NFPE

Sunday 25 May 2014

தபால் ஊழியர்களின் மறுபக்கம்:

தபால் ஊழியர்களின்
மறுபக்கம்:
     சமூக அக்கறையுடன்
சேவையாற்றும் தபால் ஊழியர்கள் நாள் தோறும் சந்திக்கும் சவால்களும்,படும் சிரமங்களும் ஏராளம்...
தெளிவான முகவரி 
இல்லாத கடிதங்கள்,
முதியோர் உதவித் தொகை பட்டுவாடா செய்தல்,நாய்த் தொல்லை,தினமும் சைக்கிள் சவாரி அலைச்சல்,கிராமப் பகுதிகளில் வயல் வெளி
முள்,காடு,மலை எனப்
பாராமல் காற்று, மழை,வெயில் என ஒவ்வொரு நாளும் சவால்கள் நிறைந்த பயணத்தை தபால்காரர்கள் மேற்கொள்கின்றனர்...
E.D (GDS)ஊழியர்கள்
தபால்துறை ஊழியர்கள் அனைவரும் மத்திய அரசு ஊழியர்கள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அது உண்மையல்ல. அஞ்சல் துறையில் இந்தியா முழுவதும் 6 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
அவர்களில் 2.5 லட்சம் பேர் மட்டுமே நிரந்தர இலாக்கா ஊழியர்கள்.
மீதி 3.5 லட்சம் பேர் இ.டி ஊழியர்கள் (Extra
Departmental Agents)  
அதாவது,பணி நிரந்தரமற்றவரகள்...
E.D ஊழியர்களுக்கு தினமும் 4 மணி நேரம் மட்டுமே வேலை என்று சொல்லப் படுகிறது. அதன் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால்,அவர்கள், பல மணி நேரமக பணி செய்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் குறைந்தப் பட்சம் 7-8 கிராமங்களுக்கு செல்கிறார்கள்.நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் இவர்களுடைய மாத ஊதியம் ₹5000 மட்டுமே
 விடுமுறை கிடையாது.
சம்பள உயர்வு கிடையாது.போனஸ் கிடையாது.தொப்பி கிடையாது.சீருடை கிடையாது.மழைக் கோட் கிடையாது. எதுவும்  கிடையாது..
      பணி நிரந்தரம் என்கிற அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படாத வரையில்,பெருமை மிகு
இந்திய அஞ்சல் துறைக்கு அதுவொரு கரும்புள்ளியாகவே இருக்கும்...
நன்றி: புதியதலைமுறை
வார இதழ்.


தபால் ஊழியர்களின் மறுபக்கம்:

சமூக அக்கறையுடன் சேவையாற்றும் தபால் ஊழியர்கள் நாள் தோறும் சந்திக்கும் சவால்களும்,படும் சிரமங்களும் ஏராளம்...
தெளிவான முகவரி இல்லாத கடிதங்கள், முதியோர் உதவித் தொகை பட்டுவாடா செய்தல்,நாய்த் தொல்லை, தினமும் சைக்கிள் சவாரி அலைச்சல்,கிராமப் பகுதிகளில் வயல் வெளி, முள்,காடு,மலை எனப்
பாராமல் காற்று, மழை,வெயில் என ஒவ்வொரு நாளும் சவால்கள் நிறைந்த பயணத்தை தபால்காரர்கள் மேற்கொள்கின்றனர்...


E.D (GDS)ஊழியர்கள்


தபால்துறை ஊழியர்கள் அனைவரும் மத்திய அரசு ஊழியர்கள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. அஞ்சல் துறையில் இந்தியா முழுவதும் 6 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
அவர்களில் 2.5 லட்சம் பேர் மட்டுமே நிரந்தர இலாக்கா ஊழியர்கள்.
மீதி 3.5 லட்சம் பேர் இ.டி ஊழியர்கள் (Extra Departmental Agents) அதாவது,பணி நிரந்தரமற்றவரகள். E.D ஊழியர்களுக்கு தினமும் 4 மணி நேரம் மட்டுமே வேலை என்று சொல்லப் படுகிறது. அதன் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால்,அவர்கள், பல மணி நேரமக பணி செய்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் குறைந்தப் பட்சம் 7-8 கிராமங்களுக்கு செல்கிறார்கள்.நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் இவர்களுடைய மாத ஊதியம் ₹5000 மட்டுமே விடுமுறை கிடையாது. சம்பள உயர்வு கிடையாது.போனஸ் கிடையாது.தொப்பி கிடையாது.சீருடை கிடையாது.மழைக் கோட் கிடையாது. எதுவும் கிடையாது..
பணி நிரந்தரம் என்கிற அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படாத வரையில்,பெருமை மிகு இந்திய அஞ்சல் துறைக்கு அதுவொரு கரும்புள்ளியாகவே இருக்கும்...


நன்றி: புதியதலைமுறை வார இதழ்.

STAY ORDERS OBTAINED BY DIVL. SEC, AGAINST THE IRREGULAR RT ORDERS OF SPOS., SALEM WEST

முறைகேடான சுழல் மாறுதல் உத்தரவுக்கு நீதிமன்ற இடைக்கால தடை !
சேலம் மேற்கு கோட்டத்தில்  இலாக்கா விதிகளை மீறி, சுழல் மாறுதல் செய்வதற்கான இலாக்காவின்  வழி காட்டு நெறிமுறைகளை மீறி ,  தன்னிச்சையாகவும் , தான் தோன்றித்தனமாகவும் INTEREST OF SERVICE என்ற பெயரில் 15 தோழர்/ தோழியர்களுக்கு  சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரால் அளிக்கப் பட்ட இட மாறுதல் உத்திரவை எதிர்த்து , 

சேலம் மேற்கு அஞ்சல் மூன்று கோட்டச் செயலரும் , 
நமது மாநிலச் சங்கத்தின் மேற்கு மண்டலச் செயலருமான 
தோழர். C. சஞ்சீவி அவர்களால்  

சென்னை மத்திய தீர்ப்பாயத்தில் தொடரப் பட்ட வழக்கில்  இன்று இடைக்கால தடை உத்திரவு வழங்கப்பட்டுள்ளது என்பதை  தோழர். சஞ்சீவி அவர்கள் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப் பட்ட சேலம் மேற்கு கோட்ட தோழர்/ தோழியர்களுக்கு இது நிச்சயம்  மகிழ்வை ஏற்படுத்தும்.  தன் தோழர்களின்  பாதிப்புகளைக் களைந்திட அனைத்து முயற்சிகளையும்  தொடர்ந்து எடுத்து அதில் வெற்றியும் பெற்று வரும் தோழர். சஞ்சீவி அவர்களின்  விடா முயற்சியும் தன்னம்பிக்கையும்   தொழிற்சங்கத்தில் இளைய தோழர்களுக்கு நிச்சயம்  நம்பிக்கையை ஏற்படுத்தும். 

அவர்தம் தொழிற்சங்க வாழ்க்கை பல இளைய தோழர்களுக்கு வழிகாட்டுமுகத்தான் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. 

அவரது  பணி தொடரட்டும் !  மேலும் சிறக்கட்டும் ! 
அவருக்கு நம் மாநிலச் சங்கத்தின்  மனமார்ந்த பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !

PACKING OF PARCELS--- IPO RULES AMENDED

 "A parcel wrapped with cloth should invariably either be packed in a carton or be covered with paper or plastic wrapper over the cloth wrapping so that the bar code sticker can be properly affixed on the parcel for track and trace purpose”. 

To view the Gazette notification ,  CLICK HERE

Saturday 17 May 2014

GDS DEPARTMENTALIZATION AND INCLUSION IN 7TH CPC – DELHI HIGH COURT ORDER DATED 7TH MAY 2014 – AN UPDATE


IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
  
  W.P.(C) 168/2014
  
NATIONAL FEDERATION OF POSTAL
             EMPLOYEES AND ANR                          ..... Petitioners
  
  Through: Mr. Uday Gupta and Mr. M.K. Tripathi, Advs.
  
  versus
  
   UNION OF INDIA                                                 ..... Respondent
  
  Through: Dr. Ashwini Bhardwaj, Adv.
  
  CORAM:
  
   HON'BLE MR. JUSTICE RAJIV SHAKDHER
  
   O R D E R
  
   07.05.2014
  
    
1. Dr. Ashwini Bhardwaj enters appearance on behalf of respondents.He seeks and is granted six weeks to file a counter affidavit.
  
