NFPE

Saturday, 27 July 2013

WHAT'S THE ASSESSMENT OF OUR RULERS ? SHALL WE KNOW ?

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! ஏழாவது ஊதியக் குழு உடன் அமைத்திட வேண்டும் , 50% பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட வேண்டும் என்று கோரி  நாம் போராடி வரக்கூடிய நேரத்தில் , நம்மை ஆளக்கூடிய அரசாங்கம் , அதன் அங்கமாக இருக்கக் கூடிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்  எந்த நிலையில் சிந்திக்கிறார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கடமை  ஒரு அரசு ஊழியர் என்கிற முறையில் நமக்கு இருக்கிறது .  இது குறித்து பத்திரிகைகளில் வந்த சில செய்திகளை  உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம் ...  படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுக்குத் தெரிவிக்கவும் ..

குறிப்பு :  வறுமைக் கோடு என்ற அரசாங்கத்தின் அளவீட்டை வைத்து  மானிய விலைகளில் பொருள்கள்  நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப் படுகின்றன . இது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இனி வழங்கப் படும் . அதாவது  கெரசின், அரிசி, கோதுமை,சர்க்கரை, பாமாயில் , சமையல் எரிவாயு  போன்றவை ஆகும் .

வறுமைக் கோடு என்பது தற்போது மாற்றி அமைக்கப் பட்டுள்ளது . அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.27.20 க்கு மேல் கிராமப் புறத்திலும் , நாள் ஒன்றுக்கு ரூ. 33.33 க்கு மேல்  நகரப் புறத்திலும் வருமானம் உள்ளவர்கள் இனி வறுமைக் கோட்டுக்கு கீழ் வர மாட்டார்கள். அதாவது  இனி தினப்படி பிச்சை எடுப்பவர்கள் கூட வறுமைக் கோட்டுக்கு மேல் தான் வருவார்கள் . அப்படியானால்  அரசு ஊழியர்களின்  ஊதிய நிலையின்  படி மத்திய அரசின் பார்வையில்   நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்  என்பதை  நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் ! வாழ்க  வளமுடன் !

ஒரு ரூபாயில் ஒரு வேளை முழு உணவு சாப்பிடலாம்......மத்திய அமைச்சர் திரு பாரூக் அப்துல்லா .

ஐந்து ரூபாயில் திருப்தியாக ஒரு வேளை உணவு சாப்பிடலாம் .. ரஷீத் மசூத், காங்கிரஸ்  M.P.

பனிரண்டு ரூபாயில் ஒரு வேளைஉணவு தாராளமாக சாப்பிடலாம் .. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்  ராஜ் பாப்பர் . 
******************
பார்க்க பத்திரிக்கை செய்தி :-
TIMES OF INDIA --- 26 th July 2013
New Delhi: After Raj Babbar and Rasheed Masood, now union Minister for New and Renewable Energy Farooq Abdullah Friday has said that one can have full meal for Re.1.

"One can eat for Re.1, if desired. It depends on the common man how much they can afford and they have to manage in that only," Abdullah told reporters on the ongoing debate on poverty.

Congress leader Rasheed Masood on Thursday claimed that "one can eat well" for Rs.5 in the national capital, a day after Congress spokesperson Raj Babbar said that one can have a full meal for Rs.12 in Mumbai.

"You can eat well for Rs.5 in the Jama Masjid area of Delhi," Masood, a Rajya Sabha member from the Congress, told reporters here.

The comment has opened floodgates of criticism with the Bharatiya Janata Party (BJP) saying the government is just trying to perpetuate poverty.

The Planning Commission Tuesday said poverty ratio in the country had declined to 21.9 percent in 2011-12 from 37.2 percent in 2004-05 on account of increase in per capita consumption.

The commission estimated the 2011-12 national poverty line at Rs.816 per capita per month for rural areas and Rs.1,000 per capita per month for urban areas.

This would mean that the people whose daily consumption of goods and services exceed Rs.27.20 in villages and Rs.33.33 in cities are not poor.
************************************
இது தொடர்பாக இந்து நாளிதழில்  விவாதத்தில் வந்த முந்தைய செய்தியையும் உங்களுக்கு நினைவூட்டு கிறோம்.

Even as a controversy rages over the Rs. 32 per capita per day poverty line, Planning Commission Deputy Chairman Montek Singh Ahluwalia has said “it is not all that ridiculous” in Indian conditions.

“The fact is that Rs. 4,824 per month for a family [of five] to define poverty is not comfortable but it is not all that ridiculous in Indian conditions,” Mr. Ahluwalia said in a letter to Attorney-General Goolam Vahanvati.

இறுதிச் செய்தி : இதற்காக சம்பந்தப் பட்டவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள் (மாண்டேக் சிங்  அலுவாலியா அல்ல )

No comments:

Post a Comment