அன்புத் தோழர்களுக்கு ஓர் அவசர , அவசிய வேண்டுகோள்
""""""""""""""""""""""""""""""""""""""""
தமிழக NFPE பேரியக்கத்தின் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS மூன்று , RMS நான்கு சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/கிளைச் செயலர்கள், முன்னணி நிர்வாகிகள், இதர செயல் வீரர்களுக்கு எங்களின் அன்பான அவசர வேண்டுகோள்.
GDS ஊழியர்களுக்கான உறுப்பினர் சரிபார்ப்பு இலாக்காவால் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன் உத்திரவு நகல் மற்றும் உறுப்பினர் சேர்க்கைப் படிவம் whatsapp, Face Book மற்றும் வலைத் தளங்களில் இன்று அனைவரும் அறியும் வண்ணம் வெளியிடப் பட்டுள்ளது.
அஞ்சல் ஊழியர் இயக்கத்தில் NFPE இயக்கமே பெரியது, பிரதானமானது என்பது உங்களுக்குத் தெரியும்.
நம்மால் GDS பகுதியில் உருவாக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு GDS பகுதியில் அங்கீகாரம் பெற்ற ஒரே சங்கமாக மகாதேவய்யா தலைமையில் விளங்கிய AIPEDEU ( தற்போதைய AIGDSU), அவரது தவறான நடவடிக்கைகளால் திசைமாறிப் போனதும் அதன்பின்னர் NFPE ன் கீழ் இல்லாததால் கடந்த10 ஆண்டுகளுக்கும் மேலாக யாருடைய ஆதரவும் இல்லாமல், GDS ஊழியர்கள் பட்ட துன்பங்களும் நமக்கு நன்கு தெரியும்.
வேறு வழியில்லாத நிலையில்தான் கடந்த 2012 ல் GDS ஊழியர்களுக்காக NFPE ன் கீழ் AIPEU GDS என்ற அமைப்பு நம்மால் மீண்டும் உருவாக்கப் பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக அந்த அமைப்பு அங்கீகாரம் பெற இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. தற்போதுதான் அதற்கு விடிவு ஏற்பட்டுள்ளது.
2015 ல் அறிவிக்கப்பட வேண்டிய உறுப்பினர் சரிபார்ப்பு BPEF ன் சதியால் இரண்டு ஆண்டுகள் காலதாமதமாக , நம்முடைய வேலை நிறுத்த அறிவிப்பிற்கு பின்னால் தற்போதுதான் அறிவிக்கப் பட்டுள்ளது.
எனவே NFPE ல் உள்ள உறுப்பு சங்கங்களுக்கு, குறிப்பாக P3,P4 , R3, R4 சங்கங்கள் உடனடியாக செயல்பட வேண்டிய கடமையும் கட்டாயமும் உள்ளது.
உங்கள் கோட்டம்/கிளைகளில் நம்முடைய NFPEன் கீழ் உள்ள AIPEU GDS சங்கத்தில் அதிகப் பெரும் எண்ணிக்கையில் GDS ஊழியர்களை உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டியதே அந்தக் கடமையாகும்.
காலம் எதுவும் கடத்தினால், தடுமாற்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இருக்கும் GDS ஊழியர்கள், முதலில் கேட்பவருக்கு கையெழுத்து இடடுக் கொடுத்திடும் அபாயம் உள்ளது. பின்னர் ஒரு தேதியில் நீங்கள் கையெழுத்துப் பெற்றாலும் அது செல்லாமல் போகும். அவர் Non Member ஆகிவிடுவார்.
எனவே நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது என்னவெனில்,
1. அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாகிகள், SPM மூலம் இன்றே உறுப்பினர் படிவத்தில் GDS ஊழியர்களிடம் விஷயத்தை விளக்கிச் சொல்லி கையெழுத்துப் பெறச் சொல்லுங்கள்.
2. எக்காரணம் கொண்டும் இரண்டு சங்கத்திற்கு கையெழுத்து இடவேண்டாம் என அறிவுறுத்துங்கள். அப்படி செய்தால் எந்த சங்கத்திலும் உறுப்பினர் ஆக முடியாது என்பதை தெளிவாக தெரிவியுங்கள்.
3. உடனடியாக நம் NFPE
சம்மேளனம் மூலம் உறுப்பினர்களுக்கு நாம் செய்த நன்மைகளை தெளிவாக விளக்கி நோட்டீஸ் வெளியிட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் நேரிடையாக சென்று அந்த நோட்டீசை அவர்களிடமே அளித்துப் பேசுங்கள்.
4. இந்த வாரமே சனி மாலையோ அல்லது ஞாயிறு அன்றோ P3, P4 GDS இணைந்த அனைத்து உறுப்பினர் கூட்டத்திற்கு அந்தந்த கிளைகளில் ஏற்பாடு செய்து உடன் உங்கள் பகுதி செயல் பாட்டை முடுக்கி விடுங்கள்.
5. புகார்களுக்கு இடமளிக்கும் வகையில் எந்த நேரத்திலும் தவறான வழிமுறைகளை கையாள வேண்டாம். அது ஒட்டு மொத்த சரிபார்ப்பையும் கெடுத்துவிடும். பொய்ப் புகார் கொடுத்து உறுப்பினர் சரிபார்ப்பை நிறுத்தலாம் என்று கையாலாகாத சிலர் காத்துக் கிடக்கின்றனர்.
அப்படி செய்தால் verification இல்லாமலேயே தாங்களும் தற்காலிக அங்கீகாரம் பெறலாம் என்பதே அவர்களது தீய நோக்கம். நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.
6. தானாகவே எதுவும் நடக்கும் என்றோ , காலம் இருக்கிறது என்றோ அலட்சியமாக இருந்தால், உங்கள் GDS உறுப்பினர் கூட விபரமில்லாமல் அடுத்த சங்கத்திற்கு கையெழுத்து இட்டுவிடும் ஆபத்து இருக்கிறது. அப்புறம் நீங்கள் கையெழுத்து பெற்றாலும் அது செல்லாது.
7.NFPE நிர்வாகி எவரும் வேறு சங்கத்திற்கு மறைமுக ஆதரவு அளிப்பதாக தெரிந்தால, அல்லது ஆதாரபூர்வமாக புகார் வந்தால் அவர்கள் மீது சங்க விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதையும் அன்போடும், அதே நேரத்தில் கடுமையாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது குறித்த NFPE மாபொதுச் செயலரின் ஏற்கனவே அளித்த சுற்றறிக்கையை நிச்சயம் நினைவில் கொள்ளவும்.
புயலெனப் புறப்படுங்கள் !
நமது AIPEU GDS சங்கம் மட்டுமே அங்கீகாரம் பெறும் ; இதர சங்கங்கள் உறுப்பினர் ஆதரவு பெற இயலாது என்ற 1998 நிலையை உருவாக்குங்கள் !
தோழமையுடன்,
NFPE சங்கங்கள்,
தமிழ் மாநிலம்.

வெற்றி நமதே !
வெற்றி நமதே !
தோழமையுடன்,
NFPE சங்கங்கள்,
தமிழ் மாநிலம்.
No comments:
Post a Comment