற பெயரில் ஊழியர்களுக்கு குந்தகமோ  அன்றி மக்களுக்கு சேவை குறைவோ உருவாக்க வழிய்னை செய்யக்கூடாது.  L1  , L2 என்பது முற்றும் நவீனமயமாக்கப்பட்ட பிரிப்பகங்க,உம அல்ல.   இதற்கு முன் நமது இலாக KPMG என்ற வெளிநாட்டு  நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் ஆலோசனை வழங்க ஒப்பந்தம் செய்து பணத்தை விரயம் செய்தது.  அந்த நிறுவனத்தின் ஆலோசனைகளின் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை.  சமீபத்தில் இலாகவானது Mckensy என்ற நிறுவனம் ஆலோசனை சேவை வழங்க நியம்மணம் செய்துள்ளது.   இந்த   நிறுவனத்தின்ஒப்பந்த தொகை மிக குறைந்ததும் அல்ல.  ரூ 12 .60  கோடியில் இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தமானது.  இந்தனை பெரிய தொகை கொடுத்து  ஆலோசனை பெற நமக்கு என்ன அவசியம் ?  திரைமறைவில் நடந்தது என்ன ? 

அரசாங்க சேவைகள் தனியார் மயமாக்கல்
        Mckency யின் தொழில்யுக்தி சாராம்சம் என்பது பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்கள் புதுயுத்திகளுடன் உலகமயமாக்கல் மற்றும் தனியார் மயமாதல் ஆகுயவன முலம் அரசாங்க துறைகளை தனியர்மயமக்க பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாக்கியும் மேலும் பல கம்பனிகளை அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து தனியார் கைகளுக்கு வெற்றியுடன் மாற்றியுள்ளோம்.  நாங்கள் எங்களின் கட்சிகரர்களுக்கு அவர்கனின் தேவைக்கேற்ப அவர்களுக்கு உறுதுணையாய்இருந்தி அந்த துறைகள் வெற்றிகரமாக தனியார் மயமாக்கியுள்ளோம்.
  
கலப்பனியில்ல வெறும் கணித எண்ணிக்கை 
               மேற்படி விபரங்கள் மிகைப்ப்டுத்தப்பட்டவையல்ல.  இவை அவர்களின் வலை தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை தான்.  நமது இலாக Mckency யை ஆலோசனை வழங்க மட்டும் பணியமர்த்த வில்லை மாறாக  அந்த ஆலோசனைகளை செயல் படுத்தவும்தான்.  அதனால் தான் Mckency யின் உறுப்பினர் ஒரு CPMG  க்கும் மேலான அதிகாரத்துடன் நடந்து கொள்கின்றனர்.  இதன் காரணமாக தமிழகம் ஆந்திரம் கர்நாடக மாநிலங்களில் போராட்டத்திற்கு வழிவகை செய்துள்ளது.  இலாகாவானது முதலில் 9797 தபால் நிலையங்கள் நகர்ப்புறங்களில் மூட ஆனைபிறபித்தது.  இந்த எண்ணிக்கை புள்ளி விவரங்களின் அடிப்படையில் நிர்ணியிக்கபட்டதல்ல.  இவை Mckency யின் வெறும் கணித முறையின் ஆலோசனையே.    அவ்வப்போது போராட்டங்கள் நடக்கின்றன.
  
சமுக கடமையின் வழுவல் 
இலாகவானது Speed post hub களைஉருவாக்கி துரித தபால் சேவையை மையகபடுத்தியுள்ளது.  ஒரு தபால் வட்டத்துக்குள் உள்ள தபால்கள் பவேறு இடையுறுகளை இந்த Hub ம் சந்திக்கிறது.  இமாசல பிரதேச உயர் நீதிமன்றம் குட்டு கொடுத்தும் அதிகாரிகள் இந்த Hub  system  ஐ விட்டுவிட தயாரில்லை.  அவர்கள் சேவையை விட வருமனத்தைதான் குறிவைத்து காய்களை நகர்த்து வதாக சொல்கிறார்கள்.  உள்வட்ட SPC க்களை உருவாக்க Directorate ஆணை பிறப்பித்தும் CPMG /PMG  க்கள் அவற்றை நிறைவேற்ற தயக்கம் காட்டுக்ன்றனர்.

