38 - வது தமிழ் மாநில மாநாடு செங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள K.R.G. திருமண மண்டபத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 146 சார்பாளர்களில் 138 சார்பாளர்களும், 500 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்துக்கொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர். மாநாட்டின் இரண்டாவது நாள் மகிளா கமிட்டியின் தோழியர் ஏன்ஜெல் சத்தியநாதன், தோழியர் மணிமேகலை ஆகியோரின் தலைமையில் கருத்தரங்கம் மிக அருமையாக களைகட்டியது.
நமது கோட்டத்தில் இருந்து மூன்று சார்பாளர்களும், பதினைந்து பார்வையாளர்களும் கலந்துக்கொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர். மாநாட்டில் நடந்த பொருளாய்வு கூட்டத்தில் திருவரங்க கோட்டத்தலைவர் தோழர் K. ராஜு, கோட்டச்செயலர் தோழர் T. தமிழ்செல்வன் மற்றும் நிதிச்செயலர் தோழர் V. ஸ்ரீதரன் ஆகியோர் பங்குக்கொண்டு தங்களுடைய கருத்துக்களை மிக ஆழமாக மாநாட்டில் பதிவுச்செய்தனர்.
தோழர் C. சசிகுமார் மாநிலச்சங்க நிர்வாகியாக தன்னுடைய கருத்துக்களை மாநாட்டிலே பதிவுச்செய்தார்.
செங்கல்பட்டில் நடைபெற்ற NFPE அஞ்சல் மூன்றின் 38 வது தமிழ் மாநில மாநாட்டில் கீழ்காணும் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
மாநிலத்தலைவர்:
தோழர் : M.செல்வகிருஷ்ணன் HSG -1,
சங்கரன்கோவில் HO,
கோவில்பட்டி கோட்டம்
துணைத்தலைவர்கள் :
தோழர்கள்:
N.சுப்ரமணியன், PM
மேட்டுப்பாளையம் HO
K. மருதநாயகம், PA
திருச்சிராப்பள்ளி HO
S. அய்யம் பெருமாள்
கோட்டார் SO,
நாகர்கோயில் கோட்டம்
மாநிலச்செயலர் :
தோழர்: J. ராமமூர்த்தி, APM
T. நகர் HO, சென்னை.
மாநில உதவிச்செயலர்கள்:
தோழர்கள்:
R. குமார் , PA,
புதுக்கோட்டை HO
S.வீரன், Marketing Executive,
வேலூர் HO
A. ராஜேந்திரன், PA,
திருப்பூர் HO
N. சிவசண்முகம், PA
கோயம்புத்தூர் HO
G. ராமமூர்த்தி, Marketing Executive
செங்கல்பட்டு HO
மாநில நிதிச்செயலர்:
தோழர்: A. வீரமணி, PA
அண்ணாரோடு HO
மாநில உதவி நிதிச்செயலர்:
தோழர்: N. கோபால் , SPM,
காஞ்சிபுரம் கேட்செரி
மாநில அமைப்புச்செயலர்கள்:
தோழர்கள்:
C. சசிகுமார், System Manager,
ஸ்ரீரங்கம் HO
C. மோகன், PA,
அம்பத்தூர், தாம்பரம்
K. சுப்ரமணியன், SPM,
கலெக்டரேட்,
திண்டுக்கல் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திண்டுக்கல் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் திருவரங்கக்கோட்டத்தின் வாழ்த்துக்கள்.
இந்த 38 - வது தமிழ் மாநில மாநாட்டில் முதன்முறையாக 9 நபர்கள் கொண்ட Technology Wing என்ற ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
38 - வது மாநில மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய செங்கல்பட்டு தோழர் G.ராமமூர்த்தி, தோழர் ராஜ்குமார் அவர்களுக்கும், அவர்களின் அணிக்கும் திருவரங்கம் கோட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
38 - வது மாநில மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய செங்கல்பட்டு தோழர் G.ராமமூர்த்தி, தோழர் ராஜ்குமார் அவர்களுக்கும், அவர்களின் அணிக்கும் திருவரங்கம் கோட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment