NFPE

Wednesday 14 December 2011

TRADE UNION STUDY CAMP AT SWAMIMALAI

TN TRADE UNION STUDY CAMP - A GRAND SUCCESS

கடந்த 11  மற்றும் 12 ஆம் தேதிகளில் குடந்தை அருகேயுள்ள சுவாமிமலையில் தமிழக அஞ்சல் மூன்றின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான  இரண்டு நாள் தொழிற் சங்க பயிற்சி முகாம் வெகு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும்
நடைபெற்றது.

அந்தந்த நிகழ்ச்சிகளும்,  நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டவாறே சரியான  
நேரத்தில் துவங்கப் பட்டு சரியான நேரத்தில்  முடிக்கப்பட்டது - இதுவரை இல்லாத புதுமை. 

அதுபோலவே கலந்துகொண்ட அனைத்து சார்பாளர்களும், பார்வை யாளர்களும்  ஒரு நிமிடம் கூட வெளியில் எங்கும் செல்லாமல்
அரங்கத்தில் அமர்ந்து தொடர்ந்து  விவாதங்களில் கலந்துகொண்டது
என்றும் இல்லாத ஒரு நிகழ்வு ஆகும். 

மேலும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டது போல   வகுப்பு எடுப்போர் 
தவிர வேறு எவரும்  மேடையில் நின்று உரை நிகழ்த்தி வகுப்பின்  நோக்கத்தை   திசை திருப்பாதிருந்தது, அதைவிட சிறப்பு. 

எரிந்த கட்சி - எரியாத கட்சி  என்பது போல , அடுத்தவரைத் தாக்கிப்  பேசி  , நிகழ்ச்சியின்  நேரத்தை ஒருவர் கூட வீணடிக்கவில்லை என்பது பெரு மகிழ்ச்சி. 

இரண்டு நாள் நிகழ்ச்சியிலும்  கிட்டத்தட்ட 84 பேர் விவாதங்களில் கலந்துகொண்டார்கள் என்பது நல்ல  வளர்ச்சி. 

இவையெல்லாம் ஆரோக்கியமான தொழிற் சங்கப் பயணத்தின்
தொடக்கம். இதுவே இந்த நிகழ்ச்சியின்  வெற்றி ஆகும்  .  

இந்திய தபால் தந்தி  தொழிற்சங்க வரலாறை , நம் முன்னோர்களின் தியாகங்களை , தந்த உயிர்ப் பலிகளை , அதனால் இன்று நாம்
பெற்றிருக்கும் உரிமைகளை விளக்கியும் , எதிர் வரும் 17.01.2012
முதல் தொடங்க விருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தின்
தேவை குறித்தும்  நமது சம்மேளன மா பொதுச் செயலர் தோழர் 
கிருஷ்ணன் அவர்கள் அளித்த வகுப்பு பல தோழர்களை  உணர்ச்சிப் பிழம்பாக்கியது.

 மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் , தேசிய கூட்டு ஆலோசனை 
குழு , இலாக்கா கூட்டு ஆலோசனை குழு , பொது தேவைகள் , கூட்டு இயக்கங்கள் மத்திய அரசின்  தனியார்  மய மோகம் , இதனால் அஞ்சல் துறையில் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தோழர்  K.R.  அவர்கள் எடுத்த வகுப்பு  மிகச் சிறப்பு .

இலாக்காவின் இன்றைய நிலைமை , MCKENSY இன்  தாக்கம் , RMS
மூடல் ,அஞ்சலக மூடல், CADRE  RESTRUCTURING  நிலை,   HSG I RECTT.
RULES, PM காட்றே III  யின் நிலை,  GDS  ஊழியர் பிரச்சினைகளில்
இலாக்காவின் நிலை, JCM தேப்த்ல் COUNCIL  இல்  விவாதத்தில்
இருக்கும்  பிரச்சினைகள் , எதிர் வரும் காலவரை யற்ற வேலை
நிறுத்தத்தில் நாம் வைத்திருக்கும் கோரிக்கைகள் குறித்து  நமது 
பொதுச் செயலர் தோழர் KVS அவர்கள் எடுத்த இரண்டு மணி நேர
வகுப்பும் தொடர்ந்து 1 1/2  மணி நேர சூடான , சுவையான
விவாதங்களும் , வந்திருந்தஅனைத்து தோழர்களுக்கும் ஒரு 
விழிப் புணர்ச்சியை ஏற்படுத்தியது .

இது போலவே தோழர் . M.R. மீனாட்சி சுந்தரம் அவர்கள் எடுத்த
CONTRIBUTORY  NEGLIGENCE குறித்த வகுப்பு இருளில்  இருக்கும்
தோழர்களுக்கு வழி காட்டும்  ஒளி விளக்காக  அமைந்தது . எவருக்கும்
இஷ்டம் போல RECOVERY போடும் அதிகாரிகளை எதிர்த்து சட்ட
ரீதியாக  இனி ஒவ்வொரு தோழனும் எதிர்கொள்ள  முடியும்
என்பதை மிகத் தெளிவாக விளக்கினார்கள்  தோழர்  M.R.M அவர்கள் .