CPMG ,  DG  க்கு மேலதிகாரியா ?   
               மகாராஷ்ரா மாநிலத்தில் CPMG அவர்கள் இலாகாவின் நஷ்டத்தை குறைக்க ஒரு கமிட்டியை அமைத்தார்கள்.  அந்த கமிட்டி, தன் அறிக்கையில் 39 Single hand post office ஐ BO ஆகவும் நகர்புறங்களில் உள்ள 549 Single hand BO ஆகவும் மீதமுள்ள 349 அஞ்சலகங்களில் ௧௧௭ ஐ பக்கத்தில் உள்ள அஞ்சலகங்களுடன் இணைத்துவிடவும் மீதமுள்ள் அலுவலகங்களை Est .  review  செய்து தரம் தாழ்த்தவும்  பரிந்துரைத்துள்ளது.  இந்த செயலானது தொழிற் சங்கங்களின் கோரிக்கை ஏற்று 6.7.11 ல் துறை செயலர் ஒப்ப்புக்கொண்ட சரத்தான ஒரு தபால் அலுவலகம் மூடும்போது / இணைக்கும் போதோ அதற்குபதில் வேறு ஒரு வளர்ந்து வரும் இடத்தில் அந்த தபால் அலுவலகம் நிலைபடுத்த/ நிறுவவேண்டும் என்கின்ற DG அவர்களின் உத்திரவுக்கு  முரன்ப்பாடாக உள்ளதே.  இது DG  அவர்களின் 27 .12 .11  தேதியிட்ட அறிக்கைக்கு எதிராக உள்ளதே?  இந்த முரண்பாடான ஆணையிடும் DG  ஐ விட உயர் அந்தஸ்தில் உள்ளதாக நினைக்கும் Mohansingh  CPMG அவர்கள் மீது  என்ன நடவடிக்கை  எடுக்கப்படும் . 

               இதே   CPMG அவர்கள் இரண்டு sorting அலுவலகங்களை மூடி நவம்பர் 2011  ல் 10௦ நாள் strike  க்கு வித்திட்டார்? இலாக முதல்வர் உத்தரவிட்டும் அந்த உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் CPMG சிறிதும் மாறவில்லை.

                   FR17(a) போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்காது என்று இலாக ஒத்துக் கொண்டதற்கு மாறாக அவை தொடர் கதையாக உள்ளது.  இது போன்ற கீழ் மட்ட அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாத உயர் அதிகாரிகள் ஏன் தொழிற் சங்கங்களுடன் இப்படி ஒரு ஏமாற்று ஒப்பந்தங்கள் போடுகின்றனர்.  இது உண்மையிலேயே தொழிற் சங்கங்களை முட்டால்லக கருதும் செயலாகவே உள்ளது.  இந்த துர்பாக்கிய தொற்று நோய் போன்ற செயல் பிற மாநிலங்களிலும் பரவினால் நிலைமை என்னவாகும்? இதை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டாமா? 

சேவையை சீர்குலைக்க உறுதி 
           27.12.11 ல் நடந்த பேச்சு வார்த்தையின் போது L1,L2 ஐ எப்படியும் செயல்படுத்துவது என்றும் பிறகு அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆராயும் என்றும் Member (O) அவர்கள் பிரகடன படுத்துகிறார்.  RMS ஐ ஒழித்துக்கட்டும் இப்படிப்பட்ட L1,L2 ஐ எப்படி நாம் அனுமதிப்பது?
  L1,L2 என்பவை கீழ் கண்ட மூன்று சாராம்சங்கள் உள்ளது.
1. பொதுமக்கள் / நுகர்வோருக்கு உபயோகமாய் இல்லாதது.
2. செயல்படுத்தும் செலவு மற்றவற்றை விடவும் அதிகமாய் உள்ளது.
3. ஊழியர்கள் இடமாற்றமும் இறுதியில் L2 அலுவலகங்கள் மூடலும் தொடர்கதை ஆகும்.

