NFPE

Wednesday 8 July 2015

INFORMAL MEETING WITH PMG, CENTRAL REGION ON 06.07.2015


அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! கடந்த 06.07.2015 அன்று  PMG, CR அவர்களுடன் நம்முடைய மாநிலச் செயலரின் சந்திப்பு நடைபெற்றது. அதில் ஸ்ரீரங்கம் மற்றும் கடலூர்  கோட்டங்களின் சுழல் மாறுதல்களில்  ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து கடிதம் அளித்து  விவாதிக்கப்பட்டது.  கடிதத்தின் நகல் கீழே அளிக்கப்பட்டுள்ளது.  

நம் மாநிலச் சங்கத்தின் கருத்துக்களை பொறுமையாக கேட்டறிந்த  PMG CR அவர்கள்  இரண்டாவது மேல் முறையீடுகள் அளிக்கப்பட்டிருப்பின் அவற்றின் மீது உரிய பரிசீலனை செய்து ஆவன நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.  மேலும்  LR  ஊழியர்களை ஸ்ரீரங்கம் கோட்டத்தில்  சுழல் மாறுதலில் கொண்டு வந்து  இடமாற்றம் செய்தது தவறு என்பதை நாம் சுட்டிக் கட்டியதை அவர் ஏற்றுக் கொண்டார்.  இது தவிர LGO  தேர்வில்  PASS  செய்து PREGNANT  ஆக இருந்த காரணத்தால்  INDUCTION  TRAINING  இல் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட புதுக்கோட்டை கோட்டத்தை சேர்ந்த தோழியர் திருமதி. செல்வி (தபால்காரர்) மீண்டும் தபால் காரராகவே பணிபுரிய உத்திரவிட்டிருப்பது தவறு என்றும் அவருக்கு IN-HOUSE  ட்ரைனிங் அளித்து உடனே எழுத்தராக பணி நியமனம் செய்திட வேண்டும் என்றும்  கோரினோம். இதனை ஏற்றுக் கொண்ட PMG அவர்கள் உடன்  புதுகை கண்காணிப்பாளருக்கு இது குறித்து அறிவுறுத்துவதாக  தெரிவித்தார். 

இதே போல  தோழியர் . ஜெயந்தி , PM  GRADE  I  ஆலங்குடி அவர்களின் பையன் விபத்துக்குள்ளான காரணத்தால் அவருக்கு மருத்துவ உதவி செய்திட , தற்காலிகமாகவேனும்  திருக்கோகர்ணம் அஞ்சலகத்திற்கு இடமாற்றம் வேண்டினோம். அவர் மனு உடன் பரிசீலிக்கப்பட்டு உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் PMG அவர்கள் உறுதி அளித்தார். சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது.  மத்திய மண்டல PMG அவர்கள் நம்  கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு  சுழல் மாறுதல்களில் உள்ள தவறுகளை நிச்சயம் களைந்திடுவார் என்று நம்புகிறோம்.





No comments:

Post a Comment