NFPE

Wednesday 27 November 2013

 
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! 
 
வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம். பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது.
 
முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்.
 
இதுவரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது. நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்.
 
 இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு. நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு… வாழ்க்கை இதுதானென்று! நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… உறவுகள் இதுதானென்று.
 
 நன்றி .
facebook

Tuesday 26 November 2013

Flash News

Group A Adhoc orders தற்போது வெளியாகி உள்ளது. அதில் நமது கோட்டக் கண்காணிப்பாளர் திரு. A. கணேசன் அவர்கள் SSRM, Trichy கவும், நமது முன்னாள் கோட்டக் கண்காணிப்பாளரும் தற்போது AD (Mails) கவும் உள்ள திரு. S. பாஸ்கரன் அவர்கள் APMG, Trichy க  பதவி உயர்வு பெற்றுள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். வர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.




NFPE, Srirangam

Monday 25 November 2013

அன்புத் தோழர், தோழியர்களுக்கு பணிவான வணக்கங்கள் !

உதவிக் கரம் நீட்டுங்கள் !

அன்புத் தோழர், தோழியர்களுக்கு பணிவான வணக்கங்கள் !
இது ஒரு முக்கியமான வேண்டுகோள் !  நமக்காக 35 ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் தொய்வில்லாது, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது, அர்ப்பணிப்பு உணர்வுடன்  பணியாற்றிய  மூத்த தோழர் ஒருவரின் துன்ப காலத்தில்  நம்மால் நாம் செய்யக் கூடிய உதவியாக நினைத்து  நீங்கள் ஆற்றிட வேண்டியது  இது.
கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் அரக்கோணம் கோட்டச் செயலராக , பின்னர்  கோட்டச் சங்கத்தின் தலைவராக , பின்னர்  தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவித் தலைவராக  பணியாற்றிய  நம் அருமைத்தோழர் E .V. என்று அழைக்கப்படும் தோழர்.
E .வெங்கடேசன்  அவர்களின் ஒரே மகன்  திரு.  V .கார்த்திகேயன்  அவர்கள் ( வயது 35) வேலூர்  VIT  இல் LAB  INSTRUCTOR  ஆக பணியாற்றி வருகிறார். அவருக்கு  சமீபத்தில் தான்  திருமணம் நடைபெற்றது.  அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில்  புதிதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி  நியமனம் பெற்ற அன்புத் தோழியர்.  சுஜாதா  அவர்கள்  தான்  அவருக்கு துணைவியார்.
திரு . கார்த்திகேயன் அவர்கள்   இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு  பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல்  இறுதியில்  மருத்துவர்களின்  பரிந்துரைப்படி  சிறப்பு சிகிச்சை பெற  சென்னை சோழிங்க நல்லூரில் உள்   GLOBAL HOSPITAL இல்  அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டு , LIVER TRANSPLANT செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்கமுடியும் என்று அறிவித்து விட்டார்கள் . ஆனால் அதற்கான அறுவை சிகிச்சை செலவு மட்டுமே ரூ.24  லட்சம் என்று கூறிவிட்டார்கள். DONOR ஆக  தோழியர் சுஜாதா அவர்களே  நிர்ணயிக்கப் பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்து  DISCHARGE வரை மொத்தமாக 30 லட்சத்திற்கு மேல் கட்ட வேண்டியிருக்கும் என்று மருத்துவ மனையில் கூறிவிட்டார்கள். 
MIDDLE CLASS FAMILY யான அவர்களால் இவ்வளவு பணம் ஏற்பாடு செய்திட இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே  தனது TNHB FLAT ஐக் கூட அடமானம் வைத்து  அறுவை சிகிச்சைக்காக 21 லட்சம்  கட்டி,கடந்த சனியன்று  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. TRANSPLANTATION வெற்றிகரமாக நடத்தப் பட்டதாக  மருத்துவர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது .  தோழர். E.V. அவர்களின் மகனும் மருமகளும் தற்போது ICU வில் உள்ளனர். 
இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்திட்டால் அது அவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி  நம்முடைய தோழர்களுக்கு இந்த செய்தியை வெளியிடுகிறோம். 
சிறு அளவில் இருந்தால் கூட அது அவருக்கு பெரும் உதவியாக அமைந்திடும் என்பதே நம்  நம்பிக்கை . உதவ முடிந்தவர்கள் உடன்  கீழே கண்ட முகவரிக்கு EMO வாகவோ DD ஆகவோ அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த செய்தியை இந்த வலைத் தளத்தை பார்க்காத அனைவருக்கும்  தெரிவிக்கவும்.
  
