All India Postal Employees Union - Group 'C' - Srirangam Division - 620 006. email id: nfpesrirangam@gmail.com
NFPE
Thursday, 31 October 2013
LSG PROMOTIONS ON THE MOVE AGAIN BASED ON DATE OF CONFIRMATION IN TAMIL NADU CIRCLE
நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த LSG பதவி உயர்வு என்பது தமிழ்நாடு வட்டத்தில் தற்போது அளிக்கப் பட முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளது . கடந்த மாதத்தில் நடைபெற்ற JCM இலாக்காக் குழு கூட்டத்தில் அளிக்கப் பட்ட பதிலின் விளைவாக அனைத்து LSG /HSG காலியிடங்களும் - உடன் அதற்கான பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப் பட்டு - வழங்கப் படவேண்டும்-என்று இலாக்கா உத்திரவு இட்டதால் தற்போது மீண்டும் மாநில அஞ்சல் நிர்வாகம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.
JCM DC கூட்டத்தில் தமிழகத்திற்கென்று தனியே வழிகாட்டுதல் அளிக்கப் படும் என்று இலாக்கா பதில் அளித்திருந்தாலும் (பார்க்க MINUTES நகலை ) இதுவரை DTE இல் இருந்து எந்த பதிலும் வரவில்லை . மேலும் நமது பொதுச் செயலரும் இது குறித்து இலாக்கா முதல்வருக்கு மீண்டும் நினைவூட்டுக் கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை . (கடித நகல் ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது )
எனவே தற்போது DATE OF CONFIRMATION அடிப்படையில் மீண்டும் SENIORITY LIST சரிபார்க்கப் பட்டு தமிழகமெங்கும் சுற்றுக்கு விடப் பட்டுள்ளது.
'Seniority List of Postal Assistants in Tamilnadu Circle as on 01.01.2011
who were confirmed prior to 04.11.1992'
என்ற அடிப்படையில் 1302 ஊழியர்களின் பட்டியல் அனுப்பப் பட்டுள்ளது.
மேலும் PROMOTIVE க்கும் அதே ஆண்டுக்கான DIRECT RECRUIT க்கான பட்டியலும் தனியே அனுப்பப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ONE TIME CONFIRMATION ஆன PROMOTIVE இன் SENIORITY நிர்ணயிக்கப் படும் . இதற்கான மாநில நிர்வாகத்தின் கடித நகலை கீழே பார்க்கவும்.
05.11.2013 க்குள் இந்த SENIORITY LIST இல் பிரச்சினை உள்ளவர்கள் மனுச் செய்ய வேண்டும். அது பரிசீலிக்கப்பட்டு பட்டியல் இறுதி செய்த பிறகு LSG பட்டியல் போடப்படும் .
Wednesday, 30 October 2013
LATEST INFORMATION ON P.A./S.A. RESULTS AND UNFILLED POSTMAN VACANCIES
1) நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் எழுத்தர் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று மாநில நிர்வாகம் தெரிவிக்கிறது .
2) சென்னை பெருநகர மண்டலத்தில் POSTMAN UNFILLED VACANCIES கிட்டத்தட்ட 200 காலியிடங்கள் உள்ளதாகவும்
இந்த காலி இடங்களுக்கு CCR இல் உள்ள MOFUSSIL கோட்டங்களில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதியவர்களில் SURPLUS QUALIFIED ஆக உள்ள GDS ஊழியர்களிடமிருந்து 3 OPTION கேட்கப் பட்டு அந்த விண்ணப்பங்கள் PMG, CCR தலைமையிலான கமிட்டி முன்பாக பரிசீலனைக்கு வைக்கப் பட்டு பின்னர் அவர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் .
இது எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப் படும் என்று நிர்வாகம் தெரிவிக்கிறது
Monday, 28 October 2013
DRAFT TERMS OF REFERENCE 7th CPC
The
members of the National Secretariat of the Confederation met to
discuss and formulate our views on the 7th CPC
terms of Reference. On the basis of the discussions, we prepared a draft
terms of reference .
Finalized by the Staff Side at the meeting of
25.10.2013.
A. To examine the existing
structure of pay, allowances and other benefits/facilities, retirement benefits
like Pension, Gratuity, other terminal benefits etc. to the following categories
of employees.
1 Central Government employees
– industrial and non industrial;
2 Personnel belonging to All
India services;
3 Personnel belonging to the
Defence Forces;
4 Personnel called as Grameen
Dak Sewaks belonging to the Postal Department;
5 Personnel of Union
Territories;
6 Officers and employees of
the Indian Audit and Accounts
Department;
7 Officers and employees of
the Supreme Court;
8 Members of Regulatory bodies
(excluding RBI) set up under Act of Parliament.
B. To work out the
comprehensive revised pay packet for the categories of Central Government
employees mentioned in (A) above as on 1.1.2014.
C. The Commission will
determine the pay structure, benefits facilities, retirement benefits etc.
taking into account the need to provide minimum wage with reference to the
recommendation of the 15th Indian Labour Conference (1957) and the
subsequent judicial pronouncement of the honorable Supreme Court there-on, as on
1.1.2014.
D. To determine the Interim
Relief needed to be sanctioned immediately to the Central Government employees
and Pensioners mentioned in (A) above;
E. To determine the percentage
of Dearness allowance/Dearness Relief immediately to be merged with Pay and
pension.
F. To settle the anomalies
raised in various fora of JCM.
G. To work out the improvements
needed to the existing retirement benefits, like pension, death cum retirement
gratuity, family pension and other terminal or recurring benefits maintaining
parity amongst past, present and future pensioners and family pensioners
including those who entered service on or after
1.1.2004.
H. To recommend methods for
providing cashless/hassle-free Medicare facilities to the employees and
Pensioners including Postal pensioners.
M. KRISHNAN, SECRETARY GENERAL , CONFEDERATION.
Saturday, 26 October 2013
Flash News
COM. S.C.JAIN REINSTATED
Orders reinstating into service Com. S.C.Jain Ex-Circle Secretary P3 NFPE Madhya Pradesh Circle who was compulsorily retired from service for trade union activities, issued today as per the direction given by Directorate to the CPMG.
NFPE and P3 CHQ has taken up the case with Secretary, Department of Posts. This is the great victory of NFPE in the fight against trade union victimization.
Red Salute to all comrades
M.Krishnan
Secretary General NFPE
Orders reinstating into service Com. S.C.Jain Ex-Circle Secretary P3 NFPE Madhya Pradesh Circle who was compulsorily retired from service for trade union activities, issued today as per the direction given by Directorate to the CPMG.
NFPE and P3 CHQ has taken up the case with Secretary, Department of Posts. This is the great victory of NFPE in the fight against trade union victimization.
Red Salute to all comrades
M.Krishnan
Secretary General NFPE
Red salute to our General Secretary Com. M. Krishnan
NFPE, Srirangam
Friday, 25 October 2013
DISCUSSION WITH MEMBER (OPERATIONS). ON MNOP AND L1, L2 RELATED ISSUES DATED 23.10.2013
On 23.10.2013, Member (Operations), Postal Services Board, Shri. Kamaleshwar Prasad, held discussion with Staff side on MNOP and L1, L2 related issues. Com. M. Krishnan, Secretary General NFPE, Com. Giriraj Singh, General Secretary, R3 (NFPE), Com. P. Suresh, General Secretary R-4 (NFPE), Com. Devender Kumar, Circle Secretary, NUR-3 (FNPO) Delhi Circle attended the meeting Com. D. Theagarajan, Secretary General, FNPO & General Secretary NUR-3 (FNPO) could not attend the meeting due to sudden illness. A joint note of NFPE & FNPO was presented to the Member (O). The following are the outcome of the meeting. Minutes will be published later.
(1) Modifications in the norms fixed for CRCs.
Official side informed that the norms are fixed as per the scientific work study conducted by Directorate in the field units. Further Directorate has issued an order on 13.08.2013 in which it is clarified that – Establishment norms for “Sorting of Articles” has been fixed as 0.079 minute per article (i.e. 760 articles per hour). However time factor for productivity pertaining to sorting of articles would continue to be 0.063 per article (i.e; 950 articles per hour).”
Staff side demanded reduction in number of article for productivity also. Staff side want change in norms for scanning and other items mentioned in their letters submitted earlier. Finally it is decided to give copy of the work study conducted by Directorate to the staff side. Staff side shall submit concrete proposal with scientific basis with supporting facts and figures justifying their arguments. Based on the staff side proposal Directorate will re-examine the case.
(2) Administrative jurisdiction of Speed Post Hubs (SPH)
Official side reiterated that powers for deciding the administrative jurisdiction was already given to Chief PMGs. It is upto the Circle Unions to discuss the case at Circle level and settle the deserving cases. Staff side pointed out that in many Circles Chief PMGs are not ready to accept the views expressed by the Circle Unions. Finally it is decided that (1) As a first step Circle Unions should discuss the cases with Chief PMGs in formal meetings and get a reply in writing from the Circle Administration showing the reason for not accepting the demand of the Circle union and then staff side may submit a note to Directorate justifying their stand in each case with reference to the Stand taken by Chief PMGs. After that Directorate shall review each case. Discussion with CPMGs in the formal meetings and getting a reply with reasons, is a must.
(3) L1 Status to more L2 offices
The proposal submitted by staff side will be examined. Staff Side may discuss the cases at circle level also so that Chief PMGs may submit proposal to Directorate in deserving cases. The details of the case by case examination already conducted by Directorate will be made available to the staff side.
(4) Discontinuance of closing “NIL” bags
The proposal of the Staff side will be considered in a positive manner and detailed examination of the case will be done.
(5) All other issues raised in the staff side note will be examined in detail by the Directorate and action will be taken.
(6) The orders issued by the Karnataka Circle Administration implementing unilateral increase in norms in FMC from 7000 to 9000 in BG City RMS/1 and from 11000 to 13000 in BG City RMS/II in violation of Directorate orders was discussed. Member (O) agreed to issue instructions to CPMG not to violate Directorate orders.
M. Krishnan D. Theagarajan
Secretary General, NFPE Secretary General, FNPO
Posted by NFPE
Thursday, 24 October 2013
Wednesday, 23 October 2013
DIVISIONAL/BRANCH SECRETARIES MEETING AND TRADE UNION STUDY CAMP OF CENTRAL REGION
அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் !
நமது மாநிலச் சங்கத்தின் முந்தைய தீர்மானத்தின் அடிப்படையில் , மதுரை மற்றும் கோவை மண்டலங்களைத் தொடர்ந்து மத்திய மண்டலமான
திருச்சி மண்டலத்தின் அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட / கிளைச் செயலர்கள் கூட்டம் எதிர்வரும் 09.11.2013 சனியன்றும் , மத்திய மண்டலத்தின் தொழிற்சங்க பயிலரங்கு எதிர்வரும் 10.11.2013 ஞாயிறு அன்றும்
கீழே காணும் இடத்தில் சிறப்பாக நடத்திட திருவரங்கம் கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன .
IFPAAW Rural workers Education Centre,
Trichy - Chennai high road,
Thuraimangalam, Four Road, Perambalur - 621 220
இதற்கான விரிவான அறிவிப்பு சுற்றறிக்கை வாயிலாக வரும் வாரத்தில் வெளியிடப்படும். நமது முன்னாள் பொதுச் செயலரும் , மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு தலைவருமான தோழர். KVS அவர்கள் இலாக்கா விதிகள், நடத்தை விதிகள், தண்டனை விதிகள் , பாதுகாப்பு விதிகள் உள்ளிட்டவைகளை POWER POINT வடிவில் உங்களுக்கு வழங்கிட உள்ளார்கள் என்பது ஒரு உபரிச் செய்தி .
