50% சத பஞ்சப்படி இணைப்பை வெல்வோம் !
இடைக்கால நிவாரணம் நிச்சயம் நாம் பெறுவோம் !
GDS ஊழியர்களை ஊதியக் குழு வரம்புக்குள்
நிச்சயம் கொண்டு வருவோம் !
GDS ஊழியருக்கு அரசு ஊழியருக்கு இணையான தகுதி பெறுவோம் !
5 கட்ட பதவி உயர்வு நிச்சயம் பெறுவோம் !
1.1.2004 க்குப் பின்னர் பணியில் சேர்ந்தவருக்கும் முந்தைய ஒய்வூதியமே
நிச்சயம் பெறுவோம் !
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறுவோம் !
மத்திய அரசு ஊழியர்களுக்கு தடைகளற்ற, பணம் செலுத்தாத
நேரடி மருத்துவம் பெறுவோம் !
அனைத்து காலியிடங்களையும் உடன் நிரப்பிடச் செய்வோம் ! தேவைக் கேற்ற புதிய பதவிகளை உருவாக்கிடப் பெறுவோம் !.
பணியில் இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பதவி நியமனம் முழுமையாகப் பெறுவோம் !
ஆட்குறைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமனம் செய்வது ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கப் பெறுவோம் !
வேலை நிறுத்தம் செய்திடும் உரிமையை சட்டமாக்குவோம் !
நடுவர் மன்றத் தீர்ப்புகளை அமலாக்குவோம் !
OTA, NIGHT DUTY ALLOWANCE, CLOTHING RATES உயர்த்திப் பெறுவோம் !
தொழிற்சங்கத்தினரை பழி வாங்கும் நடவடிக்கைகளை
தடுத்து நிறுத்திடுவோம் !
இவையெல்லாம் பெறவேண்டுமானால் ஒன்று பட்டு போராடினால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம்.
தேர்தல் தேதி அறிவித்தபின் அரசு ஊழியர்களுக்கு எந்தவித பயனும் அறிவித்திட இயலாது. எனவே அதற்கு முன்னர் நாம் ஒன்று பட்டு நம் கோரிக்கைகளை அரசின் செவிகளுக்கு கொண்டு சென்றிட வேண்டும். அதற்கு மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் திரண்டெழுந்து போராடும் போது , அதன் முக்கிய பகுதியான நம் அஞ்சல் துறையில் போராட்டம் தீவிரப் படுத்தப் படவேண்டும்.
ஆகையால்
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே ! இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது ! இன்றில்லையேல் என்றுமே இல்லை ! தேர்தல் வந்துவிட்டால் எதுவுமே இல்லை !
ஒன்று படுவோம் ! போராடுவோம் ! போராடுவோம் !
வெற்றி பெறுவோம் ! வெற்றி கிட்டும் வரை போராடுவோம் !
இறுதி வெற்றி நமதே !
போராட்ட வாழ்த்துக்களுடன்
NFPE, Srirangam
No comments:
Post a Comment