2. Rejoinder, if any, be filed before the next date of hearing.
  
3. To be noted, this matter has been transferred to this Court by virtue of order dated 13.12.2013 passed by the Supreme Court in Writ Petition Civil No.1003/2013 .
  
4. A perusal of paragraph 3 of the order is indicative of the fact that the Supreme Court in order to avoid multiplicity of proceedings has transferred the matter to this Court.

5. Counsel for the petitioner is advised to ascertain as to whether any writ petition has been filed in any other High Court and, if that be so, whether the aforementioned order of the Supreme Court has been brought to the notice of the concerned High Court.

W.P.(C) 168/2014 page 1 of 2

6. Counsel for the petitioner shall do the needful before the next date of hearing.

  
7. Renotify on 19.9.2014.   
  
  
  RAJIV SHAKDHER, J
  
  MAY 07, 2014

Friday 16 May 2014

கூகுள், யாஹூவுக்கு இணையாக பி.எஸ்.என்.எல். இ-மெயில் அறிமுகம்!

கூகுள், யாஹூ இ-மெயிலுக்கு இணையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய இ-மெயில் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். புதிய இ-மெயில் சேவையை வரும் சனிக்கிழமை (17ஆம் தேதி) அறிமுகப்படுத்துகிறது. இந்த இ-மெயில் சேவையை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ‘டேட்டா இன்போசிஸ்’ ஐ.டி. நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் யாஹூ, கூகுள், ரீடிஃப் போன்ற இ-மெயிலில் இல்லாத வசதிகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளதாக டேட்டா இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
மேலும், ரைட்ஸ் மேனேஜ்மெண்ட் என்ற வசதியில் மெயிலை அழிப்பது, பார்வர்டு செய்வது, ரிப்ளை மற்றும் பிரிண்ட் எடுப்பதை இ-மெயில் அனுப்புவர்தான் கட்டுப்படுத்த முடியும். அதேபோல் நாம் விரும்பிய நேரத்தில் மெயில் சென்றடையும் வகையில் ஷெடியூல் செய்தும் அனுப்பலாம். இந்த இ-மெயில் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும். இந்த இ-மெயிலில் சேமித்து வைக்க 1 ஜி.பி. வரை விர்ச்சுவல் ஸ்டோரேஜூம் வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெயில்கள் வரை அனுப்பவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இ-மெயிலை லாக் இன் செய்யும்போது, ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டியதில்லை. இதற்காக டூவல் ஆத்தென்டிகேஷன் என்ற பாதுகாப்புடன் கூடிய ஓ.டி.பி. வழங்கப்படடுள்ளது எனவும் டேட்டா இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்யும் இந்த இ-மெயிலை முதலில் பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் இணையதள இணைப்பு உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கவும், மற்றவர்களுக்கு கட்டண முறையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணையதள சேவை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இ-மெயில் சேவைகளுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

7th Central Pay Commission invited Com. M. Krishnan, Secretary General, NFPE for interaction on postal employees related issues.

 

Sunday 11 May 2014

FinMin nixes India Post's plan to set up a BANK


FINANCE MINISTRY Tells RBI this is not the time to consider such a foray, especially given the lack of funds to spare for such a venture

CLICK HERE TO READ THE PRESS NEWS

Wednesday 7 May 2014

கண்ணீர் அஞ்சலி



நமது தோழியர் மகாலக்ஷ்மி PA, Tiruvannaikoil SO அவர்கள் இன்று (07.05.2014) இயற்கை எய்தினார்கள்  என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது இறுதி ஊர்வலம் 07.05.2014 ன்று மாலை உய்யகொண்டான், திருச்சியில் நடைபெறும்.

NFPE, Srirangam


Saturday 3 May 2014

HSG-I OFFICIATING PERIOD SHOULD BE COUNTED FOR PAY FIXATION & PENSIONARY BENEFITS


ONE MORE JUDGEMENT FROM CAT CHENNAI. APPEAL FILED BY DEPARTMENT DISMISSED BY MADRAS HIGH COURT.
 
PLEASE CLICK THE BELOW LINK TO SEE THE JUDGEMENT COPY.

https://drive.google.com/file/d/0Bzr_fYaknLLzRS1BTVVJRnNHVDQ/edit?usp=sharing

Confederation writes MOF regarding enhanced HRA

 

 

CHQ writes to Directorate demanding additional work force for HOs

 

 

Dear Comrades,

 
The Monthly meeting with SPOs will be held on 05.05.2014 After Noon 15:00 hours.
 