இது தவிர STUDY MATERIALS மதுரை, கோவை மண்டலக் கூட்டங்களில் தந்ததை விட அதிக அளவில் , பல புதிய விபரங்களுடன் உங்களுக்கு அளிக்கப் பட உள்ளது . ஆகவே மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் பெருமளவில் நிர்வாகிளை உள்ளடக்கிய , இளைஞர்களையும் , தோழியர்களையும் கலந்து கொண்டிட ஏற்பாடுகளை இப்போதிருந்தே செய்திட வேண்டுகிறோம்.
கோட்ட/ கிளைச் செயலர்கள் கோட்ட அளவில் அதிகாரியிடம் எடுக்கப் பட்டும் தீர்க்கப் படாமல் பகுதியில் தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சினைகளை பட்டியலிட்டு , முழு விபரங்களுடன் தங்களுடைய LETTER PAD இல் TYPE செய்து கூட்டத்திற்கு எடுத்து வரவேண்டும் என்று கண்டிப்பாக கோரப்படுகிறது . அதுபோல அனைத்து கோட்ட/ கிளைச் செயர்களும் தவறுதல் இன்றி கண்டிப்பாக இந்த இரண்டு நாட்கள் நிகழ்விலும் கலந்துகொண்டிட வேண்டும் என்று அறிவிக்கிறோம்.
மதுரை மற்றும் கோவை மண்டலங்களில் செய்தது போலவே உணவு மற்றும் இதர ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப் படுகின்றன . அவசியம் இளைய தோழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
இந்த செய்தியையே முன்னறிவிப்பாகக் கொண்டு இதனை பார்க்கும் தோழர்கள் , இதர தோழர்களுக்கும் இந்த விபரங்களை தெரிவித்திட வேண்டுகிறோம்.
நிகழ்விடம் - ஏற்பாடு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள கீழ்க்காணும் தோழர்களை தொடர்பு கொள்ளவும் :-
1. தோழர். T.தமிழ்ச் செல்வன் , கோட்டச் செயலர் - 9965428382
2. தோழர். C.சசிகுமார், செயல் தலைவர் - 9442234938
3. தோழர். K.ராஜூ , போஸ்ட் மாஸ்டர் , தென்னூர் - 9994247485
நன்றியுடன்
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.
Monday, 21 October 2013
Recruitment to Group C posts in Pay Band-1, with Grade Pay of Rs. 1800/- (pre-revised Group D posts).
No.AB-14017/6/2009-Estt (RR)
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
Department of Personnel & Training
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
Department of Personnel & Training
New Delhi, dated the 21st October 2013
OFFICE MEMORANDUM
Subject: Recruitment to Group 'C' posts in Pay Band-I,
with Grade Pay of Rs.1800/- (pre-revised Group `D' posts).
This Department vide OM of even number dated 12.5.2010 requested all the Ministries/ Departments to intimate their requirements for Non-Technical Group 'C' posts in PB-1 Grade Pay Rs.1800/- to the SSC immediately in order that the Commission could initiate action for recruitment. The Ministries/Departments were also advised to take action simultaneously for framing Recruitment Rules for these posts in accordance with the Model RRs already circulated vide OM dated 30.4.2010.
2. It has, however, come to the notice that Cadre Controlling
Authorities are not sending their requisitions for the vacancies of MTS to SSC.
The erstwhile Group 'D' posts which now belong to Group 'C' are required to be
filled up through SSC as per instructions of this Department instead of through
Employment Exchange or any other mode. All Ministries/ Departments are,
therefore, once again requested for sending their requirements in respect of
Ministries/Departments themselves as well as their attached/ subordinate
officers also, for Non-Technical Group 'C' posts in PB-1 Grade Pay Rs.1800/- to
the SSC immediately in order that the Commission could initiate action for
recruitment.
3. Action pending if any, may simultaneously be taken for framing
Recruitment Rules for these posts in accordance with the Model RRs already
circulated.
