NFPE

Saturday, 7 February 2015

DECISIONS OF THE SOUTH ZONE NC JCM JCA MEETING HELD ON 05.02.2015 AT O/O SRMU, CHENNAI


JCM ( NATIONAL COUNCIL ) - JCA  
தென் பிராந்திய  (SOUTH ZONE)  ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள்  

கடந்த 05.02.2015 அன்று JCM (NATIONAL COUNCIL) இல் அங்கம் வகிக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் தென் பிராந்திய JCA  கூட்டம், சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள  SRMU  பொதுச் செயலரின் அலுவலகத்தில் மதியம் சுமார் 02.30 மணியளவில் துவங்கி சிறப்பாக நடைபெற்றது.  கூட்டத்திற்கு JCA  தென்பிராந்திய  CONVENER மற்றும்  SRMU சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். N . கண்ணையா அவர்கள்  தலைமை வகித்தார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் ரயில்வே பகுதியில் SRMU , பாதுகாப்புத் துறையில்  AIDEF  மற்றும் INDEF  சங்கத்தின் பிரதிநிதிகள்,  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பகுதியில்   INCOME TAX, CUSTOMS , AG'S OFFICE,  SHASTRI BHAVAN COC, RAJAJI BHAVAN COC, KALPAKKAM ATOMIC EMPLOYEES ASSOCIATION    மற்றும் அஞ்சல் பகுதியின் NFPE  , FNPO   சம்மேளனங்களின்  மாநிலச் செயலர்கள்  உள்ளிட்ட பல்வேறு  மத்திய அரசு ஊழியர் சங்கங்களின்   நிர்வாகிகள்  சுமார் 40 பேர்  கலந்துகொண்டனர்.

அஞ்சல் பகுதியில் இருந்து   NFPE  சார்பாக  COC  கன்வீனர் தோழர். J .R . NFPE  உதவிப் பொதுச் செயலாளர் தோழர்  ரகுபதி, அஞ்சல் மூன்று மத்திய சங்கத்தின் செயல் தலைவர்  தோழர். N .G ., RMS  மூன்றின் மாநிலச் செயலர் தோழர்.  ரமேஷ், RMS  நான்கின் மாநிலச் செயலர் தோழர். பரந்தாமன் , CASUAL  LABOUR சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். சிவகுருநாதன் , NFPE  GDS  சங்கத்தின் மாநில உதவிச் செயலர்   தோழர். மகாலிங்கம் (பவானி) உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.  

கூட்டத்தில்  எடுக்கப் பட்ட முடிவுகள் :-

1. கூட்டத்தில் JCA  முறையாக  அமைக்கப்பட்டது. அதன் கன்வீனராக  SRMU  வின் பொதுச் செயலாளர் தோழர். கண்ணையா அவர்களும் உறுப்பினர்களாக  AIDEF , INDEF சார்பாக  தலா ஒருவர்  , மகா சம்மேளனம் சார்பாக  தோழர். துரைபாண்டியன் , NFPE  சார்பாக தோழர். J . ராமமுர்த்தி FNPO  சார்பாக தோழர். குமார்  ஆகியோர் கொண்ட  CORE  COMMITTEE அமைக்கப்பட்டது.

2. எதிர்வரும் MARCH  15 ஆம் தேதிக்குள்  சென்னை காமராஜர் அரங்கத் தில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின்   முழு நாள் CONVENTION  நடத்துவது. அதில் தமிழகம்  முழுவதும் உள்ள  அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 10,000 பேர் கலந்துகொள்ளச்  செய்வது.

3. எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று  அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் சார்பாக புது டெல்லியில்  ஏழாவது ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகள் , ரயில்வே, பாதுகாப்புத் துறையில் தனியார் மயம் , அஞ்சல் பகுதியில் CORPORATISATION இவற்றை எதிர்த்து   நடத்தப்பட உள்ள  மாபெரும் பேரணியில் நாடு முழுதும் இருந்து ஊழியர்களை திரட்டுவது.  உடனடியாக பயணத்திற்கான ரயில் முன்பதிவு செய்திட ஊழியர்களை  தயார் படுத்துவது.

4. மாவட்டங்கள் மற்றும் நகரங்களில்  அனைத்து மத்திய அரசு ஊழியர் அடங்கிய JCA  அமைப்பது. 

5.குறுகிய இடைவெளியில்  அடுத்த  CORE  COMMITTEE  கூட்டத்தை கூட்டி விவாதித்து   தயாரிப்பு பணிகளை மேற்கொள்வது .

மத்திய அரசு ஊழியர்களின் உடனடி அடிப்படை கோரிக்கைகளான  பஞ்சப்படி இணைப்பு, இடைக்கால நிவாரணம்  ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளதாலும் , தீவிரமாக  மத்திய அரசுப் பகுதியில் தனியார் மயம்  மற்றும் CORPORATISATION நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாலும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும்  இணைந்த தீவிர போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்றும் தேவையானால் ஆயிரக் கணக்கில் ஊழியர்கள் சிறை நிரப்பவும் தயாராக வேண்டும் என்றும்  தோழர். கண்ணையா அவர்கள்  இறுதியாக  கேட்டுக்கொண்டார்.   கூட்டம்  மாலை 4.00 மணியளவில் முடிவுற்றது.

தோழர்களே ! அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு  தயாராக வேண்டியது  காலத்தின் தேவை.  அனைவரும் அதற்கான நடவடிக்கைகளில்  ஈடுபட வேண்டுகிறோம். இணைந்த  சுற்றறிக்கை  JCA  சார்பாக விரைவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment