NFPE

Monday, 23 March 2015

துறையூர் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டம்

   துறையூர் தலைமை அஞ்சலகத்தில் இன்று மாலை 06.30 மணியளவில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டத்திற்கு திருவரங்கம் அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர் K. கதிர்வேல் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தி கொடுத்தார்.  திருவரங்கம் அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர் R. சந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  தோழர் R. விஷ்ணுதேவன், மாநில நிதிச்செயலர், NFPE GDS, மற்றும் தோழர் C. சசிகுமார், கோட்டச் செயலர் P3, திருவரங்கம்  ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.












NFPE. Srirangam

Sunday, 22 March 2015

வேலை நிறுத்த விளக்க கூட்டம்


தோழர்களே, தோழியர்களே!!


வணக்கம்.

  26.03.2015 அன்று நடைபெற உள்ள தமிழகம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் விளக்க கூட்டம்  23.03.2015 அன்று மாலை 6 மணியளவில் துறையூர்  தலைமை அஞ்சலகத்திலும் , 24.03.2015 அன்று பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்திலும்  நடை பெற உள்ளது.    அது சமயம் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

போராட்ட வாழ்த்துக்களுடன் 

K. கதிர்வேல்                      C. சசிகுமார்                   V. ஸ்ரீதரன்
தலைவர் P3                                      கோட்டச்செயலர் P3                              நிதிச்செயலர் P3

T. தமிழ்ச்செல்வன்
செயல் தலைவர் P3

N. சேஷாத்ரி                             R. சந்திரன்                                      M. ஆரோக்கியசாமி
தலைவர் P4                  கோட்டச்செயலர் P4                            நிதிச்செயலர் P4

S. சரவணன்                       R.  விஷ்ணுதேவன்                         R. ஜெகநாதன்
தலைவர் NFPE GDS     கோட்டச்செயலர் NFPE GDS   நிதிச்செயலர் NFPE GDS



SUCCESS TO THE EFFORTS OF TN NFPE COC ! SUCCESS TO TN P3 CIRCLE UNION !


தமிழக என். எப்.பி .இ . இணைப்புக் குழுவின் வெற்றி  ! 
தமிழக  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் வெற்றி ! !

அன்புத் தோழர்களே ! அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் 17.03.2015 கடிதத்தையும்  நமது மதிப்புக்குரிய  CPMG  அவர்களின் 20.03.2015 தேதியிட்ட  உத்திரவின் நகலையும்   நன்கு படித்துப் பார்க்கவும் ! 

15 ஆண்டு கால  போராட்டத்திற்கு  தற்போது  நமது  வேலை நிறுத்த போராட்டத்தால் கிடைத்த  வெற்றிதான் இது !  

மாநில அலுவலகம்  மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நீண்ட வருடங்களாக DEPUTATION  என்ற பெயரில்   இருந்து வரும் ஊழியர்கள்  அவர்களது சொந்த கோட்டங்களுக்கே  திரும்ப அனுப்பப் படுவார்கள் என்ற உத்திரவே  இது !  

நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று செயலரின் கோரிக்கையை ஏற்று  உத்திரவிட்டுள்ள  CPMG  உயர்திரு. M .S . ராமானுஜன் IP o S  அவர்களுக்கு  மீண்டும்  நன்றி !  இதர கோரிக்கைகளிலும்  நாம்  உறுதியான வெற்றியைப் பெற  வேலை நிறுத்தத்தை தீவிரப் படுத்துங்கள் !

மாநிலச் செயலரின் கடித நகல் !


CPMG  அவர்களின் உத்திரவு  நகல் !




அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் ! 
வேலை நிறுத்த பிரச்சாரக் கூட்டங்கள்  தமிழகம் முழுதும் வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஊழியர்களின் உரிமை காக்கும் போராட்டத்தில்  கரம் இணைவோம்!

இது  பெற்ற சுதந்திரம் பறிபோகாமல்  காத்திட நாம் 
நடத்திடும் போராட்டம் !
உணர்வுள்ள தோழர்களே  ! ஒன்று கூடுங்கள் ! 
சங்கத்தை  முன்னிலைப் படுத்துங்கள் ! 
வேறுபாடுகளை தூக்கி எறியுங்கள் !  
இன்றில்லையேல் என்றும் இல்லை ! 

மிக நீண்ட  கால இடைவெளிக்குப் பிறகு NFPE யின் பெயரால்   9 சங்கங்கள்  ஒன்றிணைந்து  நடத்தும்  சரித்திரம்  இது !  கரம்  சேருங்கள் ! வெற்றி காணுவோம் !



