NFPE

Thursday, 7 November 2013

CIRCLE UNION LETTER TO GENERAL SECRETARY ON SHORTAGE/NON FILLING UP OF VACANCIES/APPOINTMENT BEFORE INDUCTION TRG.


அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! தற்போது CMC மூலம் நடைபெற்ற எழுத்தர் தேர்வில் ஏராளமான காலியிடங்கள்  நிரப்பப் படவில்லை .இதற்கு காரணம் , குறைந்தபட்ச மதிப்பெண் கூட  பல கோட்டங்களில்  தேர்வு எழுதியவர்கள் பெறவில்லை என்று  தெரிவிக்கப் படுகிறது . 

கிட்டத்தட்ட 5.5லட்சம் இளைஞர்கள்  தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் போது, தேர்வில்  குறைந்த பட்ச காலி யிடங்களுக்குக் கூட  ஒருவரும் தேர்வாகவில்லை என்பது  கேலிக்குரிய  விஷயமாகும்.  

இதற்கு முன்னர் நமது இலாக்காவே தேர்வு நடத்தும்போது நேரடி தேர்வுகளில்  அனைத்து காலியிடங்களும் நிரப்பப் பட்டே வந்தன 
என்பது உண்மையாகும் .

மேலும் 2011 மற்றும் 2012 க்கான நேரடி எழுத்தர் தேர்வுகளின் முடிவுகள் இப்போதுதான்  வெளியிடப் பட்டுள்ளன.  இத்தனை காலதாமதத்தினால் , காலியிடங்கள் நிரப்பப் படாமல் ஊழியர்கள் ஆட்பற்றாக்குறையில் சொல்லொணாத்  துயரத்தை அனுபவித்து வருவது கண்கூடு .

எனவே நமது மாநிலச் சங்கத்தின் மூலம்  நமது அகில இந்திய பொதுச் செயலருக்கு  ஒரு விளக்கமான கடிதத்தினை நாம் கோரிக்கையாக அளித்துள்ளோம்.  

1) முதலில்  தேர்வு நடத்திட இனி CMC  நிறுவனத்திற்கு  ஒப்பந்தம் அளித்திடக் கூடாது .அப்படி 2013 க்கான  ஒப்பந்தம் அளிக்கப் பட்டிருந்தாலும் கூட அது உடன் ரத்து செய்யப் பட வேண்டும்.

2)  இனி நேரடி எழுத்தர் தேர்வுகளை STAFF  SELECTION  COMMISSION  இடம்  நடத்திட ஒப்படைக்கலாம்.அல்லது  நமது இலாக்காவே முன்பு 
போல நடத்திடலாம் .

3) முக்கியமாக  தற்போது தேர்வு பெற்றவர்களுக்கு  இன்னும்  CERTIFICATE  VERIFICATION , POLICE  VERIFICATION , MEDICAL  FITNESS  போன்ற FORMALITIES  முடிக்கப் படவேண்டும் . அதன் பிறகு PTC  இல் SEAT  ALLOTMENT  பெற்று  பயிற்சி  முடிக்க வேண்டும். அதன் பின்னரே பணி  நியமனம் செய்ய முடியும். 

மாறாக , ஆட்பற்றாக்குறையை கணக்கில் கொண்டு ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு  RECRUITMENT  இல் செய்தது போல  அவர்களுக்கு உடனடி நியமனம் செய்திட இலாக்கா உத்திரவு பெற கோரியுள்ளோம். அப்போதுதான் தற்போது தேர்வு பெற்றவர்களும் கூட வேறு பணிக்கு செல்லாமல் நமது இலாகாவிலேயே  பணியில்  அமர்வார்கள் . நமக்கும்  ஆட்பற்றாக்குறை பிரச்சினை ஓரளவுக்குத் தீரும் . 

4) மேலும் நமது ஆட்பற்றாகுறைப் பிரச்சினைகளுக்கு  தீர்வு காண  LSG  பதவிகளை முந்தைய SENIORITY  LIST அடிப்படையில் நிரப்புதல் , LR  காலியிடங்களை நிரப்புதல் , தற்போதைய காலியிடங்களுக்கு  விருப்பமுள்ள - தகுதியான  தபால்காரர் /GDS / வெளியாட்களை  அமர்த்த வேண்டியும்   இலாக்கா மட்டத்தில் பேசிட வேண்டி  கோரியுள்ளோம்.

