நமது அஞ்சல் துறையில் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளின் தீர்வினை வலியுறுத்தி NFPE சம்மேளனத்தின் அறைகூவலின்படி ஆர்ப்பாட்டம்.
கோரிக்கைகள் ...
(1 ) திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS ஊதியக் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்திடுக.
(2 ) CSI மற்றும் RICT அமுலாக்கத்திற்கு முன்பாக அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்துகொடு - புதிய திட்டங்களின் பெயரில் இலக்கை நிர்ணயித்து ஊழியர்களை துன்புறுத்தாதே.
(3) சேமிப்பு கணக்குகளை வங்கிகளுக்கு தாரைவார்ப்பதை நிறுத்திடுக.
(4) புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திடுக.
(5) APS அஞ்சலகங்களை மூடுவதை நிறுத்திடுக.
(6) அஞ்சலக சேவையில் தனியாரை அனுமதிக்காதே.
(7) ஓய்வு பெற்ற GDS ஊழியர்களுக்கும் SDBS திட்டத்தின்படி ஓய்வு பலன்களை வழங்கிடுக.
(8) அஞ்சலக வேலைநாட்களை வாரம் ஐந்து நாட்களாக்கி எல்லா சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவித்துடுக.
(9) அனைத்து காலியிடங்களையும் GDS பதவி உள்பட நிரப்பிடுக.
உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட அலுவலகம், திருவரங்கம் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்.....
T. தமிழ்செல்வன்
கோட்டச் செயலர் P3,
G. ஸ்ரீனிவாசன்
கோட்டச் செயலர் P4,
R. விஷ்ணுதேவன்
கோட்டச்செயளர் NFPE GDS.
திருவரங்கக்கோட்டம்.
No comments:
Post a Comment