NFPE, Srirangam

MEETING WITH PAY COMMISSION BY NFPE ON 25.03.2015



Saturday, 21 March 2015

SUCCESS TO CIRCLE UNION'S EFFORTS AND NFPE COC STRIKE CALL ! ALL DEPUTATIONISTS THROUGHOUT CIRCLE ARE ORDERED TO RECALL TO THEIR RESPECTIVE DIVISIONS ! CHIEF PMG ISSUED ORDERS BY TODAY NIGHT !


நம்முடைய  வேலை நிறுத்த 
போராட்ட அறிவிப்பிற்கு  மாபெரும் வெற்றி  !

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் !

நம்முடைய அஞ்சல் மூன்றின் வேலை நிறுத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, மண்டல மற்றும் மாநில அலுவலகத்தில்  பல கோட்டங்களில் இருந்து  நீண்ட காலம் DEPUTATION  இல் இருக்கும் ஊழியர்கள்   அந்தந்த கோட்டங்களுக்கு  திருப்பி  அனுப்பப்பட வேண்டும் என்பதே . இன்று  தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில்  நடைபெற்ற CONCILIATORY  MEETING இல்  இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டு  அதன் மீது எழுத்து பூர்வமாக  இன்று பதிவு செய்து  மாநில நிர்வாகத்திற்கு   அளிக்கப்பட்டது . 

இன்று  DEPUTATION  குறித்த கோப்புகள்  மற்றும் ஞாயிறு   பணி  குறித்த பிரச்சினைகள்     நமது  மாநிலத்திற்கு  ADDL  CHARGE  ஆக  இருக்கும் கர்நாடகா CPMG  அவர்களின்  உத்திரவுக்கு அனுப்பப்பட்டு காத்திருப்பில் இருந்தது . ஏனெனில்  அங்கு வருகை புரிந்த  அஞ்சல் வாரிய  உறுப்பினர் அவர்களுடன்  CPMG  CAMP  இல் இருந்ததால்  அதன் மீது முடிவு எடுக்கப் படவில்லை . பிறகு  மாலை 07.00 மணியளவில் முடிவு எடுக்கப்பட்டு  இரவே உத்திரவு அனைத்து  மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டது.  

அதன் படி  புதிதாக  பணியில் சேர்ந்த   PA COக்கள் அனைவரும்  பணி  பயிற்சி முடித்து  பணியில் அமர்ந்த உடன் (APRIL  மூன்றாவது வாரத்தில் ) ஏற்கனவே  CIRCLE  OFFICE  மற்றும்  நான்கு மண்டலங்களிலும்  உள்ள  மண்டல அலுவலகங்களில்  நீண்ட காலமாக DEPUTATION  இல் இருக்கும் ஊழியர்கள்  திருப்பி அனுப்பப் படவேண்டும் .  இந்த செய்தி  மாநில நிர்வாகத்தில் இருந்து  நமக்கு  தெரிவிக்கப்பட்டது  . இதற்கான உத்திரவின் நகல்  நமது  சங்கத்திற்கு  நாளை  அனுப்பப் படும்   என்றும்  தெரிவிக்கப்பட்டது. .

இந்தப் பிரச்சினை  15 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய மாநிலத்தில்  தீர்க்கப்படாமல்  நிலுவையில் இருந்த  பிரச்சினை ஆகும் . பல ஊழியர்கள்  15 ஆண்டுகளுக்கும் மேலாக  DEPUTATION  இல் உள்ளார்கள் என்பதே  இதற்கு ஆதாரம் . இந்த  முடிவு  நம் அனைவரின்  போராட்ட வீச்சிற்கு கிடைத்த வெற்றி என்றாலும்,  இப்படி ஒரு முடிவை   எடுத்த   CPMG  திரு. M .S . ராமானுஜன் , IPoS  அவர்களுக்கு  நம் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம்.

 இந்த ஒட்டு மொத்த உத்திரவின் மூலம்  நம்முடைய  தோழர். S . சுந்தரமூர்த்தி  அவர்களின்  உண்ணா விரதக் கோரிக்கையும்  மதுரை கோட்டத்திற்கு  நிறைவேற்றப்பட்டது  என்பதை மகிழ்வுடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.  அவரும்  தன்னுடைய உண்ணா நிலை போராட்டத்தை  இன்று முடித்துக் கொண்டார்.  அவரது  போராட்டத்திற்கு  நம்முடைய மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் ! இதர கோரிக்கைகளை வென்றடைய  நாம் போராட்ட வீச்சை அதிகப் படுத்துவோம். 