5) காத்திருப்பு பட்டியலில்  தற்போது  பலர் இருப்பதாக  தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அப்படி இருப்பின் அவர்களை மீதமுள்ள காலியிடங்களில் நிரப்பிடவும் தற்போது தனியே கோரியுள்ளோம். 

இது குறித்த  மாநிலச் சங்கத்தின் கடித  நகலை கீழே பார்க்கவும் -
 

 

Tuesday, 5 November 2013

Select List of DR Candidates for the Post of Postal Assistant for the vacancies of Year 2011&12 and Residual GDS Quota Vacancies for the year 2010&11 in Srirangam Division

Candidates selected for Srirangam Division as Postal Assistant

01. Ramesh .L
02. Amrin .A
03. Sree Laljith . S
04. Sangeetha Devi .B

NFPE SRIRANGAM WISHES THEM ALL THE BEST AND GIVES A HEARTY WELCOME TO ALL SELECTED CANDIDATES



Tamil Nadu Teacher Eligibility Test (Paper - II ) 2013 -ல் நடைபெற்ற தேர்வில் நமது கோட்ட உதவிச் செயலரும், பெரம்பலூர் பகுதி Marketing Executive ஆக உள்ள தோழர் P. செல்வகணேசன் அவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.   தோழருக்கு நமது வாழ்த்துக்கள்.  

NFPE, Srirangam

கண்ணீர் அஞ்சலி

திரு V. குமாரகிருஷ்ணன் SP, Ramnadhapuram அவர்களின் தந்தையார் திரு. வேங்கடபதி அவர்கள் இன்று (05.11.2013) மாலை 6 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது இறுதி ஊர்வலம் 06.11.2013 மதியம் 12.30 மணியளவில் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும்.          
NFPE, Srirangam

Exam Final Result 2013 Declared




Friends... Tamilnadu Postal Circle has declared the Result of PA/SA Exam 2013....

The write up along with the result is as follows:

This is regarding Declaration of Result for Direct Recruitment to the cadre of Postal Assistant in Post Offices and Savings Bank Control Organization in Tamilnadu Postal Circle for vacancies of the year 2011-12.


The list of selected candidate is Display h/w. All Pre and Post appointment activity will be carried out by the concerned Postal Divisional Head. Heads.


Click Here to view : 
PA Results   /     SA Result    /    SBCO & ForeignPost

STUDY CAMP AND BI- MONTHLY MEETINGS OF CENTRAL REGION

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

மத்திய மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம்: 

எதிர் வரும் 09.11.2013 அன்று மத்திய மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களின் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற உள்ளது .இது குறித்து ஏற்கனவே அறிவிப்பும் , தற்போது மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கையும் அனைவருக்கும் அனுப்பப் பட்டுள்ளது. எனவே மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறாமல் கலந்து கொண்டு அவரவர் பகுதிப் பிரச்சினைகளை மாநிலச் சங்கத்திடம் அளிக்கவும்.
மத்திய மண்டல தொழிற்சங்க பயிலரங்கு:

 எதிர்வரும் 10.11.2013 அன்று மத்திய மண்டலத்தில் தொழிற்சங்க பயிலரங்கு பெரம்பலூரில் நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பும் அதற்கான மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கையும் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. எனவே மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தங்கள் பகுதியில் இருந்து பெருமளவில் சங்க முன்னோடிகளையும் இளைஞர்களையும் கலந்து கொண்டு பயன் பெறச் செய்திட வேண்டுகிறோம். இலாக்கா விதிகள் குறித்தும் , தொழிற்சங்க வரலாறு , குறித்தும், இலாகாவின் எதிர்காலம் குறித்தும் வகுப்புகள் எடுக்கப் படவுள்ளதால் , அஞ்சல் நான்கின் செயலர்களும், நிர்வாகிகளும் , GDS சங்க செயலர்களும் கூட இந்த பயிலரங்கிற்கு நமது அஞ்சல் மூன்று செயலர்கள் அழைத்து வரலாம் . அவர்களுக்கும் இது ஒரு பயிற்சி பட்டறையாக நிச்சயம் அமையும் என்பது திண்ணம் .
மத்திய மண்டலPMG உடன் இருமாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி

மத்திய மண்டலத்தின்
BI-MONTHLY MEETING எதிர் வரும் 18.11.2013 அன்று நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை மாநில/ மண்டலச் செயலரிடம் எதிர்வரும் 08.11.2013 க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்திட வேண்டப் படுகிறார்கள் .

மாநிலச் செயலர் ,
அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம்.

GOVT. REJECTED ENHANCEMENT OF FIXED MEDICAL ALLOWANCE TO PENSIONERS


Monday, 4 November 2013

அன்புத் தோழர்களுக்கு  இனிய வணக்கம் ! 

 நமது மாநிலச் சங்கத்தின் முந்தைய தீர்மானத்தின் அடிப்படையில் , மதுரை  மற்றும் கோவை மண்டலங்களைத் தொடர்ந்து  மத்திய மண்டலமான 

திருச்சி மண்டலத்தின்  அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட / கிளைச்  செயலர்கள் கூட்டம் எதிர்வரும்  09.11.2013 சனியன்றும் ,  மத்திய மண்டலத்தின் தொழிற்சங்க பயிலரங்கு  எதிர்வரும் 10.11.2013 ஞாயிறு அன்றும் 

கீழே காணும் இடத்தில்  திருவரங்கம் கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன .


IFPAAW Rural workers Education Centre, 
Trichy - Chennai high road,

Thuraimangalam, Four Road, Perambalur - 621 220

நமது முன்னாள் பொதுச் செயலரும் , மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு தலைவருமான தோழர். KVS  அவர்கள் இலாக்கா விதிகள்,  நடத்தை விதிகள், தண்டனை விதிகள் , பாதுகாப்பு விதிகள் உள்ளிட்டவைகளை  POWER  POINT  வடிவில் உங்களுக்கு வழங்கிட உள்ளார்கள் என்பது ஒரு உபரிச் செய்தி . 

இது தவிர  STUDY  MATERIALS  மதுரை, கோவை மண்டலக் கூட்டங்களில்  தந்ததை விட அதிக  அளவில் , பல புதிய விபரங்களுடன் உங்களுக்கு அளிக்கப் பட உள்ளது . ஆகவே  மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் பெருமளவில் நிர்வாகிளை உள்ளடக்கிய , இளைஞர்களையும் , தோழியர்களையும் கலந்து கொண்டிட  ஏற்பாடுகளை  இப்போதிருந்தே செய்திட வேண்டுகிறோம். 

கோட்ட/ கிளைச் செயலர்கள்  கோட்ட அளவில்  அதிகாரியிடம் எடுக்கப் பட்டும் தீர்க்கப் படாமல்   பகுதியில் தேங்கிக் கிடக்கும் ஊழியர்  பிரச்சினைகளை  பட்டியலிட்டு , முழு விபரங்களுடன்  தங்களுடைய LETTER  PAD  இல் TYPE  செய்து  கூட்டத்திற்கு எடுத்து வரவேண்டும் என்று கண்டிப்பாக கோரப்படுகிறது . அதுபோல  அனைத்து கோட்ட/ கிளைச் செயர்களும்  தவறுதல் இன்றி கண்டிப்பாக இந்த இரண்டு நாட்கள் நிகழ்விலும் கலந்துகொண்டிட வேண்டும் என்று அறிவிக்கிறோம்.

மதுரை மற்றும் கோவை மண்டலங்களில் செய்தது போலவே உணவு மற்றும் இதர ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப் படுகின்றன  .  அவசியம் இளைய தோழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். 

இந்த செய்தியையே முன்னறிவிப்பாகக் கொண்டு இதனை பார்க்கும் தோழர்கள் , இதர தோழர்களுக்கும் இந்த விபரங்களை தெரிவித்திட வேண்டுகிறோம்.

நிகழ்விடம்  - ஏற்பாடு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள கீழ்க்காணும் தோழர்களை தொடர்பு கொள்ளவும் :-

1. தோழர். T.தமிழ்ச் செல்வன் , கோட்டச் செயலர் -   9965428382
2. தோழர். C.சசிகுமார், செயல் தலைவர்  - 9442234938
3. தோழர். K.ராஜூ , போஸ்ட் மாஸ்டர் , தென்னூர் - 9994247485

நன்றியுடன் 
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.