Com. P.Kumar,
Secretary, AIPEU Gr ‘C’
Arakonam Divl  Br,
Arakonam 631 001
"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்திண் மாணப் பெரிது" 

Sunday 24 November 2013

REMEMBER ... MARTYRS OF OUR MOVEMENT .... NFPTE/NFPE IS GREAT ....

வைரவிழாக் கொண்டாட்டம் 
துவங்குகிறது ! ஆம் !
        
 NFPE  க்கு வயது 60 துவங்குகிறது ! 
UPTW  அமைப்பு NFPTE பேரியக்கமாக ஒன்றுபட்டு மலர்ந்த நாள்  : 24.11.1954

இப்பூவுலகில் இருந்து மறைந்திட்ட 
நமது தியாகத் தலைவர்களை 
நாம் நினைவில் கொள்வோம்!

Friday 22 November 2013

அம்மா என்பது !!!

தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.
அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.
அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.
அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,
சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் - என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம்.

அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,
ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.
அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.
தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,
என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:
மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்
மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் – என்றாள் தாய்.
நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.
எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.
நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான் என்றான் அறிஞர் அனோன்.
Dear Comrades,

The Monthly meeting with SPOs will be held on
29.11.2013 After Noon 1500 hours. All the comrades are requested to send the subjects to Secretary immediately. 

NFPE, Srirangam

Thursday 21 November 2013

சம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு!





மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் பலர் வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ ஆர்.டி. போன்ற திட்டங்களில் சேர்ந்துதான் சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும்போது ஒவ்வொரு மாதமும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், தபால் அலுவலகம் செல்லாமலே அதில் கிடைக்கும் வருமானம் மற்றும் வசதியை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் தபால் அலுவலகத்திலுள்ள சம்பள பட்டியல் சேமிப்பு (payroll saving scheme) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அது என்ன சம்பள பட்டியல் சேமிப்பு வசதி? இது யாருக்கானது?, இந்த முறையில் எப்படி சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது?, வட்டி எவ்வளவு? என பல விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் தென்மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர். அவர் தந்த விவரங்கள் இதோ:

சிறப்பு வசதி!
''ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஆர்.டி. (Recurring Deposits), டி.டி. (Time Deposits), தேசிய சேமிப்பு பத்திரம் (NSCs) மற்றும் பி.பி.எஃப். (PPF) போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான சிறப்பு வசதிதான் சம்பள பட்டியல் சேமிப்பு. இந்த வசதியை சம்பளதாரர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால், தனிநபராக இதில் சேரமுடியாது. நிறுவன பணியாளர்கள் பலர் சேர்ந்துதான் இம்முறையில் சேமிப்பை ஆரம்பிக்க முடியும்.

இந்த முறையில் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க வயது வரம்பு இல்லை. சம்பளதாரராக இருந்தால்போதும். தனிநபர்கள், தபால் அலுவலகத்தில் ஆர்.டி., டைம் டெபாசிட் (டி.டி). போன்ற சேமிப்பு கணக்கை ஆரம்பித்து, மாதந்தோறும் பணம் செலுத்த தபால் அலுவலகம் செல்வது வழக்கம். இதனால் நேரம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடும் தொகை வீணாகிறது.

ஆனால், சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பை மேற்கொள்ளும்போது பணத்தைப்போலவே நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது. அதுதவிர, இத்திட்டத்தில் சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.


யாருக்கு?
அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் அனைவரும் இந்த சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 5 நபர்களில் இருந்து அதிகபட்சம் எவ்வளவு பணியாளர்கள் வேண்டுமானாலும் இதில் ஒருங்கிணைந்து பயன் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து சேமிப்பு தொகையைப் பிடித்து, தபால் அலுவலகத்தில் நிறுவனம் கட்டிவிடும். சேமிப்பு ஐந்தாண்டுகளுக்கானது என்றாலும், அதற்கு முன்னரே விதிமுறைகளுக்கு உட்பட்டு சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

நிறுவனத்துக்கு கமிஷன்!
சம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வசதியின் கீழ் சேமிப்பைத் தொடர விரும்பாத பணியாளர்கள் அவர்களின் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டு விலகிக்கொள்ளலாம். மீண்டும் இணைந்துகொள்ள விரும்பினால் இடையில் சேமிப்பைத் தொடராமல் விட்ட மாதங்களுக்கான தொகையை அபராதத்துடன் செலுத்த வேண்டும். 

