NFPE

Wednesday 8 July 2015

37TH CIRCLE CONFERENCE OF AIPEU GR.C TN DATE FIXED


புதுகை  மாநகரில்  அஞ்சல் மூன்றின் 
சீர் மிகு  மாநில மாநாடு  !

நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் 37 ஆவது தமிழ் மாநில மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 தேதிகளில் புதுக்கோட்டை- திருக்கோகர்ணம் பகுதியில்  உள்ள V .S .B . கல்யாண மகாலில் சிறப்பாக நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.  மாநாட்டிற்கான முறையான அறிவிப்பு (NOTIFICATION ) மாநிலச் சங்கத்தால் தனியே வெளியிடப்படும் . இது தோழர்./தோழியர் பயண  ஏற்பாடுகள்  செய்து கொள்வதற்கான  முன்னோட்டமான அறிவிப்பே  !

இந்த மாநாட்டை வரவேற்புக் குழு சார்பில் ஏற்று சிறப்பாக  நடத்திட நம்முடைய மத்திய மண்டல செயலரும் , புதுக்கோட்டை அஞ்சல் மூன்றின் கோட்ட செயலருமான தோழர். R . குமார் அவர்கள் பொறுப் பெடுத்துள்ளார். விரைவில் வரவேற்புக் குழு அமைத் திடுவதற்கான   கூட்டம் புதுகை நகரில் நடைபெற உள்ளது. 

இதற்கான ஏற்பாடுகளையும் மாநிலச் சங்கத்தின் சார்பில் செய்திட அவரே பொறுப்பேற்றுள்ளார். அவருடன்  மத்திய மண்டலத்தில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகளான  தோழர். J . ஜானகிராமன் (திருச்சி)  மற்றும் தோழர். R .பெருமாள் (குடந்தை ) ஆகிய இருவரும்   இணைப் பொ றுப்பினை ஏற்றுள்ளனர்.

மாநாட்டு அரங்கு  முழுவதும்  குளிர் சாதனம் பொறுத்தப்பட்டுள்ளது. 1000 பேர் அமரும் வகையில்  பெரிய  அளவில் சிறப்பான புதிய மண்டபமாக உள்ளது. மேலும்  அங்கேயே  சார்பாளர்கள் தங்கும் வகையில்  MINI  HALL  மற்றும்  பெரிய அளவில்  DINING  HALL ,  மிகப் பெரிய  LAWN  மற்றும் CAR  PARKING ,  BUFFET  HALL  என்று  தனித்தனியாக  உள்ளது . 

தலைவர்கள் , சிறப்பு அழைப்பாளர்கள்   தங்கும் வகையில் குளிரூட்டப்பட்ட  14 பெரிய  அறைகள் ,  அதிக அளவில் BATH , LAVATORY அறைகள் என  சிறப்பாக அனைத்தும் ஒரே இடத்தில்  அமைந்துள்ளன. நகரில் இருந்து  2 கி. மீ. தொலைவில்  திருக்கோகர்ணம்  பகுதியில் மண்டபம் அமைந்துள்ளது.  திருச்சியில் இருந்து வருபவர்கள்   திருக்கோ கர்ணம்  பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். புதுகை பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்களுக்கு   திருச்சி, கீரனூர் செல்லும் நகரப் பேருந்துகள்  உள்ளன.  

மேலும் விபரங்கள் குறித்து வரவேற்புக்குழு  அமைக்கப்பட்டு  அதன் மூலம் தனியே சுற்றறிக்கை  அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்கள் , மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும்  மகிளா  கமிட்டி  உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும் . 

மாநாடு சிறக்க, 

மூத்த தலைவர்கள், அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள் , சம்மேளன , அகில இந்திய சங்க நிர்வாகிகள் , மகிளா கமிட்டி நிர்வாகிகள், சார்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும்  மத்திய மண்டலத்தை சேர்ந்த  அஞ்சல் நான்கு, GDS  சகோதர சங்க நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும், ஆலோசனைகளையும்   நம் மாநிலச் சங்கம் வேண்டுகிறது.  

சிறக்கட்டும் நம் அஞ்சல் மூன்று மாநில மாநாடு !
சீர் பெறட்டும் நம் அஞ்சல் மூன்று மாநில மாநாடு !
வெல்லட்டும் நம் அஞ்சல் மூன்று மாநில மாநாடு !

மாநாட்டு  வாழ்த்துக்களுடன் 
J . இராமமூர்த்தி, 
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று , தமிழ்நாடு.

No comments:

Post a Comment