NFPE, Srirangam

Friday 2 May 2014

மே தின விழா 

திருவரங்கம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் தலைமை அஞ்சலகம் முன் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செயல் தலைவர் தோழர் T. தமிழ்செல்வன் கொடியேற்றி உரையாற்றினார். நிதி செயலர் தோழர் V. ஸ்ரீதரன் நன்றி உரையாற்றினார்.





7TH CPC – LAST DATE FOR SUBMISSION OF MEMORANDUM FIXED AS 30TH JUNE 2014 – LETTER FROM PAY COMMISSION TO SECRETARY GENERAL, NFPE

Thursday 1 May 2014

Rotational Transfer - 2014



மே நாள் சிலிர்க்கும்!

மே நாள் சிலிர்க்கும்!

வர்க்கமாய் உணர்தலே

உயர்திணை
ஏதோ, வாழ்ந்தோம் என்பது
அஃறிணை.

சங்கமாய் திரள்வதே சரிநிலை

வெறும் சந்ததிப்பெருக்குதல் உயிர்ப்பிழை.
பலரும் போராடி பெற்றதுன் பயன்நிலை
போராடும் வர்க்கத்துடன் சேராதிருப்பது இழிநிலை

நமைச்சுற்றி பகை வர்க்கம்

உலகெங்கும் ஓர் இழை,
அரசியல் வேண்டாமென்பது சதி வலை,
அறுத்தெறிந்து! அமைப்பாகு தொழிலாளியே,
மே நாள் அழைக்கிறது!
வர்க்கப் போராட்டமே உன் வாழ்நிலை.
பாட்டாளி வர்க்கமாய் ஒன்று சேர் பயமில்லை!
இதுவே உந்தன் அரசியல் !

எதற்கெடுத்தாலும், “எனக்கு நேரமில்லை

இந்த கூட்டம்  இயக்கமெல்லாம் பழக்கமில்லை
கொடி பிடித்தல் கோஷமிடுதல் ஒத்து வராது
கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது
என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து
மேலும் சிவக்குது மே நாள்!

கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை

எதிர்கொண்டு வேர்விடும், விதை !
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர் !
ஆடு, மாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி !

பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு !
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார் !

உணவுக் கூடத்திலும், 

உளவுபார்க்கும் கேமரா,
வார்த்தையை பிடுங்கி
உனது வர்க்க உணர்வை சோதிக்கும் அதிகாரி !,
கட்டளைக்கு எதிராக இமைத்தாலே
ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம்,

புரையேறினாலும்
சக தொழிலாளியிடம் தண்ணீர் கேட்க கை நீட்டாமல்
தானே தலையில் அடித்துக் கொண்டு
தனியே ஒதுங்கும் பயம்கொண்ட தொழிலாளி

இத்தனைக்கும் மத்தியில்

ஆங்கே ஒரு சங்கத்தை உருவாக்கி
கொடியேற்றி தலைநிமிரும் தொழிலாளர்..
அவர் போராட்ட அழகில்
மே நாள் சிலிர்க்கும்!

உயிரைக்கொடுத்துப் போராடி

மேநாள் தியாகிகள் பெற்றுக்கொடுத்த உரிமைகளை
ஒவ்வொன்றாய் இழப்பது
நம் வாழ்நாளின் கேவலம்.!

உழைப்பை கூலிக்கு விற்பதையே

எதிர்த்தவர்கள் அவர்கள்  இன்றோ
உணர்ச்சியையும் கூலிக்கு விற்கத் தயார் !,
உலகமயச் சுரண்டலுக்கும் இணங்கத் தயார் !
இருப்பவர்களின் காட்சிகளைப் பார்த்து
இறந்தவர் கனவு அஞ்சுகிறது ! 

மேநாளின் இலக்கு,

எட்டுமணிநேர வேலை மட்டுமல்ல,
முதலாளித்துவத்தையே எடுத்தெறியும் வேலை.

மேநாளின் சிறப்பு,

நம்மை முதலாளித்துவ சிந்தனையிலிருந்து
விடுவித்துக் கொள்வதுதான்


செய் ! நிச்சயம் மேநாள் சிலிர்க்கும்