தனது தள்ளாத 80 வயதில் தோழர் பேச்சிமுத்து அவர்களும் 75 வயதில்
தோழர் ராஜ்மோகன் அவர்களும் எடுத்த  DEFENCE  வகுப்புகள் ,
CCS(CCA) RULES 1965, CCS(CONDUCT) RULES 1964, RTI ACT 2005  ஊழியர் பாதுகாப்புக்கான வகுப்புகள்,ஒன்றுமே தெரியாதவர்களுக்குக் கூட
ஓராயிரம் விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது . கிட்டத்தட்ட
1 1/2 மணி நேரத்துக்கு மேல் இந்த வயதிலும் அவர்கள்   இருவரும்
கூட்டாக அனைவரின் கேள்விகளுக்கும்  பதில் அளித்தது  , மனம் 
முழுக்க நிறைந்த காட்சியாகும் .

மொத்தத்தில் அங்கு வந்திருந்த அனைவருக்கும் வாழ்வில் மறக்கவியலாத 
நிகழ்வாக இந்த தொழிற் சங்க பயிற்சி முகாம் அமைந்தது  என்றால் அது 
மிகையில்லை.  மாநிலச் சங்கத்தின் சார்பாக மாநிலச் செயலர் தோழர் JR 
அவர்கள் அளித்த  90  பக்க 'STUDY MATERIAL '  என்ற புத்தக வடிவிலான 
குறிப்பேடு , இந்த அறிவார்ந்த தலைவர்களின்  பாடங்களை தாங்கி 
நம் இலாக்கா வாழ்கைப் பயணத்திற்கு  முன்னேற்றப் படிக்கட்டாக 
அமைந்தது வெகு சிறப்பு . இதனை  நிகழ்ச்சியின் இறுதியாக அளிக்கப்பட 
FEED BACK  படிவத்தில் பெரும் பகுதி தோழர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்
என்பது மாநிலச் சங்கத்தின் முயற்சிக்குக் கிடைத்த ஆதரவு, அங்கீகாரம்
என்றே சொல்லலாம். 

குடந்தைக்  கோட்டச் செயலர் தோழர் R  பெருமாள் , வரவேற்புக் குழு பொதுச் செயலராகவும்  மாநில அமைப்புச் செயலரும் புதுகை கோட்டச் செயலருமான தோழர் R. குமார் , தலைவராகவும் , குடந்தை கோட்டத்தின் இயக்க முன்னோடித்  தோழர் V . ஜோதி  பொருளராகவும் கொண்டு வரவேற்புக் குழு மிகச் சிறப்பான ஏற்பாடுகளை  ஐந்தே  நாட்களில் செய்து முடித்தது அபாரம். 
ஒரு மாநில மாநாட்டுக்கு இணையான வகையில் , மண்டபங்கள், அரங்க 
ஏற்பாடுகள், வரவேற்பு  BANNER கள் , தோரணக் கொடிகள் ,  VIP, மாநிலச் சங்க ,அகில இந்தியச் சங்க நிர்வாகிகள், சார்பாளர்கள், பார்வையாளர்கள், வரவேற்பு குழு என தனித் தனியே  BATCH கள், காலை தொடங்கி  இரவு வரை தஞ்சை மாவட்டத்திற்கே உரிய  இனிய உபசரிப்புடன் சுவையான உணவு வகைகள்,
அரங்கத்திற்கு வந்து செல்ல  VIP அனைவருக்கும்  வாகன வசதி , தனி அறைகள்  இத்தியாதி....... இத்தியாதி.....  என அபார ஏற்பாடுகள் . மத்திய 
மண்டலத்தின்  அடலேறுகளின் அயராத உழைப்பு ..... அதுவே நிகழ்வின்
சிறப்பு . 

160 க்கும் மேற்பட்ட சார்பாளர்களும் , கட்டணம் செலுத்திய பார்வையாளர்களும் கலந்து கொண்டனர் . 55 கிளைகளில் இருந்து  கோட்ட /
கிளை செயலர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .9 கிளைகளில் 
இருந்து பல்வேறு காரணங்களால் வர  இயலாமை குறித்து கடிதம்/தகவல்
அனுப்பி இருந்தனர் .  150  பேர்   FEED BACK  படிவம் அளித்திருந்தனர் . மத்திய
மண்டலம் தவிரவும் குறிப்பாக மேற்கு மண்டலம், தென் மண்டலம் சார்ந்த
மண்டலச் செயலர்களும் , பல்வேறு கோட்ட/ கிளைச் செயலர்களும்
நிகழ்ச்சி சிறக்க, கேட்காமலேயே நன்கொடை அளித்தது  பெருமையே.
அவர்கள் அனைவருக்கும்  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி .
அது போல விழாக் குழுவினருக்கும் , குடந்தை, பாபநாசம்,மன்னார்குடி, 
நாகை , மயிலாடுதுறை  பகுதியில் இருந்து  தன்னார்வமாக தொண்டாற்றிய
VOLUNTEERS  அனைவருக்கும் , நிகழ்ச்சி சிறக்க பெருமளவில் உதவிய 
ஒய்வு பெற்ற குடந்தை கோட்ட முன்னோடி சுவாமிமலையைச் சேர்ந்த  நாகசுப்ரமணியன் அவர்களுக்கும்  நம் நெஞ்சார்ந்த நன்றி. 

இது ஆரோக்கியமான தொழிற் சங்கத்திற்கு ஒரு நல்ல தொடக்கமே.
இது போல் பல நிகழ்வுகள் மேலும் .....  பல்வேறு பகுதிகளில் ... தொடரும் ..
ஊழியரிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் , போராட ஒன்று திரட்டவும்
நம்  இயக்கப் பணி தொடரும் ...... உங்கள் கரம் சேர்த்தே ... தொடரும் .

என்றும் நன்றியுடன்
J.R. , மாநிலச் செயலர். மாநிலச் சங்கத்திற்காக.

No comments:

Post a Comment