NFPE

Tuesday, 17 March 2015

அவசர உள்ளூர் உறுப்பினர் கூட்டம்

  தோழர்களே, தோழியர்களே!!

    வணக்கம்.  18.03.2015 அன்று மாலை 6 மணியளவில் திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் அவசர உள்ளூர் உறுப்பினர் கூட்டம் நடைபெற உள்ளது.  அதுசமயம் திருவரங்கம் சுற்று பகுதியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி.

தோழமையுடன் 

C. Sasikumar,
Divisional Secretary,

STRIKE CAMPAIGN - REGIONWISE TOUR PROGRAMME OF CIRCLE OFFICE BEARERS !


"சுக்கா மிளகா  சுதந்திரம் என்பது கடையில் வாங்க  ..
போராடிப் பார் !   போராட்ட வியர்வைக்குப் பின் 
நுனி நாவில்  ஒரு சொட்டு தேனாய் இனிக்கும்...
நீ உணர்வாய் சுதந்திரம் இன்னதென்று ! "
_________________ 

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! எதிர்வரும் 26.03.2015அன்று   நடைபெற உள்ள தமிழகம் தழுவிய  வேலை நிறுத்தத்தை ஒட்டி கோட்ட மற்றும் கிளைகளில் நடத்த வேண்டிய மண்டல ரீதியிலான ஆயத்தக் கூட்டங்கள்  பட்டியல்  கீழே  அளிக்கப் பட்டுள்ளது.  இதன் நகல் ஏற்கனவே அந்தந்த மண்டல செயலர்கள் மூலம்  உரிய கோட்ட /கிளைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது. எனவே  குறிப்பிடப்பட்டுள்ள  நாட்களில்  அந்தந்த  அஞ்சல் மூன்று  கோட்ட/ கிளைச் செயலர்கள்,  தல  மட்டத்தில் உள்ள  இதர சங்கங்களின் கோட்ட/ கிளைச் செயலர்களை ஒருங்கிணைத்து   வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டுகிறோம். மாநிலச் சங்க நிர்வாகிகள்  அறிவிக்கப்பட்ட கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு வேலை நிறுத்தத்தை முழுமையான வெற்றியாக ஆக்கிட வேண்டும் என்றும் வேண்டுகிறோம். சென்னை பெருநகர மண்டல சுற்றுப் பயண அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும்.

ஒவ்வொரு நாளும் போராட்ட வீச்சு பெருகட்டும் !
போராட்ட நாளில் பூகம்ப வெடிப்பாய் மாறட்டும் !

Saturday, 14 March 2015

26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் !

அடக்குமுறையை எதிர்த்து , 
தொழிலாளி அடிமைப்படுத்தப் படுவதை எதிர்த்து , 
தொழிற்சங்க பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி, பணியிடத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி ,
 ஒழுங்கான கணக்கீட்டில் காலிப் பணியிடங்களை நிறைவேற்றக் கோரி ,

 CBS /CIS சேவைகளை சீர்படுத்தக் கோரி, 
அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS , கணக்குப் பிரிவு, 
நிர்வாகப் பிரிவு, GDS உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியர்களின் 
தேங்கிக் கிடக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, 

 தமிழகம் தழுவிய அளவில் போர்ப் பரணி !
இது உரிமைக்கான யுத்தம் !
உழைக்கும் வர்க்கத்தை அடிமையாக நினைக்கும் 
சில அதிகார மையங்களுக்கு  நம் உணர்வைக் காட்டும் யுத்தம் !
_________________________________________________________________________________
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் !

தோழனே வா ! தோள் கொடுக்க வா !            வீ ரனே வா வீறு கொண்டு வா !

"கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும்விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்.
ஆடுமாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி.
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு !
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்! "


"Sukanya Samriddhi Yojana"

Wednesday, 11 March 2015

STRIKE NOTICE SERVED - MASS DEMONSTRATION IN FRONT OF CPMG'S OFFICE -GRAND SUCCESS !

கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்  
மாபெரும் வெற்றி ! 
சட்ட பூர்வமான வேலை நிறுத்த நோட்டீஸ் முறையாக வழங்கப்பட்டது !
26.03.2015 அன்று தமிழகத்தில்  தேங்கிக் கிடக்கும் கோரிக்கைகளுக்காக 
தமிழகம் தழுவிய ஒரு நாள்  வேலை நிறுத்தம் !

