NFPE

Sunday 6 October 2013

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடு

மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனத்தின்  தமிழ் மாநில மாநாடு கடந்த 10 வருடங்களுக்கு பிறகு சென்னை, T.Nagar, G.N.Shetty Road-ல்  உள்ள ஜெர்மன் ஹாலில் நடைபெற்றது. இதில் நமது மாநிலச்செயலர் தோழர் J.R. அவர்கள்  மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனத்தின்  தமிழ் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் திருச்சி கோட்டச்செயலர்  தோழர் K. மருதநாயகம் மற்றும் NFPE GDS மாநிலச்செயலர் தோழர் R.தன்ராஜ் அவர்களும் மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனத்தின்  மாநில அமைப்புச்செயலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரதும் பணிச் சிறக்க நமது வாழ்த்துக்கள்.

மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்கள் , ஏழாவது ஊதியக்குழு 01.01.2011 முதல் அமைக்கப் படவேண்டும் எனவும்   50% பஞ்சப் படி  01.01.2011  முதல் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப் பட வேண்டும் எனவும்,  GDS ஊழியர்களுக்கும்  ஊதியக் குழுவே அவர்களது ஊதிய மற்றும் பணித்தன்மை குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும், 5 கட்ட பதவி உயர்வு வழங்கப் படவேண்டும், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், வேலை நிறுத்த உரிமை சட்டமாக்கப் பட வேண்டும்  ,  கருணை அடிப்படையிலான  பணி நியமனங்கள் முழுமை யாக வழங்கப் படவேண்டும் போன்றவை உள்ளிட்ட 1 5 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி  மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்பது குறித்த  பிரச்சார இயக்கத்தை  துவக்கி வைத்து நீண்ட  உரை ஆற்றினார். 

நமது கோட்டத்தில் இருந்து கோட்டத்தலைவர்  தோழர்  K.கதிர்வேல், செயல் தலைவர் தோழர் C. சசிகுமார், கோட்டச்செயலர்  தோழர் T. தமிழ்ச்செல்வன் மற்றும் பொருளாளர் தோழர் V. ஸ்ரீதரன் ஆகியோர் மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனத்தின்  தமிழ் மாநில மாநாட்டில் கலந்து கொண்டனர் .

NFPE, Srirangam

No comments:

Post a Comment