NFPE

Wednesday, 25 September 2013

7th CENTRAL PAY COMMISSION

Announced by the Government

7th pay commission for central government employees announced. (effect from January 1, 2016)

ANNOUNCEMENT OF 7TH CPC IS ONE STEP FORWARD AND IT IS THE VICTORY OF THE WORKERS WHO FOUGHT FOR IT.

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 7வது ஊதியக் குழுவை நியமித்து பிரதமர் மன்மோகன்சிங் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 7வது ஊதியக் குழு அமைத்து அதன் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் நீண்டகால கோரிக்கை. இந்த ஊதியக் குழுவில் வேறு பல ஊழியர்களையும் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஐநா பொதுச்சபை கூட்டத்துக்கு நியூயார்க் செல்வதற்கு முன்பாக 7வது ஊதியக் குழுவை நியமித்து பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஊதியக் குழு 2 ஆண்டுகாலம் செயல்படும். இக் குழுவின் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர். அண்மையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/7th-pay-commission-central-government-employees-announced-184111.html

No comments:

Post a Comment