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் ! நேற்று (10.03.2015) அன்று மதியம்  தமிழக NFPE  அஞ்சல் - RMS  இணைப்புக் குழு சார்பாக 9 சங்கங்கள் , CPMG  அலுவலகம் முன்பாக  நடத்திய கோரிக்கை முழக்க  ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.  கிட்டத்தட்ட 300  தோழர்கள்  கலந்து கொண்டது இந்த நிகழ்வின் சிறப்பான அம்சமாகும். இந்த ஆர்ப்பாட்டம்  இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். B . பரந்தாமன் (R  4) தலைமையில், தோழர். J . ராமமூர்த்தி (P  3) முன்னிலையில், NFPE  அனைத்து மாநிலச் செயலர்களும்  மற்றும் அகில இந்திய சங்கங்களின்  நிர்வாகிகளும்  கலந்துகொள்ள  எழுச்சியுடன்  நடைபெற்றது.  சிறப்பு  அழைப்பாளராக  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  தமிழக  பொதுச் செயலர்  தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  


ஆர்ப்பாட்டம்  முடிந்த பிறகு  அனைத்து சங்கங்களின் கோரிக்கைகள் அடங்கிய  26.3.2015 அன்றைய தேதியில் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கான  சட்ட பூர்வமான நோட்டீஸ்  CHIEF  PMG  தலைமை இடத்தில் இல்லாத காரணத்தினால்  DPS  HQ அவர்களிடம்  நேரில் வழங்கப் பட்டது. இதன் நகல்  PMG,CCR  மற்றும் PMG, MM  அவர்களுக்கும் அளிக்கப் பட்டது.  மேலும்  அனைத்து PMG க்களுக்கும் ,  தொழிலாளர் நல ஆணையருக்கும் முறையாக அனுப்பப் பட்டது. 


13.03.2015 அன்று திருச்சியில் 
மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் 


கூட்டத்தின் முடிவில்,  வேலை நிறுத்தம் குறித்து அடுத்த கட்ட நடவடிக் கைகள் மேற்கொள்ள  எதிர்வரும் 13.03.2015 அன்று  SRMU  சங்கக் கட்டிடம்  திருச்சியில் காலை 10.00 மணியளவில்  அனைத்து சங்கங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில்  முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு NFPE  இன்   அனைத்து  மாநிலச் சங்கங் களின்  மாநில நிர்வாகிகள் அனைவரும் , கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டது.  


அனைத்து மண்டலங்களிலும்  வேலைநிறுத்த  ஆயத்தக் கூட்டங்கள்  நடத்திடவும் ,  அதில் அனைத்து மாநிலச்  செயலர்களும்  கலந்து கொள்வதெனவும்  தீர்மானிக்கப்பட்டது.  மேலும்  தமிழகத்தின் அனைத்துக் கோட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள்  நடத்திடுவதெனவும்  அதில்  அனைத்து சங்கங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள்  அடுத்த வாரத்தில் இருந்து  கலந்துகொள்ளச் செய்வ தெனவும்  தீர்மானிக்கப் பட்டது. 


எனவே  மாநிலச் சங்க நிர்வாகிகள் , வேறு  காரணம் எதுவும் கூறாமல்  வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்களில்  கலந்துகொள்ள  தயார் நிலையில் இருக்குமாறும்  கேட்டுக் கொள்கிறோம்.  வேலை நிறுத்த  நோட்டீஸ் மற்றும்  கோரிக்கைகள் அடங்கிய  மனுவின் நகல் அனைத்து கோட்ட / கிளைச் செயலர்களுக்கும்  தனியே  அனுப்பப்படும்.  வேலை நிறுத்த நோட்டீஸ்  கீழே  பார்க்கலாம். 

Tuesday, 10 March 2015

இன்னும் எவ்ளோ?........முடியல!!!


Finacle /Mccamish/ e-commerce/MNOP/Agencies Work (Phone/ Chotukool/ watch /Tickets/Application etc...



VERIFICATION OF MEMBERSHIP FOR RECOGNITION OF SERVICE ASSOCIATION UNDER CCS (RSA) RULES, 1993-CALLING OF APPLICATIONS-  DEPARTMENT  ISSUED NOTIFICATION



Thursday, 5 March 2015

Hearty Welcomes to Newly Recruited PAs




Srirangam Division

WELCOMES

NEWLY RECRUITED PAs 

&

HEARTY CONGRATULATIONS


NFPE, Srirangam