அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் சி’,
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் – நான்கு
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், GDS-NFPE
திருவரங்கம்
கோட்டம் – 620
006
சுற்றறிக்கை எண்: 8 நாள் : 17.03.2015
26.03.2015
தமிழகம் தழுவிய
ஒரு நாள் வேலை நிறுத்தம்
தோழர்களே! தோழியர்களே!! வணக்கம் !
தமிழகத்தில்,
CORPORATE COMPANY போல
செயல்படும் அஞ்சல் நிர்வாகத்தின் போக்கினை கண்டித்து, தொழிற்சங்க உரிமைகள்
பறிக்கப்படுவதை எதிர்த்து, தொழிற்சங்க போராட்டங்களில் கலந்து கொண்ட
தோழர்களுக்கு தென்மண்டலம், RMS,
AUDIT பகுதிகளில் தொடர்ந்து அளிக்கப்படும் தண்டனைகள் மற்றும் பழி வாங்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, TARGET என்ற பெயரில்
கண்மூடித்தனமான இலக்குகளை நிர்ணயித்து ஊழியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை
எதிர்த்து, CBS/CIS என்ற பெயரில் குறைபாடுகளின் குப்பை மேடாக அஞ்சல் சேமிப்பு வங்கிப்
பகுதி மற்றும் அஞ்சல் காப்பீட்டுப் பகுதி ஆக்கப்படுவதை எதிர்த்து - பொது மக்கள்
சேவை தெரிந்தே சீரழிக்கப்படுவதைக் கண்டித்து,
நாம் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கண்டுகொள்ளாமல் தானடித்த மூப்பாக
செயல்படும் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை மணி அளித்திட, பல சுற்று கலந்துரையாடல்களுக்குப்
பிறகு, கடந்த 06.03.2015 அன்று கூடிய நம்முடைய NFPE தமிழ் மாநில
இணைப்புக் குழு, தமிழக அஞ்சல் பகுதியில் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும்
தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளையும் கோரிக்கைகளாக ஒன்று சேர்த்து மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு
அளிப்பது எனவும், கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 26.03.2015 அன்று தமிழகம்
தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்துவதெனவும் முடிவெடுத்தது.
இதன்
அடிப்படை யில் கடந்த 10.3.2015 அன்று சென்னை அண்ணா சாலையில்
அமைந்துள்ள CPMG அலுவலக வளாகத்தில் NFPE இணைப்புக்குழு சார்பாக ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, வேலை
நிறுத்தத்திற்கான முறையான, சட்டபூர்வமான நோட்டீஸ் மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு
வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 13.03.2015 அன்று திருச்சியில் அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள்
கூட்டம் கூட்டப்பட்டு போராட்ட திட்டம் வகுக்கப்பட்டது.
கோரிக்கைகள்
மாநில
அஞ்சல் நிர்வாகமே !
·
தொழிற்சங்க உரிமைகளை பறிக்காதே ! தொழிற்சங்கங்களை மதித்து
நட !
·
தென்மண்டலம், RMS, AUDIT பகுதிகளில் எடுக்கப்பட்ட
தொழிற்சங்க பழி வாங்கும் நடவடிக்கைகளை/தண்டனைகளை ரத்து செய் !
·
RPLI, RD, SB, SSA, EPOST - TARGET கொடுமைகளை உடனே நிறுத்து !
·
நீண்டகாலமாக PROVISIONAL APPT இல் உள்ள GDS ஊழியர்களை பணி நிரந்தரம் செய்!
·
CBS, CIS, CSI பிரச்சினைகளை உடனே தீர்த்துவை !
பொதுமக்கள் சேவையை சீரழிக்காதே !
·
காலாவதியான கணினி - உபகரணங்களை உடனே மாற்று !
·
ASSESSMENT OF VACANCIES முறையாக செய்து காலி இடங்களை உடனே
நிரப்பு !
·
அஞ்சல், RMS பகுதிகளில் LSG, HSG II, HSG I காலியிடங்களை உடனே நிரப்பு !
·
C.O./R.O./D.O. வில் நீண்டகாலம் DEPUTATIONஇல் உள்ள ஊழியர்களை திருப்பி
அனுப்பு !
·
C.O./ R.O. RPLI/PLI பணிகளில் உள்ள ஊழியர்களை திருப்பி அனுப்பு !
·
2005-2008 இல் குறைக்கப்பட்ட தபால்காரர், MTS பதவிகளை நீதிமன்ற ஆணைப்படி திரும்ப
வழங்கு ! அந்தப் பணியிடங்களுக்கு ஆட்களை உடனே வழங்கு !
·
CL/EL/RH விடுப்புகளில் தபால்காரர்/MTS இடங்களுக்கு
பதிலி அனுமதி !
·
SORTING POSTMAN/HEAD POSTMAN களை பட்டுவாடா பணி செய்திட நிர்ப்பந்திக்காதே !
·
ஈக்காட்டுத்தாங்கல் PARCEL HUBக்கு CONCRETE கட்டிடம் கட்டும் வரை ADAM PARK கட்டிடத்திற்கே பணிகளை திரும்ப
மாற்று !
·
CHECKER-CUM-CASHIER பதவிகளை அனைத்து RMS அலுவலகங்களிலும் திரும்ப வழங்கு !
·
SPCC, CHENNAI க்கு தனியே ஆட்களை வழங்கு !
·
MMS ஊர்திகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு வழங்கு !
·
தனியார் MAIL ஊர்திகளில் பணி புரியும் MAILMAN களுக்கு இருக்கை மற்றும் ஒய்வு அறை வசதிகள்
செய்து கொடு !
·
எழும்பூர் PSO வில் CONCRETE கட்டிடத்தில் ஊழியர் ஓய்வறை,
குளியல் மற்றும் கழிப்பறை கட்டிக் கொடு !
·
மாநில அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு ஊழியர்களை தரக்குறைவாக
நடத்தாதே !
·
TRAINER என்ற பெயரில் OPERATIVE SIDEக்கு DEPUTE செய்யப்பட PA(CO)க்களை திரும்ப அழை !
·
DPA அலுவலக CANTEEN இல் வழங்கப்பட்ட காலை உணவை நிறுத்தாதே !
·
PART TIME/CONTINGENT/CASUAL/MAZDOOR/OS ஊழியர்களுக்கு இலாக்கா உத்திரவுப்
படி 1.1.2006 முதல்
ஊதிய உயர்வு உடனே வழங்கு !
·
சட்ட விரோதமாக மறுக்கப்பட்ட WEEKLY PAID OFF உடனே வழங்கு !
·
இலாக்கா உத்திரவுப்படி 1.09.1993 க்கு முன்னதான CASUAL ஊழியர்களுக்கு GDS பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கு
!
·
CASUAL/MAZDOOR/CONTINGENT ஊழியருக்கும் அடையாள அட்டை வழங்கு
!
மற்றும் வேலைநிறுத்த நோட்டீசில் வைக்கப்பட்ட
இதர
கோரிக்கைகளை நிறைவேற்று !
தொழிலாளர்
ஒற்றுமை ஓங்கட்டும் ! வேலை
நிறுத்தம் வெல்லட்டும் !
போராட்ட வாழ்த்துக்களுடன்
K. கதிர்வேல் C.
சசிகுமார் V. ஸ்ரீதரன்
தலைவர் P3 கோட்டச்செயலர் P3 நிதிச்செயலர் P3
T. தமிழ்ச்செல்வன்
செயல்
தலைவர் P3
N. சேஷாத்ரி R.
சந்திரன் M. ஆரோக்கியசாமி
தலைவர் P4 கோட்டச்செயலர் P4 நிதிச்செயலர் P4
S. சரவணன் R. விஷ்ணுதேவன் R. ஜெகநாதன்
தலைவர் NFPE
GDS கோட்டச்செயலர்
NFPE GDS நிதிச்செயலர் NFPE
GDS
No comments:
Post a Comment