                  7.12.11 தேதியிட்ட கடிதம் மூலம் நாம் L1&L2 செயல் படுத்த இயலாத காரணங்களை விவரித்தோம்.  இந்த    L1&L2 என்பது sorting வேலையை மையப்படுத்தி ஊழியர்களை வீடுக்கு அனுப்புவதாகவும்.

               AMPC யின் செயல் பாடுகள் குறித்து பார்ப்போம்.  சென்னை மும்பையில் உள்ள  AMPC  க்கள் யானையை கட்டி தீனிபோடும் செயலுக்கு ஒப்பாகும்.  இவை மூலம் இலாகாவிற்கு கோடிகணக்கான பணம் விரயமாகிறது.  CPMG மகாராஷ்டிர அவர்களின் கூற்றுபடியே (நமது JCA வின் கூற்று அல்ல). 
''தற்போது ரூ.7284864/- AMPC பராமரிப்பு மற்றும் மின்சார உபயோகத்திற்கு மட்டும் செலவிடப்படுகிறது.  இது தவிர ரூ.10892064/- நிர்வாக செலவாக செல்கிறது. AMPC  ஐ APSO உடன் சேர்த்துவிட்டால் இலாகாவிற்கு ரூ. 18176928 /- சேமிப்பாக மாறும்''.

                 உண்மை நிலை: சென்னை யில் உள்ள AMPC இயந்திரம் இயங்காமல் பழுதடைந்துள்ளது.  சென்னை Egmore  /Central ல் வரும் தபால்கள் AMPC க்கு (20 KM தூரமுள்ள) திருப்பி அனுப்பி பின் பெற்று, AMPC யில் sorting நடந்ததாக கணக்கு காட்டப்படுகிறது.  டில்லி கல்கத்தாவில் AMPC நிறுவும் எண்ணத்தில் உள்ளபோது  CPMG மகாராஷ்டிர அவர்கள் இக்கருத்தை தெரிவித்துருப்பது குறிப்பிடத்தக்கது.AMPC க்கள் நஷ்டத்தில் இயங்குவது தெரிந்தும் நாம் பிற இடங்களிலும் AMPC உருவாக்குவதை எப்படி அனுமதிக்க முடியும்?  முதலில் AMPC க்கள் லாபத்தில் செயல்படுகிறது என்று நிவாகம் நிருபிக்கட்டும் பின் நம் நிலைப்பாடு தெளிவாகும்.

1. எந்த ஒரு  செயல்பாடும் அமுல்படுத்தும் முன் கலந்துரையாடல் என்பது PSB ல் நடப்பதில்லை.  எதையும் ஒரு சில தனிப்பட்டவர்களின் விருப்பபடியே நடைபெறுகிறது.
2 . Freighter Air Carrier மூலம் 300 கோடி வருவாய் இழப்புக்கு வித்திட்ட கீழ் நிலை அதிகாரிகள் தான் தற்போது L1 , L2 க்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.
3. MO விதேஷ் மென்பொருள் வங்க கோடிகணக்கில் செலவு.  ஆனால் அதனால் வந்த வரவு வெறும் 39 மனியாடர்கள் மூலம் ரூ.4000 /-  மட்டுமே!  இது இதன் துவக்க விழாவிற்கு ஆன செலவில் 1 % கூடஇல்லை. 
4 .V SAT என்பது பெரிய தோல்வியில் முடிந்தது.
5 . BNPL   என்ற பெயரில் வருவாய் இழப்பு.

சொட்டு கூல்
               மகாராஷ்ரா மாநிலத்தில் சொட்டு கூல்  Godrej MRP விட அதிகமான விலைக்கு அஞ்சகங்களில் விற்கப்படுகிறது.  3250 க்கு கிடைக்கும் சொட்டு கூல்  3740 க்கு நாம் விற்கும் நிலை.  அதுவும் 7169 விற்றதில் 5654 GDS க்கு 857 இலாக ஊழியர்கள் வாங்கியது. வெறும் 658 மட்டுமே பொது மக்களுக்கு விற்கப்பட்டுள்ளது.  இது தான் உண்மையான மார்க்கெட்டிங் ?  GDS களை வதைத்து பெற்ற மார்க்கெட்டிங் !  சொட்டு கூல் களை MMS வேன்களில் கொண்டு செல்கையில் வருவாய் துறையினரால் பிடிப்பட்டது வெட்க கேடான ஒன்று.

சமாதனம் - இயலாத ஒன்று 
               மேற்கூறிய காரணங்களால் L1&L2   உருவாக்குவதற்கு எந்த உறுதியான கரணம் இல்லை. சேவையானது மேலும் இதனால் குந்தகமடையும் ஊழியர்கள் இடமாற்றம் செய்ய நேரிடும், சேவை பதிக்கப்படும்.  இவற்றை நாம் சகித்துக்கொள்ள முடியாது.  எனவேதான் இந்த குறுகிய தருணத்தில் தள்ளிவைத்த வேலை நிறுத்தத்தை தொடர வேண்டிய கட்டயமாகிறது.

GDS க்கு எதிரான நிலைப்பாடு 
             Strike demands ல் உள்ள  பிற கோரிக்கைகள் பற்றி பார்ப்போம். கீழ் கண்டவை GDS கேடருக்கு கொடுத்த உத்திரவாதமாகும்.
1 . பண பரிமாற்ற அளவு BPM களுக்கு 20000 தில் இருந்து 10000 மாக ஒரு வாரத்தில் குறைக்கப்படும்.
2 . GDS போனஸ் உச்ச வரம்பு மாற்றிட புதிய விதியை MOF க்கு அனுப்புதல்.
3 . வேலை நேரம் குறைந்தாலும் ஏற்கனவே வாங்கிய தர்க்க குறைக்கப்படாது.
ஆனால் நடந்தது என்ன? IFA மேற்கண்டவற்றை நிராகரித்தது.  இது குறித்து 27 .12 .11  ல் Member  (P ) யிடம்மீண்டும் விவாதித்தோம்.  ஆனால் இவற்றிக்கு உத்திரவாதம் தம்மால் அளிக்க முடியாது என எதிரிமரையான நிலையை எடுத்தார்கள்.

GDS குடும்பங்களுக்கு நிவாரணம் இல்லை 
                    கருணை அடிப்படையில் வேலை வழங்க GDS வரிசுதரர்களுக்கு degree படித்திருந்தால் 25 points கொடுப்பதாக முடிவெடுத்துள்ளனர்.  ஒரு GDS என்பவர் தன் வாரிசை Degree படிக்க வைப்பது என்பது எத்தனை தூரம் சாத்தியமாகும் அதுவும் 10 ம் வகுப்பு குறைந்த பட்ச படிப்பு உள்ள GDS பதவிக்கு  Degree ஏன் ? 50 % மதிப்பெண்கள் என்ற அவலநிலை ஏன்? GDS இறந்தவுடன் தனது வாரிசுக்கு வேலை என்ற சமூக நீதி செயல் படுத்தப்பட்ட நிலை போய் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் திணித்து GDS வாழ்வில் விளையாடுகின்றனர்.

அரை நுற்றாண்டு சாசனம் குளிர்சதனக்கிடங்கில்
                 Postman தேர்வில் GDS களுக்கு 100 % நேரடி நியமனம் என்ற 50 ஆண்டு நடைமுறையில் உள்ள நிலையை தற்போது 25 % மட்டுமே என்று மாற்றி அமைத்து GDS களின் வாழ்வில் விளையாடுகிறார்கள்.  25 % நியமனம் GDS களின் சீனியரிட்டி அடிப்படையில் என்பதை தூக்கி எறிந்துள்ளார்கள்.  ஜூலை 2011 Member அவர்கள் இதற்கு உத்திரவாதம் கொடுத்தார்கள்.  ஆனால் Member (P) 27.12.11 ல் இது சத்த்யமில்லை என்று மறுக்கிறார்.  NREGIS குறியீடு இதுவரை முறை படுத்தப்படவில்லை. மேற்சொன்னவை மூலம் எல்லா எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட GDS பற்றிய எல்லா உத்திர வாதங்களும் பின்னர் வந்த அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