ஊழியர் ஒற்றுமை  ஓங்குக !  
வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

PRESS PHOTOS IN CONNECTION WITH HUNGER FAST

தொழிலாளர் நல உதவி  ஆணையர் முன்நிலையில் வேலை நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தை !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! இன்று ( 20.03.2015) காலை சுமார் 11.00 மணியளவில்  NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழுவின் சார்பில் 9 மாநிலச் செயலர்களும் இதர பொறுப்பாளர்களும்  COC  கன்வீனர் தோழர். J .R . தலைமையில்  தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் மாநில நிர்வாகத்தின் பிரதிநிதியுடன்  வேலை நிறுத்தம்  தொடர்பான கோரிக்கைகளின் மீதான பேச்சு வார்த்தையில்  கலந்து கொண்டனர்.

நம்முடைய  வேலை நிறுத்த நோட்டீசில்  கொடுத்துள்ள  பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதம் அனைத்து மாநிலச் செயலர்களாலும் வைக்கப்பட்டது.  

நிர்வாகத் தரப்பில், விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்ப்பதாக CPMG  அவர்கள் உறுதி அளித்துள்ளதாகவும்  , அதனால் வேலை நிறுத்தம் விலக்கி கொள்ளப் படவேண்டும் என்றும் வேண்டினர்.

நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர் J .R . அவர்கள்,  பிரச்சினைகள் பற்றி எரிவதாகவும்  வேலை நிறுத்த கோரிக்கைகளில் ஒன்றான  விடுமுறை மற்றும் ஞாயிறு நாட்களில்  ஊழியர்கள் பணி  செய்திட உத்திரவிடப்படுவது மனித உரிமை மீறல் என்றும் , வேலை நிறுத்தம் குறித்த பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படும்  தேதியிலேயே  எதிர்வரும் 22.3.2015 மற்றும் 29.03.2015 தேதிகளில் மீண்டும்  பணி செய்திட உத்திரவிடப்பட்டுள்ளதாகவும்  தொழிலாளர் நல உதவி ஆணையர்  முன்பாக புகார் தெரிவித்தார்.  இது மனிதஉரிமை மீறல். நிச்சயம் இது குறித்து தான் தலையிடுவதாகவும்  இது குறிப்பில் ஏற்றப் படும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதுபோல , இன்றைய தேதியில்  மதுரை கோட்டச் செயலர் மூன்றாவது நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாகவும் இது குறித்து நேற்றைய தேதியில்  மதுரை PMG இடம் பேசியும்  முழுமையாக  DEPUTATIONIST  பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும், ஏற்கனவே RJCM , FOUR  MONTHLY  MEETING  , BI MONTHLY MEETING  களில்  எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டிருந்தும்  ஆனால் அவை அப்பட்டமாக மீறப் படுவதாகவும் தெரிவித்தார். மூன்றாவது நாள் உண்ணாவிரதம் உயிர் பிரச்சினை என்பதால்  இன்றே இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு தெரிவிக்கப்படவேண்டும் என்றும்  உரக்கத் தெரிவித்தார். 

இது குறித்தும்  இன்றே முடிவு செய்திட வேண்டி தாம் எழுத்து பூர்வமாக  வலியுறுத்துவதாக தொழிலாளர் நல உதவி ஆணையர் உறுதி அளித்தார். இதர பிரச்சினைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.  

இந்தப் பிரச்சினைகளில்  எதிர்வரும் 24.3.2015 க்குள் CPMG  அவர்கள்  ஊழியர் தரப்புடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தி  உடன்பாடு காண வேண்டும் என்றும், எதிர்வரும் 25.3.2015 அன்று மீண்டும்  அடுத்த கூட்டம்  நடைபெறும்  என்றும் ,  அதில்  நேரடிப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் அறிவித்தார். இந்த பேச்சு வார்த்தைக்கான  MINUTES  உடனே  அளிக்கப்பட்டது. அதன் நகல் கீழே  காணவும் .

இந்தப் பேச்சு வார்த்தை  நம் போராட்டத்தின்  ஒரு பகுதியே . முழுமையல்ல. நாம் எந்த அளவுக்கு வேலை நிறுத்தத்தில் தீவிரமாக இருக்கிறோமோ அந்த அளவுக்கே பிரச்சினைகள்  தீர்ந்திட நிர்வாகம் செவி சாய்க்கும் என்பது  கடந்த கால வரலாறு. 

எனவே உங்களின் போராட்ட தயாரிப்பு வேலைகளை தீவிரப் படுத்துங்கள். வேலை நிறுத்த வீச்சினை அதிகப்படுத்துங்கள் ! வேலை நிறுத்தம் வெல்லட்டும் !


Thursday, 19 March 2015

Declaration of Holiday on 14th April, 2015 - Birthday of 
Dr. B.R. Ambedkar.