பேமெண்ட் வங்கி என்றால் என்ன?
பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கான உரிமம் பெற்ற ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களிடமிருந்து ( ஆரம்பத்தில் நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை) டெபாசிட்டுகளை பெறலாம். மேலும் இண்டர்நெட் பேங்கிங், பண பரிமாற்ற வசதி, இன்சூரன்ஸ் விற்பனை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற சேவைகளை அளிக்கலாம்.
பேமெண்ட்வங்கியின் நோக்கம் என்ன?
பேமெண்ட் வங்கி அமைக்கப்படுவதினால் நிதி பரிவர்த்தனை நடவடிக்கைகள் மேலும் அதிகமாகும். குறிப்பாக சேமிப்பு கணக்குகள், பேமண்ட்ஸ் மற்றும் ரெமிட்டன்ஸ் ( remittance ) சேவைகள் கூலித்தொழிலாளர்கள், குறைந்த வருவாய் உடையோர், சிறிய வியாபாரிகள் மற்றும் இதர அமைப்பு சாரா துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கிடைக்கும்.
டெபிட்/கிரெடிட் கார்டு கிடைக்குமா?
கிரெடிட் கார்டு கிடைக்காது. ஆனால் பேமெண்ட் வங்கிகள் ஏடிஎம்./டெபிட் கார்டுகளை வழங்கும்.
பேங்கிங் முறைக்கு பேமண்ட் வங்கிகளின் பங்களிப்பு என்ன?
வழக்கமான வங்கிகளுக்கு மேலும் அதிகமான நிதி வருவதையும், கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு வங்கி சேவைகள் கிடைக்கவும் இதுபோன்ற பேமண்ட் வங்கிகள் உதவும். மேலும் தற்போது பேமெண்ட் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள், நாடு முழுவதும் உள்ள 1,54,000 தபால் அலுவலகங்களும் ( 1,30,000 கிராமப்புற தபால் அலுவலகங்கள் உட்பட) மக்களுக்கு வங்கி சேவைகள் அளிக்க வகை செய்யும்.
என்ஆர்ஐ கணக்கு தொடங்க முடியுமா?
இந்த பேமெண்ட் வங்கிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இதில் கணக்கு தொடங்க முடியாது.
லோன் கிடைக்குமா?
இந்த பேமெண்ட் வங்கிகள் கடன் வழங்குதல் போன்ற சேவைகள் எதிலும் ஈடுபட ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அனுமதிக்கவில்லை.எனவே லோன் பெற நினைப்பவர்கள் வழக்கமான வங்கிகளுக்குத்தான் செல்ல வேண்டும்.
குறை தீர்க்கும் அமைப்பு உண்டா?
நிச்சயம் உண்டு. பேமெண்ட் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்க உயரதிகாரம் கொண்ட வாடிக்கையாளர்கள் குறை தீர்ப்பு அமைப்பு செயல்படும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் தரத்தை ஒட்டி இந்த வங்கியின் செயல்பாடுகள் அமைய உறுதி செய்யப்படுவதோடு, பேமண்ட் வங்கிகளின் செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலும் வலையமைப்புக்கு உட்பட்டு இருக்கும்.

No comments:
Post a Comment