கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
மாபெரும் வெற்றி !
சட்ட பூர்வமான வேலை நிறுத்த நோட்டீஸ் முறையாக வழங்கப்பட்டது !
26.03.2015 அன்று தமிழகத்தில் தேங்கிக் கிடக்கும் கோரிக்கைகளுக்காக
தமிழகம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! நேற்று (10.03.2015) அன்று மதியம் தமிழக NFPE அஞ்சல் - RMS இணைப்புக் குழு சார்பாக 9 சங்கங்கள் , CPMG அலுவலகம் முன்பாக நடத்திய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட 300 தோழர்கள் கலந்து கொண்டது இந்த நிகழ்வின் சிறப்பான அம்சமாகும். இந்த ஆர்ப்பாட்டம் இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். B . பரந்தாமன் (R 4) தலைமையில், தோழர். J . ராமமூர்த்தி (P 3) முன்னிலையில், NFPE அனைத்து மாநிலச் செயலர்களும் மற்றும் அகில இந்திய சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்துகொள்ள எழுச்சியுடன் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர் தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு அனைத்து சங்கங்களின் கோரிக்கைகள் அடங்கிய 26.3.2015 அன்றைய தேதியில் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கான சட்ட பூர்வமான நோட்டீஸ் CHIEF PMG தலைமை இடத்தில் இல்லாத காரணத்தினால் DPS HQ அவர்களிடம் நேரில் வழங்கப் பட்டது. இதன் நகல் PMG,CCR மற்றும் PMG, MM அவர்களுக்கும் அளிக்கப் பட்டது. மேலும் அனைத்து PMG க்களுக்கும் , தொழிலாளர் நல ஆணையருக்கும் முறையாக அனுப்பப் பட்டது.
13.03.2015 அன்று திருச்சியில்
மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டம்
கூட்டத்தின் முடிவில், வேலை நிறுத்தம் குறித்து அடுத்த கட்ட நடவடிக் கைகள் மேற்கொள்ள எதிர்வரும் 13.03.2015 அன்று SRMU சங்கக் கட்டிடம் திருச்சியில் காலை 10.00 மணியளவில் அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு NFPE இன் அனைத்து மாநிலச் சங்கங் களின் மாநில நிர்வாகிகள் அனைவரும் , கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
அனைத்து மண்டலங்களிலும் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் நடத்திடவும் , அதில் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்து கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் அனைத்துக் கோட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் நடத்திடுவதெனவும் அதில் அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் அடுத்த வாரத்தில் இருந்து கலந்துகொள்ளச் செய்வ தெனவும் தீர்மானிக்கப் பட்டது.
எனவே மாநிலச் சங்க நிர்வாகிகள் , வேறு காரணம் எதுவும் கூறாமல் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்களில் கலந்துகொள்ள தயார் நிலையில் இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். வேலை நிறுத்த நோட்டீஸ் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவின் நகல் அனைத்து கோட்ட / கிளைச் செயலர்களுக்கும் தனியே அனுப்பப்படும். வேலை நிறுத்த நோட்டீஸ் கீழே பார்க்கலாம்.
No comments:
Post a Comment