ஆர்.டி. சேமிப்பு திட்டத்தில் இந்த வசதியை பயன்படுத்தினால், ஆர்.டிக்கு வழங்கப்படும் 8.3% வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல், அந்தந்த திட்டத்துக்கு ஏற்ற வட்டி கிடைக்கும். இதில் கூடுதல் சலுகை என்பது இந்த வசதியைப் பயன்படுத்தும் நிறுவனத்துக்கு 2.5% கமிஷன் வழங்கப்படுவதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கமிஷன் தொகையானது வழங்கப்படும். 

சம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வழிமுறையில் சேர்ந்து சேமிக்க நினைக்கும் நிறுவனத்துக்கு கூடுதலாக 2.5 சதவிகித கமிஷனும், டி.டி. சேமிப்புக்கு 1%, என்.எஸ்.சி. சேமிப்புக்கு 1%, பி.பி.எஃப். சேமிப்புக்கு 1% கமிஷனும் வழங்கப்படுகிறது'' என்று முடித்தார் அவர்.

அங்குமிங்கும் அலையாமல் பாதுகாப்பாக சேமிக்க நினைப்பவர்கள் இத்திட்டத்தைப் பரிசீலிக்கலாமே!
Courtesy : http://www.sstaweb.com

Tuesday 19 November 2013

HAND BOOK 2014 – UPDATING - INDENT

All Divisional/Branch Secretaries

Dear Comrades,

It is requested to furnish latest full Postal address, Mobile number and E-mail ID for updating Hand Book 2014 by next Post/e-mail/phone/SMS to 09013946988, 07838019997, 09868853970

CHQ e-mail ID: aipeugrc@gmail.com

Further requested to send indent for Hand Book - 2014 immediately.

Comradely yours,

(M. Krishnan)
General Secretary

NFPE DIAMOND JUBILEE CELEBRATIONS FROM 24.11.2013 TO 24.11.2014

National Level inaugural Function of one year Long celebrations will be held at MP’s Hall, New Delhi (Near NFPE Office, North Avenue) on 24th November 2013 at 4 PM. Distinguished personalities, Leaders of Central Trade Unions, National Leaders of Confederation, NFPE and other fraternal organisations will participate in the function. All are requested to grace the occasion with their presence.

M. Krishnan
Secretary General
NFPE

Monday 18 November 2013

Instant Money Order from today


The long wait for postmen to deliver money order is over, at least for customers in southern districts of Tamil Nadu. In a bid to keep pace with private players, the Department of Post is simplifying the money order delivery system, by introducing Mobile Money Transfer (MMT) in selected circles from Saturday.

The system which was successfully implemented in 15 other Indian states including Kerala, will be available at 95 post offices in the southern districts of Tamil Nadu from Saturday. Of these select post offices 32 are in Madurai division. The public who want to use MMT can approach any of the select post offices and fill up a form to avail the service.

They have to give the full address and phone number of the recipient apart from providing the amount to be sent. Within few minutes, the sender and recipient would receive a confirmation SMS with transaction ID from the DOP. Besides, the sender would receive a secret code which he has to communicate to the recipient.

The recipient has to produce the confirmation SMS and secret code at a post office, where the facility is available. The postal assistant would pay the money once the system authenticates the transaction.

“Any person related to the recipient can receive the money producing the mobile phone and the secret code, while the money order was delivered to the recipient only till now,” said an official.

A customer can transfer upto Rs.10,000 using MMT facility, the official said “While we charge five percent of amount as service charge fir money order, the MMT service is relatively cheaper”, he added.

“The postal department had earlier introduced Instant Money Order (IMO) service, where the sender had to communicate a 16 digit secret code to the recipient to claim the money. The recipient had to produce an ID proof to claim the money with code number. The service charge for IMO was higher than the MMT. This new service has made money transaction easier and besides the customer can transact multiple times in a single day.

Sunday 17 November 2013

Stamp Contest - 2013

இந்திய அஞ்சல்துறை சார்பாக கோட்ட மட்டத்தில் குழந்தைகளுக்காக நடைபெற்ற "Design a Stamp Contest - 2013" - ல்  "A Day with my Grand Parents" என்ற ஓவியப்போட்டியில் திருவரங்கம் கோட்டத்தில்  கலந்துக்கொண்ட குழந்தைகள்.






போட்டியில் கலந்துக்கொண்ட குழந்தைகளின் கைவண்ணங்கள் சில. குழந்தைகளின் திறமைகள்  மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.


NFPE, Srirangam

Saturday 16 November 2013

List of "Bharat Ratna" - Award Recipients From 1954 Till Date

The “Bharat Ratna” Award is the highest Civilian Award in India. “Bharat Ratna” means “Gem of India”.

"Bharat Ratna" Award is conferred on Indian Citizens, including resident and non-resident , and also on Foreigners for the highest degrees of national services rendered in the fields of:-
  • Art
  • Literature
  • Science
  • Public service of high orders
In the year 2011, the Government of India modified the eligibility criteria for "Bharat Ratna" Award from the earlier criteria- "for the highest degrees of national service" to - " "for performance of highest order in any field of human endeavour"- to enable eminent sports-persons to receive the nation's highest civilian award.

Initially, the” Bharat Ratna” award was conferred on only alive persons and the award was not intended to be given posthumous.

After January 1955 provision was made for issue of posthumous Bharat Ratna award.

From the year 1954 To 2013, “Bharat Ratna” award has been given to 41 Indian Citizens (both Resident and non-resident) and including the following 3 foreigners:-

Mother Theresa belonging to the Republic of Macedonia


Khan Abdul Ghaffar Khan belonging to Pakistan 

Nelson Mandela belonging to South Africa



The following is the list of the “Bharata Ratna”-Award- Recipients from the year 1954 to the year 2013:-

Recipients of 1954 (6):

1. Sir Sarvepalli Radhakrishnan (1888–1975)-

The Second President and the First Vice President of India, A Philosopher belonging to Tamil Nadu whose birthday is commemorated as “Teachers’ Day”.




2. Chakravarti Rajagopalachari /Rajaji(1878–1972)- The last Governor General of British India who was also an Indian Freedom Fighter, belonging to Tamilnadu


3.Sir C. V. Raman ( 1888–1970)- Nobel-prize winning Physicist belonging to Tamil Nadu




Recipients of 1955 (1):-

4. Dr.Bhagwan Das (1869–1958)- A Man of Literature and an Indian Freedom Fighter belonging to Uttar Pradesh



5.Sir Mokshagundam Visvesvarayya (1861–1962)- An Indian Civil Engineer and Dam Architect, A Diwan of Princely state of Mysore Karnataka


6. Pandit Jawaharlal Nehru (1889–1964)- The First Prime Minister of India and an Indian Freedom Fighter and Writer belonging to Uttar Pradesh




Recipient of 1956: None

Recipient of 1957 (1):

7. Mr. Govind Ballabh Pant (1887–1961)- An Indian Freedom Fighter and Home Minister of Indian Union belonging to Uttar Pradesh, now Uttarakhand


Recipient of 1958 (1):

8. Dhondo Keshav Karve (1858–1962) –An Educationist and a Social Reformer belonging to Maharashtra- Awarded Bharata Ratna in his birth centenary year 1958



Recipient of1959 &1960:  None

Recipients of 1961 (2):

9. Dr. B. C. Roy (1882–1962)_ A Physician, Politician and Former Chief Minister of West Bengal belonging to West Bengal


10.Mr.Purushottam Das Tandon (1882–1962)- An Indian- Freedom Fighter and an Educationist belonging to Uttar Pradesh


Recipients of 1962: None

Recipients of 1963 (3):

11. Dr.(Babu) Rajendra Prasad (1884–1963)- The first President of India, a Freedom Fighter and a Jurist belonging to Bihar


12. Dr. Zakir Hussain (1897–1969)-Former President of India and a Scholar belonging to Andhra Pradesh



13. Mr.Pandurang Vaman Kane (1880–1972)- Ideologist and Sanskrit scholar belonging to Maharashtra


Recipient of 1964 &1965:  None

Recipient of 1966 (1):

14. Lal Bahadur Shastri (1904–1966)--The Second Prime Minister of India a Freedom Fighter belonging to Uttar Pradesh- Awarded Posthumously



Recipients From 1967 To 1970:  None

Recipient of 1971 (1):

15.Mrs. Indira Gandhi –(1917–1984)- Former and the first and the only Lady Prime Minister of India/Daughter of Pandit Jawaharlal Nehru, belonging to Uttar Pradesh


Recipients From 1972 To 1974: None

Recipient of 1975 (1):

16.Mr.V. V. Giri (1894–1980)- Former President- Trade Unionist belonging to Orissa


Recipient of 1976 (1):

17.Mr.K. Kamaraj (1903–1975)--A Freedom Fighter-Former Chief Minister of Tamil Nadu belonging to Tamil Nadu-Awarded Posthumously 



Recipient From 1977 To 1979:  None 

The ‘Bharat Ratna” award had been kept suspended by the Government of India,from 13th July 1977 to 26th January 1980.

