NFPE

Monday, 23 February 2015

அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே,



       வணக்கம், மாநில சங்க அறைகூவலின்படி கடந்த 17.02.2015 அன்று திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தொடர்ந்து வரும் 24.02.2015 அன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம், நமது மத்திய சங்க அறைகூவலின்படி வரும் 27.02.2015 அன்று நடைபெறும்.  
        
        கடந்த 05.02.2015 அன்று டெல்லியில் கூடிய NFPE / FNPO மற்றும் GDS  சங்கங்களை உள்ளடக்கிய கூட்டுப் போராட்டக் குழு நமது கோரிக்கைகளான 7வது ஊதியக் குழுவின் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும், 50% பஞ்சப்படியை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்.  இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.  புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், இலாக்காவை ஆறு கூறாகப்  பிரித்து , தனியார் மயம் செய்வதை கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாத சூழ்நிலையில் வரும் 06.05.2015 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.  கோரிக்கைகளை  வென்றெடுக்க வரும் 27.02.2015 வெள்ளிகிழமை அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இடம்

மண்டல அலுவலக வளாகம்,  திருச்சி .

நாள்                                                                        நேரம்  
27.02.2015, வெள்ளிக் கிழமை                 மலை 06.00 மணி 

நமது மாநில மற்றும் மத்திய சங்க கோரிக்கைகள் நிறைவேற, ஊழியர் பிரச்சனைகள் தீர இப்போராட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போராடுவோம் வெற்றி பெறுவோம்!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!! 
இறுதி வெற்றி நமதே!!!


NFPE, Srirangam

அஞ்சல், RMS மற்றும் GDS ஊழியர் சங்கங்களின் இணைப்புக்குழு, திருச்சிராப்பள்ளி

  அஞ்சல், RMS மற்றும் GDS ஊழியர் சங்கங்களின் இணைப்புக்குழு, திருச்சிராப்பள்ளி சார்பாக 22.02.2015 அன்று மாலை 4.00 மணிமுதல் அருண் ஹோட்டலில் உள்ள சுமங்கலி ஹாலில் அஞ்சல்துறை பாதுகாப்பு சிறப்புக் கருத்தரங்கத்தில் Task Force குழுவின் பரிந்துரைகளால் நமது எதிர்காலம் மாபெரும் அபாயத்தில் உள்ளதை விளக்கும் கருத்தரங்கம் நமது முன்னாள் மா.பொதுச்செயலரும் தற்போதைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளத்தின்  மா. பொதுச்செயலுருமான  தோழர் M. கிருஷ்ணன் அவர்கள் "Task Force குழுவின் பரிந்துரைகளும் அஞ்சல் துறையின் எதிர்காலமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

  நமது முன்னாள் மா.பொதுச்செயலரும் தற்போதைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளத்தின்  மா. பொதுச்செயலுருமான  தோழர் M. கிருஷ்ணன் அவர்களிடம் நமது கோட்டத்தின் சார்பாக Target / Torture சம்பந்தமாக ஒரு Memorandum கொடுக்கப்பட்டது.










NFPE, Srirangam


Sunday, 22 February 2015

அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் அஞ்சல் நான்கின் 24 - வது கோட்ட மாநாடு 22.02.2015

   அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் அஞ்சல் நான்கின் 24 - வது கோட்ட மாநாடு இன்று (22.02.2015) திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில்  கோட்டத் தலைவர் தோழர் R. சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர்  G. கண்ணன், அஞ்சல் நான்கின் மத்திய மண்டலச் செயலர் தோழர் S. கோவிந்தராஜன்,  திருச்சி அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர் K. மருதநாயகம், திருவரங்கம் அஞ்சல் மூன்றின் செயல் தலைவர்  தோழர் T. தமிழ்செல்வன், கோட்டச் செயலர் தோழர் C. சசிகுமார்  மற்றும் நிதிச் செயலர் தோழர் V. ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

  கோட்டச் செயலர் தோழர் N. சேஷாத்ரி ஈராண்டறிக்கையையும், அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவு கணக்குகளை நிதிச் செயலர்  தோழர் M. ஆரோக்கியசாமி பொதுக்குழுவிற்கு சமர்ப்பித்தனர்.

புதிய நிர்வாகிகளாக கீழ் கண்ட தோழர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கோட்டத் தலைவர்    :  தோழர் N. சேஷாத்ரி,  Sorting Postman, Srirangam
கோட்டச் செயலர்      :  தோழர்  R. சந்திரன்,    Mail Overseers, Turaiyur West
நிதிச் செயலர்             :    தோழர் M. ஆரோக்கியசாமி, Postman, TVkoil





















Saturday, 21 February 2015

PREPARE FOR P 3 & GDS STATE LEVEL II PHASE PROG. ON 27 TH FEB.2015 AND FOR PJCA DHARNA




PJCA - 20.02.2015

PJCA - வின் அறைகூவளுக்கிணங்க 20.02.2015 அன்று மாலை 6 மணியளவில் NFPE மற்றும் FNPO சங்கங்கள் இணைந்து திருவரங்கம் கோட்ட / தலைமை அஞ்சலகத்தின் வாயிலில் அஞ்சல் அலுவலகங்கள் தனியார் மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நடத்திய  ஆர்ப்பாட்டம்.









COM: M. KRISHNAN ELECTED TO THE DIRECTIVE COMMITTEE OF TRADE UNION INTERNATIONAL-- PUBLIC SERVICES (WFTU)

Com. M. Krishnan, Secretary General, Confederation of Central Govt. Employees & Workers and Ex-Secretary General, NFPE is elected to the Directive Committee of the Trade Union International (Public Services) which is a part of World Federation of Trade Unions (WFTU) in the international Congress held at Kathmandu (Nepal) on 13th & 14th February 2015. Full report of the International Congress will be published shortly. A delegation of six comrades including Com. K. K. N. Kutty (President, Confederation), Com M. S. Raja ( SG, Audit & Accounts Association), Com. K. P. Rajagopal (SG, ITEF), Com. R. N. Parashar (SG, NFPE), Com. Vrigu Bhattacharjee (Civil Accounts Employees Association) & Com. M. Krishnan attended the Congress representing Confederation.

Wednesday, 18 February 2015

Thoramangalam SO under Srirangam Division migrated to Finacle on 16.02.2015