NFPE

Wednesday, 16 July 2014

அதிக பலன் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்!!


அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களை ஊக்கப்படுத்தும் வகையில் 80சி பிரிவின் கீழ் பலன்களைக் கொடுத்து, நாட்டின் சேமிப்பை அதிகரிக்க மிகச்சிறந்த வழியைக் காண்பித்திருக்கிறார் நிதியமைச்சரான அருண் ஜேட்லி. 2014ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு, நம்மைக் கவரும் வகையில் காத்திருக்கும் சில அஞ்சலக திட்டங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.....
தேசிய சேமிப்பு பத்திரம்:
சிறிய முதலீட்டாளர்களுக்கு மேலும் பலன் தரும் வகையில் காப்பீட்டு வசதியுடன் கூடிய தேசிய சேமிப்புத் பத்திரத்தை இந்த பட்ஜெட் அறிவித்துள்ளது. இதன் உண்மையான பலன்கள் இன்னும் அறியப்படவில்லை. எனினும், இந்த தேசிய சேமிப்பு பத்திரம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகைகளை அளித்து வருகிறது, மேலும் இப்பொழுது இந்த சலுகையுடன் காப்பீடும் சேர்ந்துள்ளதால், இது இந்தியாவின் வரி குறைவான மற்றும் பாதுகாப்பான திட்டமாக உருமாறியுள்ளது.
கிஸான் விகாஸ் பத்திரம்:
மிகவும் பிரபலமானதாக இருந்த, கிஸான் விகாஸ் பத்திரம் (KVP) மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. KVP-யில் 8 வருடங்கள் 7 மாதங்களில் நாம் முதலீடு செய்க பணம் இரண்டு மடங்காகி விடும். இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு வட்டி விகிதத்தை அரசாங்கம் நிர்ணயிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இது மற்றுமொரு சிறப்பான வரி சேமிப்புத் திட்டமாகும். அதுவும் அரசு சார்ந்ததாக இருப்பதால், பாதுகாப்பைப் பற்றி கவலை பட வேண்டியதும் இல்லை.
பொது சேமநல நிதியின் அளவு உயர்வு:
இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் 1 இலட்சமாக இருந்த பொது சேமநல நிதியின் உயர் அளவு, 1.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 80சி பிரிவின் கீழ், வரி இல்லாத வட்டியும் தரக்கூடிய திட்டமாதலால் கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யலாம்.
80சி பிரிவின் உயர் அளவு அதிகரிப்பு :
வரி விலக்கு அளவை 1 இலட்சத்திலிருந்து 1.5 இலட்சமாக மத்திய பட்ஜெட் உயர்த்தியுள்ளது. அஞ்சலகத்தில் வழங்கப்படும் பெரும்பால சிறு சேமிப்புத் திட்டங்களான NSC, PPF மற்றும் KVP ஆகியவற்றிற்கு 80சி பிரிவின் சலுகைகள் பொருந்தும். இதன் மூலம் அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் கவர்ச்சியான திட்டங்களாக மாறியுள்ளன.

No comments:

Post a Comment