NFPE

Thursday, 7 June 2018

அஞ்சலக தொழிற்சங்க வரலாற்றில் ஒரு புது அத்தியாயம். ஒற்றுமைக்கும், உறுதிக்கும் கிடைத்த வானளாவிய வெற்றி!!!


தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம்.
அஞ்சலக தொழிற்சங்க வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லா வண்ணம் GDS தோழர்களின்கோரிக்கையான கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான அம்சங்களை உடனடியாக அமுல்படுத்தவேண்டும் மற்றும்  தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவினை உடனே வெளியிடவேண்டும் என்ற இந்த இரண்டு கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து 22.05.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை NFPE – COC தமிழகத்தில் முதலில் அறிவித்தது.  அதன் பொருட்டு NFPE அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் அனைத்து GDS (NFPE – GDS, AIGDSU, FNPO ஆண்ட் BPEF) சங்கங்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் களம் கண்டன. நமது கோட்டத்தில் பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் FNPO – P3யை சார்ந்த தோழியர்கள் அமுதா, ரம்யா மற்றும் துறையூர் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் R. சதாசிவம் (SC/ST Federation)ஆகியோர் மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் நம்முடன் பங்குபெற்று சிறப்பித்தனர்.

2, 3 மற்றும் 4 நான்கு நாட்களில் இலாக்கா ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை நமது கோட்டத்தில் விலக்கிக்கொண்டாளும் GDS தோழர்கள் தங்களது களத்தை உறுதியாக கட்டமைத்தார்கள். அதற்கு NFPE அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு தோழர்கள் அரணாக நின்று அவர்களின் போராட்டத்தை வடிவமைத்து முன்னெடுத்து சென்றார்கள்.

7 ம் நாள் போராட்டமாக மண்டல அளவில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

11 வது நாள் போராட்டமாக பெரம்பலூர் தலைமை அஞ்சலகவாயிலில் அடையாள உண்ணாவிரத போராட்டமும், அதன் முடிவில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் 
திரு.R.P. மருதராஜா அவர்களிடம் கோரிக்கை மனுவினை அளித்தோம். அவரும் நமது துறை அமைச்சரிடம் இது சம்பந்தமாக பேசுவதாக தெரிவித்தார்.

14 ம் நாள் போராட்டமாக மத்திய மண்டலத்தில் இருந்து பெருவாரியான தோழர்களும், தோழியர்களும் கலந்துக்கொண்ட மனிதசங்கிலி போராட்டம் திருச்சியில் நடைபெற்றது.  இதில் நமது கோட்டத்தில் இருந்து மட்டும் 250 க்கும் அதிகமான தோழர்களும், தோழியர்களும் கலந்துகொண்டனர்.

15 நாட்கள் சென்ற நிலையிலும் எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  ஆனாலும் GDS தோழர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தில் இருந்து ஒரு சதவிகிதம் கூட பின்வாங்கவில்லை.  வேலைநிறுத்த போராட்டம் முன்னிலும் முழுவீச்சுடன் நடந்துக்கொண்டிருந்தது.
சரித்திர வெற்றி
16 ம் நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்ற நிலையில் Cabinetகூடி கமலேஷ் சந்திரா கமிட்டியின் மீதான தன்னுடைய ஒப்புதலை வழங்கியது.  இதன் மூலம் தங்களுடைய 16 நாள் வேலைநிறுத்த போராட்டத்தினை நமது GDS தோழர்கள் வெற்றிகரமாக விலக்கிக்கொண்டார்கள்.

  தங்களது ஊதியத்தை இழந்தாலும் தங்களின் ஒற்றுமையை இழக்காத காரணத்தினால் இன்று முழு வெற்றியையும் சுவைக்கும் நமது GDS தோழர்கள் அனைவர்க்கும் ஒரு வெற்றிகரமான உதாரணமாக திகழ்கிறார்கள்.

 இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் GDS தோழர்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு பங்கு கொண்ட அனைத்து அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் GDS என்ற ஒரு பிரிவினரே இல்லாத நிலையிலும் வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்ட கணக்குபிரிவு தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் எங்களின்நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒற்றுமை ஒன்று மட்டுமே நம்முடைய மிகப் பெரிய அரணாகும்.

தொழிலாளர்ஒற்றுமைஓங்குக!                                         தொழிற்சங்கஒற்றுமைஓங்குக!!

ஒன்றுபடுவோம்! போராடுவோம்!!                                    போராடுவோம்!  வெற்றிபெறுவோம்!!

வெற்றிகிட்டும்வரைபோராடுவோம்!                                                               இறுதிவெற்றிநமதே!

போராட்டவாழ்த்துக்களுடன்

K. இராஜு                                                                           T. தமிழ்செல்வன்                                          V. ஸ்ரீதரன்
தலைவர்NFPE-P3                                                 கோட்டச்செயலர்NFPE-P3                          நிதிச்செயலர்NFPE-P3

R. சந்திரன்                                                                        G. ஸ்ரீனிவாசன்                                               S. அல்லி
தலைவர்NFPE-P4                                                 கோட்டச்செயலர்NFPE-P4                           நிதிச்செயலர்NFPE-P4

S. மனோகரன்                                                                R.விஷ்ணுதேவன்                                     C.செந்தில்ராஜா
தலைவர்NFPE GDS                                            கோட்டச்செயலர்NFPE GDS                          நிதிச்செயலர்NFPE GDS


AIGDSU

M. இரவீந்திரன்                               V. வீரமலை                             P. வெங்கடாசலம்
தலைவர்                                    கோட்டச்செயலர்                       நிதிச்செயலர்

FNPO– GDS

R. மகேஷ்குமார்                               R. முருகேசன்                   B. கோகுலகிருஷ்ணன்
தலைவர்                                     கோட்டச்செயலர்                      நிதிச்செயலர்

BPEU – GDS

C. சிவாஜி                                     M.P. துரைசாமி                         P. மணிவேல்
தலைவர்                                     கோட்டச்செயலர்                       நிதிச்செயலர்
C.சசிகுமார்
மாநில அமைப்புச்செயலர் (NFPEP3)

1 comment: