NFPE

Sunday 1 September 2013


நாடு முழுவதிலும் உள்ள 80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய தொகை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

அனைத்திந்திய சேவை விதிகளின் இறப்பு மற்றம் ஓய்வு பலன்கள் தொடர்பான பிரிவில் திருத்தங்களை கொண்டு வர அரசு பணியாளர் நலவாரியத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி அனைத்திந்திய சேவை துறைகளைச் சேர்ந்த 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் அடிப்படை ஓய்வூதிய தொகையை விட கூடுதலாக 20 சதவீதம் ஓய்வூதிய தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஓய்வூதிய தொகை ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை அதிகரிக்கப்பட உள்ளது. ஓய்வூதியதாரர் 85 வயதை கடக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதிய தொகை 30 சதவீதமாக அதிகரிக்கும். இதே போல் 90 வயதை கடக்கும் போது 40 சதவீதமும், 95 வயதை கடக்கும் போது 50 சதவீதமும் கூடுதல் ஓய்வூதிய தொகை வழங்கப்படும். ஓய்வூதியதாரர் 100 வயதை எட்டும் போது அவருக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதிய தொகை, அடிப்படை ஓய்வூதிய தொகையின்படி 100 சதவீதமாக்கப்படும்.

குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான மருத்துவ சலுகை தொகையும் கூடுதலாக்கப்படும் என அரசு ஊழியர்களுக்கான துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment