NFPE

Saturday, 28 February 2015

PJCA மற்றும் மாநில சங்கத்தின் அறைக்கூவலின் படி மத்திய மண்டலத்தில் 27.02.2015 அன்று நடைப்பெற்ற தர்ணா ...

PJCA மற்றும் மாநில சங்கத்தின் அறைக்கூவலின்படி நமது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மண்டலஅலுவலக வளாகத்தில்  27.02.2015 அன்று தர்ணா நடைப்பெற்றது .  மத்திய மண்டலச் செயலர் தோழர் R. குமார், மாநில உதவித்தலைவர் தோழர் ஜானகிராமன் மற்றும் மாநில உதவி நிதிச்செயலர் தோழர் பெருமாள் ஆகியோர் தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்தினர்.  
















NFPE, Srirangam

Friday, 27 February 2015

INDUCTION TRAINING FOR PA/SA (DIRECT) COMMENCING FROM 16.03.2015 TO 08.05.2015 (EIGHT WEEKS) AT PTC SAHARANPUR.

(Click the link below for details



தென் மண்டல நிர்வாகத்தின் அடக்குமுறையை கண்டிக்கிறோம் ! அடக்கு முறைக்கு அஞ்சிடோம் ! ஆணவத்திற்கு அடிபணியோம் ! புறப்படுவோம் வேலை நிறுத்த களம் நோக்கி !


அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! நாளை (27.02.2015) அன்று மண்டல அலுவலகங்கள் முன்பாக நடத்தப்பட அறிவிக்கப்பட்ட PJCA  மற்றும்  தமிழ் மாநில அஞ்சல் மூன்று /GDS  சங்கங்களின்  தார்ணா  போராட்டத்திற்கு முதலில் அனுமதி வழங்குவதாக   இருமாதங்களுக் கான பேட்டியின் போது நம்முடைய மாநிலச் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்த   மதுரை மண்டல PMG அவர்கள்   மறுநாள்  எந்தக் கோட்டத் திலும் விடுப்பு வழங்கிடக் கூடாது என்று  தனது முடிவை மாற்றி அறிவித்தார். 

மேலும் மாலை  மண்டல அலுவலக வளாகத்தில்  தார்ணா  போராட்டம் நடத்திட அனுமதி மறுத்து நமது அஞ்சல் மூன்று மண்டலச் செயலருக்கு  EMAIL  செய்தி அனுப்பியுள்ளதாக  நம்முடைய மாநில உதவிச் செயலர் தெரிவித்தார் . எனவே  இது குறித்து  தென் மண்டலச் செயலர், மாநிலச் செயலர் மற்றும் மாநிலத் தலைவர்  முறையே /தொலைபேசியில்  தென்மண்டல PMG அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு கேட்டபோது அவரது நிலையில் இருந்து இறங்கி வர மறுத்து விட்டார்.  உடன்  CPMG  ADDL  CHARGE  அவர்களை (கர்நாடகா  மாநிலம்) பெங்களூருவில்  தொலை பேசியில் தொடர்பு கொள்ள மாநிலச் செயலர் முயன்றபோது , அவர் அங்கில்லை என்றும் கேரளா மாநிலத்திற்கும் ADDL  CHARGE  என்பதால் அங்கு சென்றுள்ளார் என்றும்  மாலை  05.00 மணிக்கு  திரும்பலாம் என்றும் தெரிவித்தார்.  எனவே  மாலை 05.30 மணியளவில் மீண்டும் தொடர்பு கொண்டபோது அதுவரை அவர் வரவில்லை என்றும் விமானம் காலதாமத மாக வருகிறது என்றும் தெரிவித்தார்கள் . மாலை 06.30 வரை   அவர் வந்து சேரவில்லை என்று தெரிவித்தார்கள்.  

எனவே  நாளை (27.02.2015) அன்று    தென் மண்டலத்தில் , மண்டல அலுவலகம் முன்பாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட  தார்ணா  போராட்டம் ரத்து செய்யப்படுவதாக   தென் மண்டலத்தை சேர்ந்த மாநிலச் சங்க நிர்வாகிகளால் அறிவிப்பு செய்யப்பட்டது.  

