CONCILIATORY MEETING BEFORE LABOUR COMMISSIONER ON 15.10.2012
அன்புத் தோழர்களே !
தோழியர்களே !
15.10.2012 அன்று
தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் அழைக்கப் பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ,
நிர்வாகத் தரப்பில் CPMG TN சார்பாக முதலில் , ஏற்கனவே 05.10.2012 அன்று ஊழியர்
தரப்புடன் பேச்சு வார்த்தை நடைபெற்று விட்டதாகவும் , அதன் அடிப்படையில் MINUTES
அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை தொடங்கி விசாரணை நடந்து வருவதாகவும்
ஆகவே இதனையும் மீறி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும்
ஒரு கடிதம் அளிக்கப்பட்டது . மேலும் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஏற்கனவே ஒப்புக்
கொண்டிருந்தாலும் இந்த சூழ்நிலையில் இனி பேச்சு வார்த்தை நடத்திடவேண்டாம் என்றும்
நிர்வாகம் முடிவாக இருந்தது.
நாம் ஏற்கனவே
அளித்த MINUTES மீதான கடிதத்தை சுட்டிக் காட்டி , எவ்வளவு தூரம் தவறான தகவல்கள்
நிர்வாகத்தால் அளிக்கப் படுகின்றன என்பதை விளக்கினோம் . மேலும் விசாரணை எங்கு
நடைபெறுகிறது என்பது குறித்து எவருக்காவது தகவல் தெரியுமா ? அப்படி ரகசிய
விசராணை நடைபெற்றால் அது சரியா ? இந்த விபரம் அறிவிக்கையாக
வெளியிடப்படாமல் விசாரணை அதிகாரி தனக்கு சாதகமான சாட்சியங்களை மட்டும் கூட்டி
விசாரிக்கிறாரா ? எவர் எவரிடம் விசராணை செய்தார் என்றெல்லாம் நாம் எழுப்பிய
கேள்விகளுக்கு நிர்வாகத் தரப்பில் சரியாக பதில் அளிக்க முடியவில்லை . இதனால் கோபம்
அடைந்த தொழிலாளர் நல ஆணையர் " உங்கள் செய்கை வேலை நிறுத்தத்தை நிறுத்துவதற்கு
பதில் தூண்டுவதாக உள்ளது . இப்படியெல்லாம் செய்தால் CABINET SECRETARY அளவில்
REPORT அனுப்ப வேண்டியிருக்கும்" என்று நிர்வாகத் தரப்பை எச்சரித்தார். விசாரணை
என்பது வெளிப்படையாக அறிவிக்கப் பட்டு அனைவருக்கும் புகார் அளிக்க வாய்ப்பு
அளிக்கப் படவேண்டும் என்றும் , அதனை புகாருக்குள்ளான அதிகாரியின் CADRE க்கு
மேலான பதவியில் உள்ளவர் தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் , விசாரணையின் எல்லை
வரம்பை விரிவு படுத்தி TERMS OF REFERENCE அளிக்கப் படவேண்டும்
என்றும் நிர்வாகத்தை அறிவுறுத்தினார்.
உடன் CPMG
அவர்களை தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தையை அறிவிக்க வேண்டும் என்று
உத்தரவிட்டார் . எனவே வேறு வழியில்லாமல் பேச்சு வார்த்தைக்கு நேரம் கேட்டுப்
பெறப்பட்டு அறிவிக்கப் பட்டது . இதன் படி 16.10.2012 அன்று காலை 10.30 மணியளவில்
மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற வுள்ளது .
தோழர்களே !
நிர்வாகத்தின் போக்கு உங்களுக்கு புரிந்திருக்கும் .
வேலை நிறுத்த
அறிவிப்பில் பேச்சு வார்த்தை ஒரு பகுதி.
அது JCA
தலைவர்களின் வேலை.
உங்கள் வேலை ?
போரின்
முடிவுக்காக கை கட்டி காத்திருக்கலாமா ?
போர்க்களத்தில்
இறங்கி விட்டால் , ஆயுதத்தை மடக்கி வைத்து முடிவு இன்று வரும், நாளை வரும்
என்று வேடிக்கை பார்க்கலாமா ?
உங்களின் போராட்ட
தயாரிப்பின் வீச்சு தானே
தலைவர்களின்
பேச்சு வார்த்தையில் பலம் சேர்க்கும் ?
MI NUTES COPY OF
THE CONCILIATORY TALKS DT. 15.10.2012
No comments:
Post a Comment