முதியோர் தொகையினை, வங்கிகள் பட்டுவாடா செய்வதில் குளறுபடி, மதுரை தினமலர் செய்தி
முதியோர் உதவித் தொகை மற்றும் பல நலத் திட்டங்களின் கீழ் மாநிலம் முழுவதும், நாட்டின் மிகப்பெரிய சேவை நிறுவனமான அஞ்சல் துறையில் வழங்கப்பட்டு, பயனீட்டாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்காரர்களால் பட்டுவாடா செய்யப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக அவற்றில் ஒரு பகுதியை சோதனை முயற்சியாக வங்கிகளின் மூலம் தமிழக அரசால் பட்டுவாடா செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி தள்ளாத வயதிலும் மற்றும் ஊனமுற்ற பல பயனீட்டாளர்கள் பட்டுவாடா செய்யும் இடத்திற்கு அவர்களாகவே பணம் செலவழித்து சென்று பெறுதல், ரேகை பெறுவதில் சிக்கல், கணக்குப்புத்தகம் பெறுவதில் சிக்கல் போன்ற பல முரண்பாடுகளினால் பயனீட்டாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.வங்கிகளின் தற்போதைய அடிப்படை வசதிகளைக் கொண்டும், அதன் ஆட்பற்றாக்குறை காரணமாகவும் திறம்பட பட்டுவாடா செய்ய முடியாமல், வங்கி ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவற்றையெல்லாம் வெளிக்கொணரும் விதமாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உதவித்தொகை பட்டுவாடா செய்வது குறித்த வங்கி ஊழியர் கூட்டம் பற்றிய தினமலர் செய்தி 04.10.12 இங்கே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பயனீட்டாளர்கள் அதிருப்திக்கு உள்ளாகி, மீண்டும் அஞ்சல் துறையே திறம்பட உதவித்தொகை பட்டுவாடா செய்யும் நிலை மீண்டும் உருவாகும் என்று அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தினமல்ர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment