NFPE

Sunday, 24 August 2014

AIPEU Gr.C (CHQ) - Central Working Committee Meeting - Ongole (A.P) on 22.08.2014 to 24.08.2014

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். 

கடந்த 22.08.2014 முதல் 24.08.2014 வரை ஆந்திர மாநிலம்  ஓங்கோல் நகரில்  நமது அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.M.கிருஷ்ணன்  அவர்கள்  எதிர்வரும் 31.08.2014 அன்று அரசுப் பணி  நிறைவு பெறுவதால் , நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலராக தற்போது பணியாற்றி வரும்   

தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய 
தோழர். N .S .என்று  அனைவராலும் அன்போடு அழைக்கப் படும் 
தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள்  


நமது அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப்  பொதுச் செயலராக 

ஏகமனதாக அறிவிக்கப் பட்டார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திறமையானவர். அறிவாற்றல் மிக்கவர்.  நிச்சயம் இவரது காலத்தில்  நமது அகில இந்திய சங்கப் பணி  மேலும் மெருகேறும் என்பதில்  ஐயமில்லை. 

இவரது பணி  சிறக்க நம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

NFPE, Srirangam

Friday, 22 August 2014

கண்ணீர் அஞ்சலி 

  துறையூர் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சலக எழுத்தராக பணிபுரியும் தோழர் த. சுரேஷ்பாபு அவர்களின் தந்தையார் திரு. தனபால் அவர்கள் இன்று சிவலோக பதவி அடைந்தார்கள் என்பதை மிக்க வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.  நாளை (23.08.2014) மதியம் அன்னாரது இறுதி ஊர்வலம் அவர்களது இல்லத்தில் இருந்து நடைபெறும்.



NFPE, Srirangam

Thursday, 21 August 2014

CIRCLE UNION ON STAFF MATTERS

          சென்னை GPO

சென்னை GPO  வில் எழுத்தராக பணி புரிய தேர்வுக்குள்ளான தோழியர். R . ரிஸ்வான் பேகம் என்பவர் INDUCTION  TRAINING  இல் PTC , மதுரையில் இருந்த போது கடந்த 06.08.2014 அன்று திடீரென்று அவரது கணவர் அகால மரணமடைந்ததால் விடுப்பெடுத்து சென்னை வந்தார்.  அவரது கணவரின் இறுதிச் சடங்குகள் முடிந்து மீண்டும் அவர் PTC க்கு செல்லக் கோரியபோது , அவருக்குண்டான இரண்டு நாள்  விடுப்பு தாண்டியதால் அனுமதிக்க இயலாது என்று  PTC  யில் மறுத்துவிட்டனர்.  அதிகப்படியான விடுப்புக்கு ஈடாக பணிப்  பயிற்சி நீட்டிப்பு செய்யக் கோரியும் நிர்வாகம் ஏற்கவில்லை. 

இந்தப் பிரச்சினை குறித்து அந்தத் தோழியர் நமது GPO கிளைச் செயலர் தோழர். முரளி மூலம்  மாநிலச் சங்கத்தை அணுகி உதவிட வேண்டினார்.  எனவே நம் மாநிலச் செயலர் விடுமுறை நாளில் தொலைபேசியில்  நமது PMG CCR  அவர்களை அழைத்துப் பேசி  உதவிட வேண்டினார். PMG CCR அவர்களும்  PTC  நிர்வாகம் தனது    நிர்வாக வரம்புக்குள் இல்லையென்ற போதிலும் , பாதிக்கப்பட்ட பெண் தோழியரின்  சூழ்நிலையை கருத்தில் கொண்டு  அவருக்கு உதவிடவேண்டி  உடன் PTC  நிர்வாகத்துடன் பேசி அதற்கான ஆவன ஏற்பாடுகளை செய்தார்.  

அந்தத் தோழியரும்  தனது தந்தையாருடன் உடன் கிளம்பி மதுரை சென்றார். அங்கு  அவர் மீண்டும் பணிப்  பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப் பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார் என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரச்சினை    தனது அதிகார வரம்புக்குள் இல்லாத போதிலும்,  சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களிலும்  கூட, இதில்  ஈடுபட்டு உதவிய  PMG, CCR  அவர்களின் மனிதாபிமானம் பாராட்டத்தக்கது. PMG, CCR  திரு . மெர்வின்  அலெக்சாண்டர் அவர்களுக்கு  அந்த பெண் ஊழியர் சார்பிலும், சென்னை GPO கிளை சார்பிலும்  நம் மாநிலச் சங்கம் சார்பிலும்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

