NFPE

Tuesday 27 January 2015

மாநில அளவிலான கோட்ட மற்றும் கிளைச் செயலர்கள் கூட்டம்


  மாநில அளவிலானகோட்ட மற்றும் கிளைச் செயலர்கள் கூட்டம் 26.01.2015 அன்று திருச்சி மாநகரில் உள்ள SRMU HALL - ல் நடைபெற்றது.  மாநில உதவித் தலைவர் தோழர் ஜானகிராமன் (தலைவர், திருச்சி கோட்டம்)அவர்கள் தலைமையில், மத்திய மண்டலச் செயலர் தோழர் R. குமார் அவர்கள் வரவேற்புரையாற்ற, மாநிலச் செயலர் தோழர் J.R, அகில இந்திய துணை பொது செயலரும் தமிழ் மாநில நிதிச் செயலருமான தோழர் A.வீரமணி மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகளும், அகில இந்திய செயல் தலைவர் தோழர் N. கோபாலகிருஷ்ணன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளத்தின் தமிழ் மாநில பொது செயலர் தோழர் துரைபாண்டியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

  கலந்து கொண்ட அனைத்து கோட்ட மற்றும் கிளைச் செயலர்களும் தங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இதற்க்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு போராட்டம் ஒன்றே தீர்வு என்று வலியுறுத்தினார்கள். 

1.முதல் கட்டமாக அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
2.இரண்டாவது கட்டமாக மண்டல அளவில் தர்ணா. 
3.மூன்றாவது கட்டமாக ஒருநாள் வேலை நிறுத்தம்.


           கோட்டகண்காணிப்பாளர்கள்  நிர்ணயிக்கும் இலக்கு ஊழியர்களை மனதளவில் பாதிக்கிறது. இ மெயில் துன்புறுத்தல்கள்  ஊழியர்களை ஒருவித வெறுப்பின் விளிம்புக்கு கொண்டு செல்கிறது. நாள் ஒன்றுக்கு காலை ஒரு முறையும், மாலை ஒரு முறை மட்டும் தான் இ மெயில் பார்க்க முடியும் /பதில் கொடுக்க முடியும் என்ற நிலை வரவேண்டும்போன்ற எதார்த்தங்களை கோட்டத்தில் கேட்க முடிந்தது. 










NFPE, Srirangam

No comments:

Post a Comment