All India Postal Employees Union - Group 'C' - Srirangam Division - 620 006. email id: nfpesrirangam@gmail.com
NFPE
Saturday, 11 July 2015
Friday, 10 July 2015
Thursday, 9 July 2015
ALL MCCAMISH SETTINGS AT ONE PLACE
(This exe will create the head in transaction Master. So Add the PLI-RPLI transaction in POS >> Treasury >> Add Transaction)
Internet Explorer 8
Internet Explorer 8.0 (For Windows XP)
SSC CHSL 2015 Online Applications Last Date Extended ( 17.7.2015 for Part-I and 20.7.2015 for Part-II )
There has been some technical problem with SSC Website and candidates applying online have been encountering difficulty in submitting their applications. In order to rectify the problem the SSC Website WILL NOT BE available for today i.e. 7th July, 2015. The website will be available from 8th July, 2015 onwards. Inconvenience caused is regretted.
Keeping in view the convenience of candidates the Commission has extended the last date for receipt of applications to 17.7.2015 for Part-I and 20.7.2015 for Part-II.
Wednesday, 8 July 2015
INFORMAL MEETING WITH PMG, CENTRAL REGION ON 06.07.2015
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! கடந்த 06.07.2015 அன்று PMG, CR அவர்களுடன் நம்முடைய மாநிலச் செயலரின் சந்திப்பு நடைபெற்றது. அதில் ஸ்ரீரங்கம் மற்றும் கடலூர் கோட்டங்களின் சுழல் மாறுதல்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து கடிதம் அளித்து விவாதிக்கப்பட்டது. கடிதத்தின் நகல் கீழே அளிக்கப்பட்டுள்ளது.
நம் மாநிலச் சங்கத்தின் கருத்துக்களை பொறுமையாக கேட்டறிந்த PMG CR அவர்கள் இரண்டாவது மேல் முறையீடுகள் அளிக்கப்பட்டிருப்பின் அவற்றின் மீது உரிய பரிசீலனை செய்து ஆவன நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். மேலும் LR ஊழியர்களை ஸ்ரீரங்கம் கோட்டத்தில் சுழல் மாறுதலில் கொண்டு வந்து இடமாற்றம் செய்தது தவறு என்பதை நாம் சுட்டிக் கட்டியதை அவர் ஏற்றுக் கொண்டார். இது தவிர LGO தேர்வில் PASS செய்து PREGNANT ஆக இருந்த காரணத்தால் INDUCTION TRAINING இல் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட புதுக்கோட்டை கோட்டத்தை சேர்ந்த தோழியர் திருமதி. செல்வி (தபால்காரர்) மீண்டும் தபால் காரராகவே பணிபுரிய உத்திரவிட்டிருப்பது தவறு என்றும் அவருக்கு IN-HOUSE ட்ரைனிங் அளித்து உடனே எழுத்தராக பணி நியமனம் செய்திட வேண்டும் என்றும் கோரினோம். இதனை ஏற்றுக் கொண்ட PMG அவர்கள் உடன் புதுகை கண்காணிப்பாளருக்கு இது குறித்து அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.
இதே போல தோழியர் . ஜெயந்தி , PM GRADE I ஆலங்குடி அவர்களின் பையன் விபத்துக்குள்ளான காரணத்தால் அவருக்கு மருத்துவ உதவி செய்திட , தற்காலிகமாகவேனும் திருக்கோகர்ணம் அஞ்சலகத்திற்கு இடமாற்றம் வேண்டினோம். அவர் மனு உடன் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் PMG அவர்கள் உறுதி அளித்தார். சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது. மத்திய மண்டல PMG அவர்கள் நம் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சுழல் மாறுதல்களில் உள்ள தவறுகளை நிச்சயம் களைந்திடுவார் என்று நம்புகிறோம்.
37TH CIRCLE CONFERENCE OF AIPEU GR.C TN DATE FIXED
புதுகை மாநகரில் அஞ்சல் மூன்றின்
சீர் மிகு மாநில மாநாடு !
நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் 37 ஆவது தமிழ் மாநில மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 தேதிகளில் புதுக்கோட்டை- திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள V .S .B . கல்யாண மகாலில் சிறப்பாக நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான முறையான அறிவிப்பு (NOTIFICATION ) மாநிலச் சங்கத்தால் தனியே வெளியிடப்படும் . இது தோழர்./தோழியர் பயண ஏற்பாடுகள் செய்து கொள்வதற்கான முன்னோட்டமான அறிவிப்பே !