அனுமதி மறுத்ததால் வாய் மூடி மௌனியாக இருக்க மாட்டோம் !

எனவே தென் மண்டல PMG அவர்களின் அடக்கு முறையைக்  கண்டித்தும் தொழிற் சங்க பழி வாங்கும் போக்கை கண்டித்தும் PJCA / மாநிலச் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை ஆர்ப்பாட்டமாக மாற்றி  தென் மண்டலத்தில் அனைத்து கோட்ட/ கிளைகளிலும்  27.02.2015 மாலை  கண்டன ஆர்ப்பாட்டமாக   நடத்திடக் கேட்டுக் கொள்கிறோம்.   NFPE  யின்  இதர சங்கங்களும்  இதற்கு அதரவு தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

இந்த அடக்குமுறையை  நம்  மாநிலச் சங்கம்  நிச்சயம் அனுமதிக்காது.  CPMG  அலுவலக வாயிலில் நாளை (27.02.2015) அன்று  நடைபெற P 3 மற்றும் GDS  சங்கங்களால்  அறிவிக்கப் பட்டுள்ள  தார்ணா  போராட்டம்  கண்டனப் போராட்டமாக  நடைபெறும்  என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இதே போல  இதர மண்டலங்களிலும்  நம்முடைய  தார்ணா போராட்டம் அஞ்சல் மூன்று  மற்றும் GDS  சங்கங்களால்  கண்டனப் போராட்டமாக நடத்திட மாநிலச் சங்கம்  அறிவிக்கிறது. NFPE  யின்  இதர சங்கங்களும்  இதற்கு  ஆதரவு தருமாறு  வேண்டுகிறோம்.

 மாலையில்  PMG SR  அவர்களின் தொழிற் சங்க விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், தென் மண்டலத்தில் நடைபெற்றுள்ள ஜனநாயகப் படுகொலையைக்  கண்டித்தும் இதர கோரிக்கை களுடன்  வேலை நிறுத்த நோட்டீஸ்  மாநில நிர்வாகத்திற்கு  வழங்கப்படும். வேலை நிறுத்தத் திற்கான  தயாரிப்பு  வேலைகள் 02.03.2015 PJCA  தார்ணாவுக்குப் பிறகு அறிவிக்கப்படும்.  இதர போராட்ட வியூகங்கள்  குறித்து  27.02.2015 மாலை வேலை நிறுத்த நோட்டீஸ்  வழங்கப் பட்டபின்னர்  அண்ணா சாலை  தலைமை அஞ்சலகத்தில்  தலைமையகத்தில்  உள்ள  மாநிலச் சங்க நிர்வாகிகள் , அகில இந்திய சங்க நிர்வாகிகள்  மற்றும்  தலைவர்கள்  கூடி  முடிவு செய்யப்படும். 

"தாக்குண்டால் புழு கூட

தரை விட்டு தீ துள்ளும்

கழுகு தூக்கினும் குஞ்சுக்காக

துடித்து எழும் கோழி

சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது

முயல் கூட திருப்பித்தாக்கும்

சாக்கடை புழுக்களல்ல நாங்கள்

சரித்திரத்தின் சக்கரங்கள்" 

அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. 

கிளர்ந்தெழுங்கள்,உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி

பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையேநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது!

அடக்குமுறை வென்றதாக வரலாறு உலகில் இல்லை ! 
ஆணவங்கள் வென்றதாக வரலாறு  இல்லவே இல்லை ! 
உழைக்கும் சக்தியின் முன்னே , 
அவர்களின் உரிமைக் குரல்களின் முன்னே  
சமஸ்தானங்கள் சரிந்ததாகவே  வரலாறு !  
கிளர்ந்தெழுவோம் ! அடிமை விலங்கொடிப்போம் ! 
புதிய வரலாறு  படைப்போம் !

Thursday, 26 February 2015

27.02.2015, வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் ....

அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே,


       வணக்கம், மாநில சங்க அறைகூவலின்படி கடந்த 17.02.2015 அன்று திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தொடர்ந்து வரும் 24.02.2015 அன்று நடைபெறவிருந்த தர்ணா , நமது மத்திய சங்க அறைகூவலின்படி வரும் 27.02.2015 அன்று நடைபெறும்.  
        
        கடந்த 05.02.2015 அன்று டெல்லியில் கூடிய NFPE / FNPO மற்றும் GDS  சங்கங்களை உள்ளடக்கிய கூட்டுப் போராட்டக் குழு நமது கோரிக்கைகளான 7வது ஊதியக் குழுவின் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும், 50% பஞ்சப்படியை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்.  இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.  புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், இலாக்காவை ஆறு கூறாகப்  பிரித்து , தனியார் மயம் செய்வதை கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாத சூழ்நிலையில் வரும் 06.05.2015 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.  கோரிக்கைகளை  வென்றெடுக்க வரும் 27.02.2015 வெள்ளிகிழமை அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இடம்

மண்டல அலுவலக வளாகம்,  திருச்சி .

நாள்                                                                        நேரம்  
27.02.2015, வெள்ளிக் கிழமை                 காலை 10.00 மணி  முதல் 

நமது மாநில மற்றும் மத்திய சங்க கோரிக்கைகள் நிறைவேற, ஊழியர் பிரச்சனைகள் தீர இப்போராட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போராடுவோம் வெற்றி பெறுவோம்!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!! 
இறுதி வெற்றி நமதே!!!


NFPE, Srirangam

Tuesday, 24 February 2015

PRESS NEWS:- INFOSYS WAS PENALISED OF RS.9.33 CRORES FOR DEFAULT IN SERVICE

PRESS NEWS:- INFOSYS WAS PENALISED OF RS.9.33 CRORES FOR DEFAULT IN SERVICE
தொடர்ந்த சேவைக் குறைபாட்டுக்கு INFOSYS மீது BESCOM ரூ. 9.33 கோடி தண்டம் (PENALTY ) வசூலித்ததாக பத்திரிக்கை செய்தி .
அஞ்சலில் உள்ள சேவைக் குறைபாட்டுக்கு நம் அதிகாரிகள் தண்டத்தொகை வசூலிப்பார்களா அல்லது மேலும் 'BILL' போட்டு கொடுப் பார்களா ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும் !
பார்க்க பத்திரிக்கை செய்தி :-

BANGALORE MIRROR cover story.
Blame it on Infosys, says Bescom MD on excess power bills
By Niranjan Kaggere, Bangalore Mirror Bureau | Apr 22, 2014, 02.00 AM IST

Pankaj Kumar Pandey says power utility had identified 150 issues based on consumer complaints, but Infosys was able to rectify just 85. Only govt can scrap the contract
In February this year, some United Bank of India employees had reportedly blamed inherent deficiencies in 'Finacle', the financial software provided by Infosys, the Bangalore based IT bellwether giant, for the bank's mounting NPAs. The NPA controversy had led to the exit of Archana Bhargava, chairman of the bank. Now, Bangalore Electricity Supply Company (Bescom) has called into question the reliability of the company's billing software.
Under heavy criticism from consumers and the Karnataka Electricity Regulatory Commission (KERC) for persistent errors in the billing system, Pankaj Kumar Pandey, managing director, Bescom, blamed Infosys for the mess. Making his submission before KERC on Monday during a public hearing over a tariff review petition submitted by all the five Escoms for the year 2014-15, Pandey said, "We are not satisfied with the software."
Pandey admitted that he has been aware of the faulty software for some time, but claimed his hands were tied. "We have received several complaints about the variations in bills generated by the software," Pandey told the panel of KERC members. "We are not satisfied with the software. In fact, we had issued several notices to them (Infosys) and even penalised them by levying a penalty of Rs 9.33 crore. Even then they have not done anything. Based on the complaints, we identified about 150 issues and asked them to sort them out. However, they were able to address only 85 of them. They blame the glitches on the server not working properly."
When the KERC panel asked Pandey why the software hadn't been changed despite being aware of the glitches, Pandey said, "The government has to take a decision on it as it was the government which handed Infosys the contract. We have written to the chief secretary about the burgeoning problem pertaining to billing and we will soon hold a meeting with the chief secretary in this regard. The government has to take a decision on it."
The problem had snowballed into a major controversy with several individual consumers, consumer rights activists complaining to both Bescom and KERC. "It is not just one or two issues, but several," N Chandra Shekhar, a consumer activist, told BM. "Ever since Bescom switched over from their previous billing software to Infosys billing software, payment of bills online has become a major problem. A few months ago, RR numbers were mixed up resulting in the erroneous calculation of consumption."
The shadow-boxing between Bescom and Infosys over billing-related issues has been going on for quite some time. It turned into a slanging match when the billing system crashed in October last year. The bug was fixed, but the problem again resurfaced in November. And while Bescom has been blaming Infosys, the latter has claimed that the power utility owes it crores of rupees.

