NFPE

Sunday 15 January 2012

பொங்கல் பரிசென இதைக் கொள்வோம் .

அன்பு  பொங்க,ஆசை பொங்க அறிவு பொங்க இன்பம்  பொங்க இனிமை  பொங்க ,என்றும்  உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க உங்களை வாழ்த்துகிறோம்.

நமது தலைவர்கள் கடந்த மூன்று நாட்களாகத்  தொடர்ந்து நடத்திய உச்ச கட்ட  பேச்சு வார்த்தை களின் விளைவாக எழுத்துமூலமாகப்பெறப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் வேலைநிறுத்த அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது . போரைத் தொடங்கு முன்னரே வெற்றியைப்பறித்திடும் நமது சங்கத்தின் சீரிய செயல்பாட்டிற்கு நாம் அனைவருமே பெருமை கொள்வோம் .களத்தை உத்வேகத்துடன் எதிர்நோக்கிய நமது தயாரிப்பு வேலைகளால்தான் இது  சாத்தியமானது . நமது தலைவர்களை நினைத்து நாம் பெருமிதம் கொள்வோம் . பெரும்பாலான கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளோம் எந்த இழப்புமின்றி . போருக்கும் தயார்; பேச்சுவார்த்தைக்கும் தயார் என்ற நமது மிகச்சரியான செயல்பாடு எந்தச் சேதாரமும் இல்லாமல் வெற்ற்க்கனியைத் தட்டிப்பறிக்கும் வாய்ப்பை நமது தலைவர்களுக்கு   நல்கியுள்ளது . அனைவர்க்கும் வீர வாழ்த்துக்கள் .

பொங்கல் பரிசென இதைக் கொள்வோம் .




M. Thirusangu          C. Sasikumar                   R. Varadharajan
    President              Divl.Secretary                Financial Secretary


No comments:

Post a Comment