4. Hindi version follows.
sd/-
(Mukta Goel)
Director (E-I
(Mukta Goel)
Director (E-I
Source :
www.persmin.gov.in
[http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02est/AB-14017_6_2009-Estt.RR-21102013.pdf]
[http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02est/AB-14017_6_2009-Estt.RR-21102013.pdf]
Sunday, 20 October 2013
FLASH NEWS
NFPE & FNPO DECIDED TO GO ON NATIONWIDE INDEFINITE STRIKE IF THE DEMAND FOR INCLUSION OF GRAMIN DAK SEVAKS UNDER THE PURVIEW OF 7TH CENTRAL PAY COMMISSION IS NOT ACCEPTED BY THE GOVERNMENT. THE MAIN DEMANDS OF THE STRIKE WILL BE
(1) Inclusion of Gramin Dak Sevaks under the purview of 7th CPC
(2) Regularisation of Casual, Part-time, Contingent Employees and Revision of their wages with effect from 01.01.2006 (as per 6th CPC wage revision) & Grant of DA
(3) Merger of 50% DA with pay for all employees including GDS
The above decision was taken in the Central JCA Meeting held on 19.10.2013 at New Delhi under the Chairmanship of Shri. T. N. Rahate, President, FNPO.
(M. Krishnan) (D. Theagarajan)
Secretary General Secretary General
NFPE FNPO
Friday, 18 October 2013
வாழ்க்கைப் பாடம்
அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு... எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.
அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.
அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.
உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.
மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.
பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”
அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”
”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”
“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”
“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”
அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.
ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.
PFRDA Orders : New Pension Scheme (NPS) - Changes in Investment Guidelines for the Government Sector
PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY
CIRCULAR
File No.: PFRDA/2O13/16/PFM/4 Date: 15 Oct 2013
To,
All Pension Funds
Subject: Investment Guidelines
1. Changes in Investment Guidelines for the Government Sector
The following changes in the investment guidelines have been made :-
1.1 Debt securities selected for Investments should have a minimum
residual maturity period of three years from the date of investment by
the Pension Fund.
1.2 Debt securities must have an investment grade rating from at least
two credit rating agencies. Apart from ratings by agencies. PF shall
undertake their own due diligence for assessment of risks associated
with the securities before investments.
1.3 Credit Default Swaps (CDS) on Corporate Bonds are eligible derivative instruments.
1.4 Rated asset backed securities (ABS) are eligible securities for
investments provided they have a residual maturity of not less than
three years and have an investment grade rating from at least two rating
agencies.
2. Guidelines for Private Sector — Corporate CG and NPS lite
Please note that both Corporate CG and NPS Lite Schemes follow the
Government pattern of investment and hence investment guidelines as
applicable to the Government sector and any subsequent amendments to
investment guidelines of Government sector will also be applicable to
Corporate CG and NPS lite Schemes. Investment guidelines, and any
subsequent changes thereto as applicable to the Government sector,
therefore should be adopted simultaneously for Corporate CG and NPS Lite
Scheme.
sd/-
(Subroto Das)
Chief General Manager
Source : www.pfrda.org.in
[http://pfrda.org.in/writereaddata/linkimages/changes%20Investment%20Guidelines968531261.pdf]
ஏழில் (7-ல்) அடங்கிய வாழ்க்கை தத்துவம்! ! ! !
நன்மை தரும் ஏழு…
1)
ஏழ்மையிலும்
நேர்மை
2)
கோபத்திலும்
பொறுமை
3)
தோல்வியிலும்
விடாமுயற்ச்சி
4)
வறுமையிலும்
உதவிசெய்யும் மனம்
5)
துன்பத்திலும்
துணிவு
6)
செல்வத்திலும்
எளிமை
7)
பதவியிலும்
பணிவு
வழிகாட்டும் ஏழு…
1)
சிந்தித்து
பேசவேண்டும்
2)
உண்மையே
பேசவேண்டும்
3)
அன்பாக
பேசவேண்டும்
4)
மெதுவாக
பேசவேண்டும்
5)
சமயம்
அறிந்து பேசவேண்டும்
6)
இனிமையாக
பேசவேண்டும்
7)
பேசாதிருக்க
பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு…
1)
மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்க
தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி
மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு…
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
Subscribe to:
Posts (Atom)