Monday, 23 February 2015


EXEMPTION FROM PHYSICAL APPEARANCE FOR THE PURPOSE OF LIFE CERTIFICATE (CLICK THE LINK BELOW FOR DETAILS)


REVISION OF PENSION OF PRE-2006 PENSIONERS- INCLUSION OF NON-PRACTICING ALLOWANCE (NPA) IN REVISION OF PENSION OF RETIRED MEDICAL OFFICERS. (CLICK THE LINK BELOW FOR DETAILS)http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D3/D03ppw/PPWA_18022015.pdf

REVISION OF CGHS RATES CLICK HERE FOR DETAILS


7th  PAY COMMISSION HAS INVITED NATIONAL COUNCIL JCM/STAFF SIDE FOR A MEETING ON 25.02.2015 CLICK HERE FOR DETAILS
அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே,



       வணக்கம், மாநில சங்க அறைகூவலின்படி கடந்த 17.02.2015 அன்று திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தொடர்ந்து வரும் 24.02.2015 அன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம், நமது மத்திய சங்க அறைகூவலின்படி வரும் 27.02.2015 அன்று நடைபெறும்.  
        
        கடந்த 05.02.2015 அன்று டெல்லியில் கூடிய NFPE / FNPO மற்றும் GDS  சங்கங்களை உள்ளடக்கிய கூட்டுப் போராட்டக் குழு நமது கோரிக்கைகளான 7வது ஊதியக் குழுவின் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும், 50% பஞ்சப்படியை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்.  இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.  புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், இலாக்காவை ஆறு கூறாகப்  பிரித்து , தனியார் மயம் செய்வதை கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாத சூழ்நிலையில் வரும் 06.05.2015 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.  கோரிக்கைகளை  வென்றெடுக்க வரும் 27.02.2015 வெள்ளிகிழமை அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இடம்

மண்டல அலுவலக வளாகம்,  திருச்சி .

நாள்                                                                        நேரம்  
27.02.2015, வெள்ளிக் கிழமை                 மலை 06.00 மணி 

நமது மாநில மற்றும் மத்திய சங்க கோரிக்கைகள் நிறைவேற, ஊழியர் பிரச்சனைகள் தீர இப்போராட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போராடுவோம் வெற்றி பெறுவோம்!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!! 
இறுதி வெற்றி நமதே!!!


NFPE, Srirangam

அஞ்சல், RMS மற்றும் GDS ஊழியர் சங்கங்களின் இணைப்புக்குழு, திருச்சிராப்பள்ளி

  அஞ்சல், RMS மற்றும் GDS ஊழியர் சங்கங்களின் இணைப்புக்குழு, திருச்சிராப்பள்ளி சார்பாக 22.02.2015 அன்று மாலை 4.00 மணிமுதல் அருண் ஹோட்டலில் உள்ள சுமங்கலி ஹாலில் அஞ்சல்துறை பாதுகாப்பு சிறப்புக் கருத்தரங்கத்தில் Task Force குழுவின் பரிந்துரைகளால் நமது எதிர்காலம் மாபெரும் அபாயத்தில் உள்ளதை விளக்கும் கருத்தரங்கம் நமது முன்னாள் மா.பொதுச்செயலரும் தற்போதைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளத்தின்  மா. பொதுச்செயலுருமான  தோழர் M. கிருஷ்ணன் அவர்கள் "Task Force குழுவின் பரிந்துரைகளும் அஞ்சல் துறையின் எதிர்காலமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