இந்த மாநாட்டை வரவேற்புக் குழு சார்பில் ஏற்று சிறப்பாக நடத்திட நம்முடைய மத்திய மண்டல செயலரும் , புதுக்கோட்டை அஞ்சல் மூன்றின் கோட்ட செயலருமான தோழர். R . குமார் அவர்கள் பொறுப் பெடுத்துள்ளார். விரைவில் வரவேற்புக் குழு அமைத் திடுவதற்கான கூட்டம் புதுகை நகரில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளையும் மாநிலச் சங்கத்தின் சார்பில் செய்திட அவரே பொறுப்பேற்றுள்ளார். அவருடன் மத்திய மண்டலத்தில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகளான தோழர். J . ஜானகிராமன் (திருச்சி) மற்றும் தோழர். R .பெருமாள் (குடந்தை ) ஆகிய இருவரும் இணைப் பொ றுப்பினை ஏற்றுள்ளனர்.
மாநாட்டு அரங்கு முழுவதும் குளிர் சாதனம் பொறுத்தப்பட்டுள்ளது. 1000 பேர் அமரும் வகையில் பெரிய அளவில் சிறப்பான புதிய மண்டபமாக உள்ளது. மேலும் அங்கேயே சார்பாளர்கள் தங்கும் வகையில் MINI HALL மற்றும் பெரிய அளவில் DINING HALL , மிகப் பெரிய LAWN மற்றும் CAR PARKING , BUFFET HALL என்று தனித்தனியாக உள்ளது .
தலைவர்கள் , சிறப்பு அழைப்பாளர்கள் தங்கும் வகையில் குளிரூட்டப்பட்ட 14 பெரிய அறைகள் , அதிக அளவில் BATH , LAVATORY அறைகள் என சிறப்பாக அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. நகரில் இருந்து 2 கி. மீ. தொலைவில் திருக்கோகர்ணம் பகுதியில் மண்டபம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து வருபவர்கள் திருக்கோ கர்ணம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். புதுகை பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்களுக்கு திருச்சி, கீரனூர் செல்லும் நகரப் பேருந்துகள் உள்ளன.
மேலும் விபரங்கள் குறித்து வரவேற்புக்குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் தனியே சுற்றறிக்கை அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்கள் , மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மகிளா கமிட்டி உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும் .
மாநாடு சிறக்க,
மூத்த தலைவர்கள், அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள் , சம்மேளன , அகில இந்திய சங்க நிர்வாகிகள் , மகிளா கமிட்டி நிர்வாகிகள், சார்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் மத்திய மண்டலத்தை சேர்ந்த அஞ்சல் நான்கு, GDS சகோதர சங்க நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும், ஆலோசனைகளையும் நம் மாநிலச் சங்கம் வேண்டுகிறது.
சிறக்கட்டும் நம் அஞ்சல் மூன்று மாநில மாநாடு !
சீர் பெறட்டும் நம் அஞ்சல் மூன்று மாநில மாநாடு !
வெல்லட்டும் நம் அஞ்சல் மூன்று மாநில மாநாடு !
மாநாட்டு வாழ்த்துக்களுடன்
J . இராமமூர்த்தி,
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று , தமிழ்நாடு.
Saturday, 4 July 2015
Framing of Rotational Transfer Policy by Cadres Authorities
Press Information Bureau
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
03-July-2015 19:09 IST
The Government has asked the Cadre Authorities in various Ministries/Departments to submit Action Taken Report latest by July 10, 2015 on framing Rotational Transfer Policy and putting up in public domain, identification of sensitive posts and rotation of Officers from sensitive posts as per provisions.
The Rotational Transfer Policy aims to harmonize objectives of institutional memory, avoid development of vested interests and provide variety of exposure to employees thereby ensuring overall growth of an officer. While the Transfer Policy prescribes minimum and maximum tenure for each post, any exception should be with the approval of the Committee constituted for this purpose which shall record the reasons in writing.
Friday, 3 July 2015
Wednesday, 1 July 2015
Subscribe to:
Posts (Atom)