Casual labourers அவலநிலை 
                6.7.2011 ல் நடந்த கூட்டத்தில் எழுத்து பூர்வமாக 1993 க்கு முன் உள்ள அனைத்து CL களுக்கும் prorate basis ல் பணம் செட்டில் செய்யப்படும் என்று வாக்கு கொடுக்கப்பட்டது.  ஆனால் இதுவரை செயல் படுத்தப்படவில்லை.  கேட்டால் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.  அதன் பரிந்துரைகள் வந்ததும் இதுகுறித்து நிலைப்பாடு எடுக்கப்படும் என்று சொல்கிறார்கள்.  ஊழியர்கள் பக்கம், இந்த கமிட்டியில் உறுப்பினர்கள் இல்லை.  அதேபோல் Contigent தோழர்களுக்கு GDS பதவி கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
JCM 
JCM நடைமுறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் பருவமுறை கூட்டங்கள் நடைபெற வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வோர் தொழிற் சங்கங்களிடமும் கூட்டம் நடை பெற வேண்டும்.  ஆனால் ஆறு வருடங்கள் ஆகியும் பருவ முறை கூட்டங்கள் இது வரை நடை பெறவில்லை.  ஆகஸ்ட் 2010 ஒரே ஒரு கூட்டம் நடந்துள்ளது.  அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கூட நடைமுறை படுத்தாமல் இன்றுவரை உள்ளது.  உதாரணத்திற்கு 
1 . PO&RMS Accountant களுக்கு Spl .Allowance ஐ சம்பள நிர்ணயம் செய்ய கர்நாடக உயர் நீதி மன்றம் உத்திரவு அளித்தும் மேலும் அணைத்து துறை தலைவர்களின் opinion கேட்டு இன்று வரை கிடப்பில் போட்டுவிட்டு உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் SLP போடப்பட்டுள்ளது 
2 . ஐந்தாவது ஊதியக்குழு பரிந்துறையான Security Bond/Fidelity Bond SPM மற்றும் பணம் பட்டுவாடா செய்யும் ஊழியர்களிடம் பெறப்படவேண்டிய அவசியம் இல்லை என்ற பரிந்துரை இந்த நாள் வரை அமுல் படுத்தாமல் தேவைஇல்லாமல் ஊழியர்களிடம் பெரிய தொகையை பிரிமியமாக ஒவோர் வருடமும் செலவழிக்க வேண்டியுள்ளது.
3. Nanda singh Punjab circle க்கு சாதகமாக Dte. order No.2-2/88-PE-I dt.1.12.1992 ல் கொடுத்த உத்தரவை அதே நிலையில் உள்ள இன்றைய PO&RMS Accountant களுக்கும் செயல்படுத்த (Defunct scale) கோரிக்கை வைத்தும் இதுவரை இலாகா நடைமுறை படுத்தவில்லை.
4. கட்டாயப்படுத்தி குடியிருப்பு வழங்குகிறார்கள் ராஜஸ்தான் மாநிலத்தில்.
5. புதிய பென்ஷன் திட்டம் 2004 கீழ் உள்ள ஊழியர்களுக்கு தங்களின் கணக்கில் உள்ள விபரங்களை இதுவரை வழங்கவில்லை.
6. Accountant தேர்ச்சி பெறாமல் அக்கௌன்டன்ட் பணியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்காமை.
7. Postman களுக்கு ஐந்தாவது ஊதியக்குழுவில் அதிகப்படியாய் ஊதியம் நிர்ணியத்ததை Accountant களிடம் பிடித்தம் செய்தல்.
8. Minor penalty உள்ளவர்களை SPM ஆக Single Hand / Double Hand அஞ்சலகங்களில் பணிசெய்ய உள்ள தடை நீக்க.
9. துறை தேர்வுகள் நடத்தும் அனைவருக்கும் Honorarium உயர்த்தி வழங்காமை.
10. உணமுற்றோரை IPO தேர்வுக்கு எழுத அனுமதி மறுப்பது.
11 .  அனைத்து HSG I பதவிகளை ஜெனரல் லைன் க்கு கொண்டுவருவது.
12. காசாளர் இல்லாத அலுவலகங்களில் SPM களுக்கு பண பரி மாற்றத்திற்கான சிறப்பு ஊதியம் வழங்குதல்.
மேற்சொன்ன அனைத்து கோரிக்கைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளது. இதுவும் நமது அதிருப்திக்கு காரணமாகும்.

No comments:

Post a comment