NFPE

Wednesday 23 October 2013

DIVISIONAL/BRANCH SECRETARIES MEETING AND TRADE UNION STUDY CAMP OF CENTRAL REGION

அன்புத் தோழர்களுக்கு  இனிய வணக்கம் ! 

 நமது மாநிலச் சங்கத்தின் முந்தைய தீர்மானத்தின் அடிப்படையில் , மதுரை  மற்றும்  கோவை மண்டலங்களைத் தொடர்ந்து  மத்திய மண்டலமான 

திருச்சி மண்டலத்தின்  அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட / கிளைச்  செயலர்கள் கூட்டம் எதிர்வரும்  09.11.2013 சனியன்றும் ,  மத்திய மண்டலத்தின் தொழிற்சங்க பயிலரங்கு  எதிர்வரும் 10.11.2013 ஞாயிறு அன்றும் 

கீழே காணும் இடத்தில்  சிறப்பாக நடத்திட  திருவரங்கம் கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன .


 IFPAAW Rural workers Education Centre, 
Trichy - Chennai high road,


Thuraimangalam, Four Road, Perambalur - 621 220

இதற்கான விரிவான அறிவிப்பு சுற்றறிக்கை வாயிலாக வரும் வாரத்தில் வெளியிடப்படும். நமது முன்னாள் பொதுச் செயலரும் , மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு தலைவருமான தோழர். KVS  அவர்கள் இலாக்கா விதிகள்,  நடத்தை விதிகள், தண்டனை விதிகள் , பாதுகாப்பு விதிகள் உள்ளிட்டவைகளை  POWER  POINT  வடிவில் உங்களுக்கு வழங்கிட உள்ளார்கள் என்பது ஒரு உபரிச் செய்தி . 

இது தவிர  STUDY  MATERIALS  மதுரை, கோவை மண்டலக் கூட்டங்களில்  தந்ததை விட அதிக  அளவில் , பல புதிய விபரங்களுடன் உங்களுக்கு அளிக்கப் பட உள்ளது . ஆகவே  மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் பெருமளவில் நிர்வாகிளை உள்ளடக்கிய , இளைஞர்களையும் , தோழியர்களையும் கலந்து கொண்டிட  ஏற்பாடுகளை  இப்போதிருந்தே செய்திட வேண்டுகிறோம். 

கோட்ட/ கிளைச் செயலர்கள்  கோட்ட அளவில்  அதிகாரியிடம் எடுக்கப் பட்டும் தீர்க்கப் படாமல்   பகுதியில் தேங்கிக் கிடக்கும் ஊழியர்  பிரச்சினைகளை  பட்டியலிட்டு , முழு விபரங்களுடன்  தங்களுடைய LETTER  PAD  இல் TYPE  செய்து  கூட்டத்திற்கு எடுத்து வரவேண்டும் என்று கண்டிப்பாக கோரப்படுகிறது . அதுபோல  அனைத்து கோட்ட/ கிளைச் செயர்களும்  தவறுதல் இன்றி கண்டிப்பாக இந்த இரண்டு நாட்கள் நிகழ்விலும் கலந்துகொண்டிட வேண்டும் என்று அறிவிக்கிறோம்.

மதுரை மற்றும் கோவை மண்டலங்களில் செய்தது போலவே உணவு மற்றும் இதர ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப் படுகின்றன  .  அவசியம் இளைய தோழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். 

இந்த செய்தியையே முன்னறிவிப்பாகக் கொண்டு இதனை பார்க்கும் தோழர்கள் , இதர தோழர்களுக்கும் இந்த விபரங்களை தெரிவித்திட வேண்டுகிறோம்.

நிகழ்விடம்  - ஏற்பாடு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள கீழ்க்காணும் தோழர்களை தொடர்பு கொள்ளவும் :-

1. தோழர். T.தமிழ்ச் செல்வன் , கோட்டச் செயலர் -   9965428382
2. தோழர். C.சசிகுமார், செயல் தலைவர்  - 9442234938
3. தோழர். K.ராஜூ , போஸ்ட் மாஸ்டர் , தென்னூர் - 9994247485

நன்றியுடன் 
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.

No comments:

Post a Comment