  நமது முன்னாள் மா.பொதுச்செயலரும் தற்போதைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளத்தின்  மா. பொதுச்செயலுருமான  தோழர் M. கிருஷ்ணன் அவர்களிடம் நமது கோட்டத்தின் சார்பாக Target / Torture சம்பந்தமாக ஒரு Memorandum கொடுக்கப்பட்டது.










NFPE, Srirangam


Sunday, 22 February 2015

அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் அஞ்சல் நான்கின் 24 - வது கோட்ட மாநாடு 22.02.2015

   அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் அஞ்சல் நான்கின் 24 - வது கோட்ட மாநாடு இன்று (22.02.2015) திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில்  கோட்டத் தலைவர் தோழர் R. சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர்  G. கண்ணன், அஞ்சல் நான்கின் மத்திய மண்டலச் செயலர் தோழர் S. கோவிந்தராஜன்,  திருச்சி அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர் K. மருதநாயகம், திருவரங்கம் அஞ்சல் மூன்றின் செயல் தலைவர்  தோழர் T. தமிழ்செல்வன், கோட்டச் செயலர் தோழர் C. சசிகுமார்  மற்றும் நிதிச் செயலர் தோழர் V. ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

  கோட்டச் செயலர் தோழர் N. சேஷாத்ரி ஈராண்டறிக்கையையும், அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவு கணக்குகளை நிதிச் செயலர்  தோழர் M. ஆரோக்கியசாமி பொதுக்குழுவிற்கு சமர்ப்பித்தனர்.

புதிய நிர்வாகிகளாக கீழ் கண்ட தோழர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கோட்டத் தலைவர்    :  தோழர் N. சேஷாத்ரி,  Sorting Postman, Srirangam
கோட்டச் செயலர்      :  தோழர்  R. சந்திரன்,    Mail Overseers, Turaiyur West
நிதிச் செயலர்             :    தோழர் M. ஆரோக்கியசாமி, Postman, TVkoil





















Saturday, 21 February 2015

PREPARE FOR P 3 & GDS STATE LEVEL II PHASE PROG. ON 27 TH FEB.2015 AND FOR PJCA DHARNA




PJCA - 20.02.2015

PJCA - வின் அறைகூவளுக்கிணங்க 20.02.2015 அன்று மாலை 6 மணியளவில் NFPE மற்றும் FNPO சங்கங்கள் இணைந்து திருவரங்கம் கோட்ட / தலைமை அஞ்சலகத்தின் வாயிலில் அஞ்சல் அலுவலகங்கள் தனியார் மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நடத்திய  ஆர்ப்பாட்டம்.









COM: M. KRISHNAN ELECTED TO THE DIRECTIVE COMMITTEE OF TRADE UNION INTERNATIONAL-- PUBLIC SERVICES (WFTU)

Com. M. Krishnan, Secretary General, Confederation of Central Govt. Employees & Workers and Ex-Secretary General, NFPE is elected to the Directive Committee of the Trade Union International (Public Services) which is a part of World Federation of Trade Unions (WFTU) in the international Congress held at Kathmandu (Nepal) on 13th & 14th February 2015. Full report of the International Congress will be published shortly. A delegation of six comrades including Com. K. K. N. Kutty (President, Confederation), Com M. S. Raja ( SG, Audit & Accounts Association), Com. K. P. Rajagopal (SG, ITEF), Com. R. N. Parashar (SG, NFPE), Com. Vrigu Bhattacharjee (Civil Accounts Employees Association) & Com. M. Krishnan attended the Congress representing Confederation.

Wednesday, 18 February 2015

Thoramangalam SO under Srirangam Division migrated to Finacle on 16.02.2015