DOWNLOAD ADMIT CARD FOR POSTMAN/MAILGUARD EXAM 2014 - DELHI
CIRCLE (Click the link below for details)
All India Postal Employees Union - Group 'C' - Srirangam Division - 620 006. email id: nfpesrirangam@gmail.com
NFPE
Thursday, 18 December 2014
Monday, 15 December 2014
Thursday, 11 December 2014
வாழ்வா ? சாவா ? போராட்டம்
WHETHER DEPARTMENT OF POSTS TO BE CORPORATISED ? DANGER AHEAD ?
வாழ்வா ? சாவா ? போராட்டம்
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . நாம் நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே நடத்திய நான்கு மண்டலங்களின் பயிற்சி வகுப்பில்
நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலரின் தலைப்பான " அஞ்சல் துறையின் எதிர்காலமும் நம் தொழிற் சங்க கடமையும் " என்ற தலைப்பில் நம் துறை எதிர்காலத்தில் BSNL போல CORPORATION ஆக்கப் பட்டு தனியார் மயத்தை நோக்கி செல்ல உள்ளது என்பதை சுட்டிக் காட்டி வந்துள்ளோம் .
NATIONAL POSTAL POLICY 2012 இன் அடிப்படையிலும் I.T. MODERNISATION PROJECT 2012 இன் அடிப்படையிலும் அரசின் இந்த திரை மறைவுத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதன் ஆபத்தை தெளிவாகவே சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.
தற்போது " TASK FORCE ON LEVERAGING THE POST OFFICE NETWORK " என்பது அமைக்கப்பட்டு அதன் அறிக்கையும் அரசுக்கு அளிக்கப்பட்டு விட்டது. நாம் எதிர்பார்த்தபடியே நம் துறையை CORPORATISE செய்திட அதில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது " NOW THE CAT IS JUMPED OUT OF THE BAG " என்ற மரபுச் சொல்லின் (IDIOM) அடிப்படையில் நம்முடைய மாநிலச் சங்கம் ஏற்கனவே கூறி வந்த செய்தி உண்மை என அறியப்படுகிறது .
இந்திய அஞ்சல் துறை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு 'INDIA POST (FINANCIAL AND OTHER SERVICES) CORPORATION என்று மாற்றப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இது COMPANY சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
இதனை ஒட்டியே நம்முடைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன
மாபொதுச் செலாளர் தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் கீழே காணும் கட்டுரையை நமக்கு அளித்துள்ளார். முழுவதும் இதனை படித்திட நாம் வேண்டுகிறோம்.
அரசின் இந்த மோசமான , நம்முடைய இலாகாவையே தனியாருக்கு தாரை வார்த்திடும் முயற்சியை நாம் முறியடித்திட வேண்டும். தொடர் போராட்டங்களை நாம் நடத்திட வேண்டிய சூழ்நிலையில் தற்போது இருக்கிறோம். இதனை தெளிவாக அடிமட்ட ஊழியர்கள் வரை கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.






Wednesday, 10 December 2014
Subscribe to:
Posts (Atom)






