திருப்பத்தூர்  கோட்டம் 

திரு . அய்யாக்கண்ணு அவர்கள் திருப்பத்தூர் கோட்ட கண்காணிப் பாளராக இருந்த காலத்தில் நமது NFPE  தொழிற்சங்க இயக்கத் தோழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட  நிர்வாக வன்முறை மற்றும் தொழிற்சங்கத் தோழர்கள் பழி வாங்கப் படுவது  குறித்து  பல செய்திகள் அந்த நேரத்தில் நம் மாநிலச் சங்கம் வெளியிட்டதை நினைவு கொள்க. அந்த நேரத்தில் PMG, WR ஆக இருந்த திரு. நந்தா அவர்களிடம் பிரச்சினையை எடுத்துச் சென்று பேசி பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும்,  பொய்யான குற்றச் சாட்டுக்கள் கூறி அல்லது சிறிய பிரச்சினைகளுக்கு கூட   நம் தோழர்கள் பலர் விதி 16 மாற்றும் விதி 14 இன் கீழ் குற்றப்பத்திரிகை அளித்து  தண்டனை வழங்கப் பட்டார்கள்.

அதில் தோழர். ராஜேந்திரன் என்பவர்  இளைய தோழர்.   அவர் மீது  ஒரு சிறிய தவறுக்கு மிகப் பெரிய அளவில் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு விதி 14 இன் கீழ்  அவருக்கு  COMPULSORY  RETIREMENT  வழங்கப்பட்டது.  இப்படி இளைய வயதிலேயே பாதிக்கப்பட்ட தோழரின் APPEAL  கூட  மண்டல அலுவலகத்துக்கு  உடன் அனுப்பப்படவில்லை.  

கடந்த இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான  பேட்டியின் போது இந்த  பிரச்சினை குறித்து  நாம்பேசி அந்தத் தோழர் பழி வாங்கப் பட்டதை எடுத்துக் கூறினோம். அதன் மீது  தற்போது ஆவன நடவடிக்கை எடுக்கப் பட்டு  அந்தத் தோழரின் தண்டனை குறைக்கப்பட்டு  அவர் தற்போது  பணியில் சேர உத்திரவிடப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பிரச்சினையின்  தன்மையை உணர்ந்து மனிதாபிமானத்துடன்  நடவடிக்கை எடுத்த  மேற்கு மண்டல அதிகாரிகளுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றி. 

2011-CENSUS - RECLASSIFICATION OF CITIES/TOWNS GRANT OF HIGHER RATE OF HRA/TRANSPORT ALLOWANCE FINANCE MINISTRY'S REPLY TO SECRETARY GENERAL CONFEDERATION

 
 

Sunday, 17 August 2014

Saturday, 16 August 2014

68 - வது சுதந்திர தின விழா


  15.08.2014 அன்று 68 - வது சுதந்திர தின விழாவானது திருவரங்கம் தலைமை அஞ்சலக வளாகத்தில் திருவரங்கம் தலைமை அஞ்சலக அதிகாரி திரு.திரவியராஜ் மற்றும் திரு ராமராஜு  அவர்களின் தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள் திருமதி சந்திரபிரபா மற்றும் திரு காசிவிஸ்வநாதன் ஆகியோரின் முன்னிலையில் நமது கோட்டத்தில் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்ற மூத்த தோழர் திரு R. பாலசுப்ரமணியன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள்கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருவரங்கம் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பெரும்பான்மையாக கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.





துறையூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் துறையூர் கிழக்கு துணை கண்காணிப்பாளர் திரு. முருகேசன் அவர்களின் தலைமையில், துறையூர் மேற்கு உட்கோட்ட ஆய்வாளர் திரு. குருசங்கர் அவர்களின் முன்னிலையில் துறையூர் தலைமை அஞ்சலக அதிகாரி திரு இராஜேந்திரன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.  அதன் பின் துறையூர் தலைமை அஞ்சலகத்தில் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் 70 - க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அனைவராலும் நடப்பட்டன. துறையூர் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பெரும்பான்மையாக கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.










பெரம்பலூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் தலைமை அஞ்சலக அதிகாரி பொறுப்பில் இருக்கும் திரு சுந்தரராஜன் Accountant அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.  பெரம்பலூர் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பெரும்பான்மையாக கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.

காட்டுபுத்தூர் துணை அஞ்சல் நிலையத்தில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி துணை அஞ்சலக அதிகாரி திரு க.கதிர்வேல் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.



NFPE, Srirangam