Recipient of 1980 (1):

18. Mother Teresa (1910–1997)- A Nobel Laureate (For Peace, 1979) A foreigner belonging to the Republic of Macedonia- dedicated to the Sick people of India especially for those who were affected by Leprosy



Recipient of 1981&1982:  None

Recipient of 1983 (1):

19.Acharya Vinoba Bhave (1895–1982)-- A Social Reformer and a Freedom Fighter belonging to Maharashtra-Awarded Posthumously

Recipient From 1984 To 1986:- None

Recipient of 1987 (1):

20.Mr.Khan Abdul Ghaffar Khan, known as "Frontier Gandhi", (1890–1988)- The first non-citizen awarded Bharata Ratna- A Freedom Fighter belonging to Pakistan



Recipient of 1988 (1):

21.Mr. M. G. Ramachandran (1917–1987)- -Former Chief Minister of Tamil Nadu- Popular Cinema Actor belonging to Tamil Nadu- Awarded Posthumously 


Recipient of 1989: None

Recipients of 1990 (2):

22.Dr.B. R. Ambedkar (1891–1956)- An Architect who played a key role in the formation of the Indian Constitution, a Social Reformer, Economist and Scholar belonging to Maharashtra- Awarded Posthumously-


23. Dr.Nelson Mandela-Born in 1918-The Second non-citizen and the first non-Indian awarded Bharat Ratna- A Leader of Anti-Apartheid movement belonging to South Africa


Recipients of 1991 (3):

24.Mr.Rajiv Gandhi (1944–1991)- - Former Prime Minister of India/Son of Mrs.Indira Gandhi/Grand-son of Pandit Jawaharlal Nehru- belonging to New Delhi -Awarded Posthumously



25.Sardar Vallabhbhai Patel (1875–1950)- An Indian Freedom Fighter and the First Home Minister of India belonging to Gujarat-Awarded Posthumously-



26. Mr.Morarji Desai (1896–1995)- A Former Prime Minister of India and an Indian Freedom Fighter belonging to Gujarat. He was the First Ever Non-Congress Prime Minister of India.


Recipients of 1992 (3):

27. Mr. Maulana Abul Kalam Azad (1888–1958) – AFreedom Fighter and the First Education Minister of India belonging to WestBengal-Awarded Posthumously


28. Mr.J. R. D. Tata (1904–1993)- An Industrialist and a philanthropist belonging to Maharashtra


29.Mr.Satyajit Ray (1922–1992)- A popular Bengali -Film Director-An Oscar Award-winner belonging to West Bengal


Recipient From 1993 To 1996:  None

Recipients of 1997 (3):

30. Dr. A.P.J. Abdul Kalam- Born in 1931- A Former President of India- Atomic Scientist belonging to Tamil Nadu


31.Mr.Gulzarilal Nanda (1898–1998)-An Indian Freedom Fighter and a former(Acting) Prime Minister of India belonging to Punjab


32. Ms,.Aruna Asaf Ali (1908–1996) An Indian Freedom Fighter belonging to West Bengal-Awarded Posthumously


Recipients of 1998 (2):

33 .Mrs.M. S. Subbulakshmi (1916–2004)- A Carnatic music vocalist belonging to Tamil Nadu



34.Mr.Chidambaram Subramaniam/C.S. (1910–2000)- An Indian Freedom Fighter and former Indian Union Minister of Agriculture - belonging to Tamil Nadu


35. Mr.Jayaprakash Narayan (1902–1979)- A Freedom -Fighter and a Social Reformer belonging to Bihar- Awarded Posthumously


Recipients of 1999 (3):

36 .Pandit Ravi Shankar (1920-2012) -A Classical-Sitarist belonging to Uttar Pradesh.


37. Dr.Amartya Sen- Born in 1933- An Indian Economist and a Nobel Laureate ( For Economics, 1998),-belonging to West Bengal


38. Mr.Gopinath Bordoloi (1890–1950)-- An Indian freedom fighter belonging to Assam- Awarded Posthumously


Recipient of 2000: None

Recipients of 2001 (2):

39. Ms.Lata Mangeshkar- Born in 1929- A Hindi -Cinema-Play back Singer belonging to Maharashtra


40. Ustad Bismillah Khan (1916-2006)- A Classical Shehnai- Maestro belonging to Bihar


Recipient From 2002 To 2007: None

Recipient of 2008 (1):

41. Pandit Bhimsen Gururaj Joshi (1922-2011) A Hindustani classical vocalist belonging to Karnataka.


Recipients From 2009 To 2012: None

For the Year 2013: 

42. Sachin Tendulkar- (born in the year 1973)-Cricketer/Sports Person-for his achievements unreachable / and records unbreakable in the field of cricket, bringing glory to India


43. Dr.C.N.R.Rao- Indian Chemist- the man behind India's maiden 'Mars'-Mission