தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்நிலையில் வேலை நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தை !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! இன்று ( 20.03.2015) காலை சுமார் 11.00 மணியளவில் NFPE தமிழ் மாநில இணைப்புக் குழுவின் சார்பில் 9 மாநிலச் செயலர்களும் இதர பொறுப்பாளர்களும் COC கன்வீனர் தோழர். J .R . தலைமையில் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் மாநில நிர்வாகத்தின் பிரதிநிதியுடன் வேலை நிறுத்தம் தொடர்பான கோரிக்கைகளின் மீதான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
நம்முடைய வேலை நிறுத்த நோட்டீசில் கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதம் அனைத்து மாநிலச் செயலர்களாலும் வைக்கப்பட்டது.
நிர்வாகத் தரப்பில், விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்ப்பதாக CPMG அவர்கள் உறுதி அளித்துள்ளதாகவும் , அதனால் வேலை நிறுத்தம் விலக்கி கொள்ளப் படவேண்டும் என்றும் வேண்டினர்.
நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர் J .R . அவர்கள், பிரச்சினைகள் பற்றி எரிவதாகவும் வேலை நிறுத்த கோரிக்கைகளில் ஒன்றான விடுமுறை மற்றும் ஞாயிறு நாட்களில் ஊழியர்கள் பணி செய்திட உத்திரவிடப்படுவது மனித உரிமை மீறல் என்றும் , வேலை நிறுத்தம் குறித்த பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படும் தேதியிலேயே எதிர்வரும் 22.3.2015 மற்றும் 29.03.2015 தேதிகளில் மீண்டும் பணி செய்திட உத்திரவிடப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்பாக புகார் தெரிவித்தார். இது மனிதஉரிமை மீறல். நிச்சயம் இது குறித்து தான் தலையிடுவதாகவும் இது குறிப்பில் ஏற்றப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுபோல , இன்றைய தேதியில் மதுரை கோட்டச் செயலர் மூன்றாவது நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாகவும் இது குறித்து நேற்றைய தேதியில் மதுரை PMG இடம் பேசியும் முழுமையாக DEPUTATIONIST பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும், ஏற்கனவே RJCM , FOUR MONTHLY MEETING , BI MONTHLY MEETING களில் எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டிருந்தும் ஆனால் அவை அப்பட்டமாக மீறப் படுவதாகவும் தெரிவித்தார். மூன்றாவது நாள் உண்ணாவிரதம் உயிர் பிரச்சினை என்பதால் இன்றே இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு தெரிவிக்கப்படவேண்டும் என்றும் உரக்கத் தெரிவித்தார்.
இது குறித்தும் இன்றே முடிவு செய்திட வேண்டி தாம் எழுத்து பூர்வமாக வலியுறுத்துவதாக தொழிலாளர் நல உதவி ஆணையர் உறுதி அளித்தார். இதர பிரச்சினைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
இந்தப் பிரச்சினைகளில் எதிர்வரும் 24.3.2015 க்குள் CPMG அவர்கள் ஊழியர் தரப்புடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காண வேண்டும் என்றும், எதிர்வரும் 25.3.2015 அன்று மீண்டும் அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும் , அதில் நேரடிப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் அறிவித்தார். இந்த பேச்சு வார்த்தைக்கான MINUTES உடனே அளிக்கப்பட்டது. அதன் நகல் கீழே காணவும் .
இந்தப் பேச்சு வார்த்தை நம் போராட்டத்தின் ஒரு பகுதியே . முழுமையல்ல. நாம் எந்த அளவுக்கு வேலை நிறுத்தத்தில் தீவிரமாக இருக்கிறோமோ அந்த அளவுக்கே பிரச்சினைகள் தீர்ந்திட நிர்வாகம் செவி சாய்க்கும் என்பது கடந்த கால வரலாறு.
எனவே உங்களின் போராட்ட தயாரிப்பு வேலைகளை தீவிரப் படுத்துங்கள். வேலை நிறுத்த வீச்சினை அதிகப்படுத்துங்கள் ! வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
No comments:
Post a Comment