NFPE

Monday 21 January 2013

PREPARE FOR TWO DAYS STRIKE ON 20 & 21 FEB, 2013

 இந்தியாவின்  மிகப் பெரும் 11 தொழிற் சங்க மையங்களான AITUC, CITU, INTUC, HMS, BMS,  உள்ளிட்ட சங்கங்கள்  அறிவித்துள்ள வேலை நிறுத்தம் !



அஞ்சல் துறையில் NFPE  மற்றும்  FNPO  இணைந்து கூட்டாக   

அறிவித்துள்ள வேலை நிறுத்தம் ! 



இந்திய நாட்டின் பாதுகாப்பு துறை ஊழியர்களும்(AIDEF)  கலந்து கொள்ளும்  வேலை நிறுத்தம் !



அரசியல் உள்நோக்கமின்றி  ஆளும் காங்கிரஸ் கட்சியின்  தொழிற்சங்கமான  INTUC,   பிரதான   எதிர்க்   கட்சியான  பாரதீய ஜனதாக் கட்சியின் தொழிற்சங்கமான  BMS ,  மார்க்சிய  கம்யூனிஸ்ட் கட்சியின்   தொழிற்சங்கமான CITU ,  வலது  கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான AITUC  உள்ளிட்ட சங்கங்கள்  மத்திய அரசின்  மக்கள் விரோத , தொழிலாளர் விரோத  கொள்கைகளுக்கு எதிராக  தூக்கியுள்ள  போர்க்கொடி !



 ஆம்!  எதிர்வரும்  பிப்ரவரி 20 ,  மற்றும் 21 ஆம் தேதிகளில்  அறிவித்துள்ள 

48  மணி நேர வேலை  நிறுத்தம் !



சென்னையில் எதிர்வரும் 09.02.2013 அன்று  NFPE  மற்றும் FNPO  

அகில இந்திய சங்கத்தின்  நிர்வாகிகள் கலந்து கொள்ளும் 

வேலை நிறுத்த பிரச்சாரக் கூட்டம் !



வேலை நிறுத்தத்திற்கு  தயாராவீர் !

No comments:

Post a Comment