அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! நமது CPMG அவர்களிடம் நாம் ஏற்கனவே கடந்த 24.12.2014 அன்று சிறப்பு நேர்காணலுக்கு நேரம் அளித்திட வேண்டி கடிதம் அளித்திருந்தோம். ஆனால் அவர் CAMP சென்று விட்ட காரணத்தாலும் தொடர்ந்து விடுப்பில் சென்ற காரணத்தாலும் அவரது வழிகாட்டுதலின்படி இன்று (30.12.2014) நமது CPMG (I/C) திரு. S .C . BARMMA அவர்களைச் சந்தித்து தேங்கிக் கிடக்கும் பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் குறித்து தனித்தனியே கடிதங்கள் அளித்து பேசினோம்.
இந்த நேர்காணலில் நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி அவர்களுடன் , மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், மாநில நிதிச் செயலர் தோழர். A வீரமணி , மற்றும் அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேட்டி சுமூகமாக நடைபெற்றது.
இதில் பேசப்பட்ட சில முக்கியமான பிரச்சினைகள், அதன் மீது அளிக்கப்பட்ட பதில் (சுருக்கமாக) ஆகியவைகளை கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கிறோம். இன்று அதிகம் செய்திகள் வெளியிட்டிருப்பதால் , குறிப்பாக JCM MINUTES அளிக்கப் பட்டிருப்பதால் , நம்மால் அளிக்கப் பட்ட கடிதங்களின் நகல்களை எதிர்வரும் ஜனவரி 01 ஆம் தேதி பிரசுரிக்கிறோம்.
1. பொங்கல் பண்டிகை காலத்தில் PTC மதுரையில் வைக்கப் பட்டிருக்கும் MACP பயிற்சி வகுப்புகளை மாற்றி அமைக்க வேண்டி .
DIRECTOR PTC யுடன் கலந்து நாளை முடிவெடுக்கப்படும்.
2. LSG பதவி உயர்வு அளிப்பதில் கால தாமதம் குறித்து
DTE க்கு இது குறித்து உடன் முடிவு அளித்திட மூன்றாவது D.O .
REMINDER அளிக்கப் பட்டுள்ளது . உரிய உயர் அதிகாரியுடன் CPMG
தொலைபேசியில் தொடர்புகொண்டு வேண்டியுள்ளார்.
3. HSG I பதவிகளை புதிய RECTT RULES அடிப்படையில் நிரப்பிட வேண்டி
ஆவன நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.(JCM DC MINUTES பார்க்க )
4. FOREIGN POST AIR COMPLEX இல் புதிதாக துவங்கியுள்ள PARCEL
BOOKING அலுவலகத்தை உரிய TRANSACTION இல்லாததால் உடன்
மூடுமாறு வேண்டி
உடன் பரிசீலிக்கப்படும்.
5. CASUAL LABOUR ஞாயிறு ஊதியம் மற்றும் DA வேண்டி
பரிசீலனையில் உள்ளது. ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
6. அனைத்து தேர்வு முடிவுகளிலும் ABNORMAL DELAY குறித்து
உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
7. GDS BPM களின் INITIAL FIXATION OF PAY குறித்து
பிரச்சினை உள்ள கோட்டங்களில் இருந்து அறிக்கை பெறப்பட்டு
உடன் ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..
8. பாதிக்கப் பட்ட வாணியம்பாடி அஞ்சல் அதிகாரி குறித்து
அவரது மனு மீது உடன் ஆவன நடவடிக்கை எடுக்கப்படும்.
9. பாதிக்கப்பட்ட அம்பத்தூர் கணக்காளர் குறித்து
அவரது மனு CHIEF PMG வந்தவுடன் அவரது பார்வைக்கு அளிக்கப்படும்
No comments:
Post a Comment