அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! நாளை (27.02.2015) அன்று மண்டல அலுவலகங்கள் முன்பாக நடத்தப்பட அறிவிக்கப்பட்ட PJCA மற்றும் தமிழ் மாநில அஞ்சல் மூன்று /GDS சங்கங்களின் தார்ணா போராட்டத்திற்கு முதலில் அனுமதி வழங்குவதாக இருமாதங்களுக் கான பேட்டியின் போது நம்முடைய மாநிலச் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்த மதுரை மண்டல PMG அவர்கள் மறுநாள் எந்தக் கோட்டத் திலும் விடுப்பு வழங்கிடக் கூடாது என்று தனது முடிவை மாற்றி அறிவித்தார்.
மேலும் மாலை மண்டல அலுவலக வளாகத்தில் தார்ணா போராட்டம் நடத்திட அனுமதி மறுத்து நமது அஞ்சல் மூன்று மண்டலச் செயலருக்கு EMAIL செய்தி அனுப்பியுள்ளதாக நம்முடைய மாநில உதவிச் செயலர் தெரிவித்தார் . எனவே இது குறித்து தென் மண்டலச் செயலர், மாநிலச் செயலர் மற்றும் மாநிலத் தலைவர் முறையே /தொலைபேசியில் தென்மண்டல PMG அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு கேட்டபோது அவரது நிலையில் இருந்து இறங்கி வர மறுத்து விட்டார். உடன் CPMG ADDL CHARGE அவர்களை (கர்நாடகா மாநிலம்) பெங்களூருவில் தொலை பேசியில் தொடர்பு கொள்ள மாநிலச் செயலர் முயன்றபோது , அவர் அங்கில்லை என்றும் கேரளா மாநிலத்திற்கும் ADDL CHARGE என்பதால் அங்கு சென்றுள்ளார் என்றும் மாலை 05.00 மணிக்கு திரும்பலாம் என்றும் தெரிவித்தார். எனவே மாலை 05.30 மணியளவில் மீண்டும் தொடர்பு கொண்டபோது அதுவரை அவர் வரவில்லை என்றும் விமானம் காலதாமத மாக வருகிறது என்றும் தெரிவித்தார்கள் . மாலை 06.30 வரை அவர் வந்து சேரவில்லை என்று தெரிவித்தார்கள்.
எனவே நாளை (27.02.2015) அன்று தென் மண்டலத்தில் , மண்டல அலுவலகம் முன்பாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தார்ணா போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தென் மண்டலத்தை சேர்ந்த மாநிலச் சங்க நிர்வாகிகளால் அறிவிப்பு செய்யப்பட்டது.
அனுமதி மறுத்ததால் வாய் மூடி மௌனியாக இருக்க மாட்டோம் !
எனவே தென் மண்டல PMG அவர்களின் அடக்கு முறையைக் கண்டித்தும் தொழிற் சங்க பழி வாங்கும் போக்கை கண்டித்தும் PJCA / மாநிலச் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை ஆர்ப்பாட்டமாக மாற்றி தென் மண்டலத்தில் அனைத்து கோட்ட/ கிளைகளிலும் 27.02.2015 மாலை கண்டன ஆர்ப்பாட்டமாக நடத்திடக் கேட்டுக் கொள்கிறோம். NFPE யின் இதர சங்கங்களும் இதற்கு அதரவு தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.
இந்த அடக்குமுறையை நம் மாநிலச் சங்கம் நிச்சயம் அனுமதிக்காது. CPMG அலுவலக வாயிலில் நாளை (27.02.2015) அன்று நடைபெற P 3 மற்றும் GDS சங்கங்களால் அறிவிக்கப் பட்டுள்ள தார்ணா போராட்டம் கண்டனப் போராட்டமாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போல இதர மண்டலங்களிலும் நம்முடைய தார்ணா போராட்டம் அஞ்சல் மூன்று மற்றும் GDS சங்கங்களால் கண்டனப் போராட்டமாக நடத்திட மாநிலச் சங்கம் அறிவிக்கிறது. NFPE யின் இதர சங்கங்களும் இதற்கு ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.
மாலையில் PMG SR அவர்களின் தொழிற் சங்க விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், தென் மண்டலத்தில் நடைபெற்றுள்ள ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்தும் இதர கோரிக்கை களுடன் வேலை நிறுத்த நோட்டீஸ் மாநில நிர்வாகத்திற்கு வழங்கப்படும். வேலை நிறுத்தத் திற்கான தயாரிப்பு வேலைகள் 02.03.2015 PJCA தார்ணாவுக்குப் பிறகு அறிவிக்கப்படும். இதர போராட்ட வியூகங்கள் குறித்து 27.02.2015 மாலை வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப் பட்டபின்னர் அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் தலைமையகத்தில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகள் , அகில இந்திய சங்க நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கூடி முடிவு செய்யப்படும்.
"தாக்குண்டால் புழு கூட
தரை விட்டு தீ துள்ளும்
கழுகு தூக்கினும் குஞ்சுக்காக
துடித்து எழும் கோழி
சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது
முயல் கூட திருப்பித்தாக்கும்
சாக்கடை புழுக்களல்ல நாங்கள்
சரித்திரத்தின் சக்கரங்கள்"
அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது.
கிளர்ந்தெழுங்கள்,உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி
பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையேநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது!
அடக்குமுறை வென்றதாக வரலாறு உலகில் இல்லை !
ஆணவங்கள் வென்றதாக வரலாறு இல்லவே இல்லை !
உழைக்கும் சக்தியின் முன்னே ,
அவர்களின் உரிமைக் குரல்களின் முன்னே
சமஸ்தானங்கள் சரிந்ததாகவே வரலாறு !
கிளர்ந்தெழுவோம் ! அடிமை விலங்கொடிப்போம் !
புதிய வரலாறு படைப்போம் !
No comments:
Post a Comment