NFPE

Tuesday 1 January 2013

NFPE தமிழ் மாநில இணைப்புக் குழுக் கூட்டம்

அன்புத் தோழர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


நமது NFPE சம்மேளனத்தின் உறுப்புச் சங்கங்கள் அடங்கிய தமிழ் மாநில இணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (31.12.12) சென்னை எழும்பூரில் , தோழர் M . கண்ணையன் , கன்வீனர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS மூன்று, RMS நான்கு, நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, SBCO , AIPEU GDS NFPE ஆகிய மாநிலச் சங்கங்களின் மாநிலச் செயலர்கள், தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில் மாநில இணைப்புக் குழுவை புதுப்பிப்பது , RJCM செயலர் புதிதாகத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் விவாதிக்கப் பட்டன.

கூட்டத்தின் முடிவாக NFPE தமிழ் மாநில இணைப்புக் குழுவின் தலைவராக தோழர். K . ராஜேந்திரன், மாநிலச் செயலர், RMS நான்கு அவர்களும் , கன்வீனர் ஆக தோழர் J . ராமமூர்த்தி, மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று அவர்களும் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதேபோல RJCM அமைப்பின் ஊழியர் தரப்புச் செயலர்(SECRETARY , STAFF SIDE ) ஆக தோழர். J . ராமமுர்த்தி, மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று அவர்களை NFPE தரப்பில் எதிர்வரும் RJCM உறுப்பினர்களின் கூட்டத்தில் முன்மொழிவதாக NFPE தமிழ் மாநிலச் சங்கங்களின் சார்பில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment