NFPE

Thursday 11 December 2014

வாழ்வா ? சாவா ? போராட்டம்

WHETHER DEPARTMENT OF POSTS TO BE CORPORATISED ? DANGER AHEAD ?

வாழ்வா ? சாவா ? போராட்டம் 

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . நாம்  நம்முடைய  மாநிலச் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே நடத்திய   நான்கு மண்டலங்களின் பயிற்சி வகுப்பில்
 நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலரின் தலைப்பான   " அஞ்சல் துறையின்  எதிர்காலமும்  நம் தொழிற் சங்க கடமையும் " என்ற தலைப்பில் நம் துறை எதிர்காலத்தில்  BSNL  போல CORPORATION ஆக்கப் பட்டு தனியார் மயத்தை நோக்கி செல்ல உள்ளது என்பதை சுட்டிக் காட்டி வந்துள்ளோம் . 

NATIONAL POSTAL POLICY 2012 இன் அடிப்படையிலும்    I.T. MODERNISATION PROJECT 2012 இன் அடிப்படையிலும்   அரசின்  இந்த திரை மறைவுத் திட்டம்  நிறைவேற்றப்பட உள்ளதன் ஆபத்தை தெளிவாகவே  சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

தற்போது " TASK  FORCE ON LEVERAGING  THE POST OFFICE NETWORK "  என்பது அமைக்கப்பட்டு அதன் அறிக்கையும் அரசுக்கு அளிக்கப்பட்டு விட்டது.  நாம் எதிர்பார்த்தபடியே  நம் துறையை  CORPORATISE  செய்திட அதில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது  " NOW THE CAT IS JUMPED OUT OF THE BAG "  என்ற  மரபுச் சொல்லின் (IDIOM) அடிப்படையில்  நம்முடைய மாநிலச் சங்கம் ஏற்கனவே கூறி வந்த  செய்தி உண்மை  என அறியப்படுகிறது .

இந்திய அஞ்சல் துறை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு  'INDIA POST (FINANCIAL AND OTHER SERVICES) CORPORATION என்று மாற்றப்பட  பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இது COMPANY  சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

இதனை ஒட்டியே நம்முடைய  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன 
மாபொதுச் செலாளர்  தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் கீழே காணும்  கட்டுரையை நமக்கு அளித்துள்ளார்.  முழுவதும்  இதனை படித்திட நாம் வேண்டுகிறோம். 

அரசின் இந்த  மோசமான , நம்முடைய இலாகாவையே தனியாருக்கு தாரை வார்த்திடும்  முயற்சியை நாம் முறியடித்திட  வேண்டும். தொடர் போராட்டங்களை நாம் நடத்திட வேண்டிய  சூழ்நிலையில்   தற்போது  இருக்கிறோம். இதனை தெளிவாக அடிமட்ட ஊழியர்கள் வரை கொண்டு செல்ல வேண்டியது  நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.





No comments:

Post a Comment