NFPE

Sunday 22 January 2012

நமது துறை அமைச்சருடன் JCA தலைவர்கள் சந்திப்பு .


நமது துறை அமைச்சர் மாண்புமிகு சச்சின் பைலட் அவரிகளை இலாகா செயலர் முன்னிலையில் இன்று 21.01.2012 காலை 11 மணியளவில் தோழர் M.கிருஷ்ணன்(மாபொது செயலர், NFPE), தோழர் D.தியாகராஜன்(மாபொது செயலர், FNPO), தோழர் K.V.ஸ்ரீதரன்(பொது செயலர், P3 NFPE) மற்றும் JCA தலைவர்கள் சந்தித்து ஊரக அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை முன்வைத்தும், பகுதி நேர/தற்காலிக ஊழியர்கள் மற்றும் மிகுதி நேரப்படி MACP முரண்பாடுகள் குறித்தும் கோரிக்கை மனு அளித்து விவாதித்தனர்.

ஊரக அஞ்சல் ஊழியர்களின் தற்போதைய நிலை, பதவி உயர்வு ஆகியவை குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும், புதிய அளவீடுகளால் ஏற்கனவே பெரும் TRCA எக்காரணத்தை கொண்டும் குறைக்கக் கூடாது என துறை செயலருக்கு உடனடியாக உத்தரவிட்டார். பணபரி மாற்றத்திற்கான அளவீடு இம்மாத இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும் எனவும் போனஸ் உச்ச வரம்பு போன்ற மற்றவை கருணை அடிப்படையில் பரிசிளிப்பதகவும் கூறினார்.

பகுதி நேர/தற்காலிக ஊழியர்கள் குறித்து அஞ்சல் துறைக்கு விரைவில் ஆணை அனுப்பப்படும் எனவும், கோரிக்கை மனுவில் உள்ள மற்றவை ஆழ்ந்து பரிசீலித்து விரைவில் முடிவு எடுப்பதாகவும் உறுதியளித்தார். கோரிக்கை மனு கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment