NFPE

Monday, 30 March 2015

Dear Comrades,
  The Monthly meeting with SPOs will be held on 06.04.2015 A/N 1500 hrs.  Comrades are requested to send the subjects to Secretary immediately.

C. Sasikumar (9442234938)
Divisional Secretary
AIPEU Group 'C'
Srirangam Division
Srirangam - 620 006.
நம்முடைய கடிதம் போன்றே  ஆந்திர மாநிலச் செயலர்  கடிதம் அளித்துப் பேசியதில், ஆந்திர மாநிலத்தில்  எதிர்வரும் 1.04.2015 அன்று AR மூலம்  SALARY PAYMENT  மற்றும் PENSION - CASH  ஆக அளித்திட  இன்று மாலை உத்திரவு இடப்பட்டது. நமது மாநிலத்தில் CPMG  இல்லாத காரணத்தால்  இதுவரை முடிவு எடுக்கப்பட வில்லை . நிச்சயம் தொலைபேசியில் CPMG  அவர்களை தொடர்பு கொண்டு  இதற்கான உத்திரவை நாம் பெறுவோம். நமது மாநிலச்சங்க  அடுத்த கடிதம் மற்றும் ஆந்திர மாநில CPMG  உத்திரவு நகலை கீழே  காணவும் .


CIRCLE UNION ADDRESSED CPMG, TN FOR EFFECTING PAYMENT OF SALARY ON 1.4.2015


Friday, 27 March 2015

LATEST POSITION ON OUR STRIKE DEMANDS AND THE MINUTES OF THE CONCILIATION MEETING HELD BEFORE ALC (CENTRAL) ON 27.03.2015 FORENOON

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

இன்று (27.03.2015) காலை மத்திய  தொழிலாளர் நல உதவி ஆணையர் முன் கூடிய  மாநில அஞ்சல் நிர்வாகத்துடனான பேச்சு வார்த்தையின்  முடிவில்  அளிக்கப்பட  MINUTES  நகல்  மற்றும் தொழிலாளர்  நல உதவி  ஆணையரிடம் அளிக்கப்பட்ட உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய சில  முக்கிய   கோரிக்கைகள்  பட்டியல்  கீழே  தரப்பட்டுள்ளது.  

அந்தப் பட்டியலில் உள்ள பிரச்சினைகளை  உடனடியாக தீர்த்திடுமாறு  நிர்வாகத்திற்கு மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் அறிவுறுத் தினார். நிர்வாகத்தரப்பில் கலந்துகொண்ட உதவி இயக்குனர்  இந்தப்  பிரச்சினைகள் மீது தீர்வு வேண்டி உடனடியாக CPMG  யின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று உறுதி அளித்தார். CPMG  உடனான நேரடி  இரு தரப்பு  பேச்சு வார்த்தை , ஏற்கனவே  மாநில நிர்வாகத்தால்  உறுதி அளித்தபடி 10.04.2015 க்குள் நடத்தப்படும் என்றும்  தெரிவித்தார். பிரச்சினை களின் தீர்வில்  நிச்சயம்  முன்னேற்றம்  அளிக்கப்படும் என்றும்  நிர்வாகத்  தரப்பின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. கூட்டம் சுமார் 01.30 மணியளவில் முடிவுற்றது .  






P.A.s WAIT LIST AGAINST DROP OUTS RELEASED IN TN CIRCLE


P.A. WAIT LIST AGAINST DROP OUTS RELEASED  இங்கு  கிளிக் செய்யவும் .

HATS OFF to TAMILNADU COMRADES for their ONE DAY STRIKE.



HATS OFF to TAMILNADU COMRADES for their ONE DAY STRIKE.

Simple Demands lead to one day strike on 26.3.2015 at Tamilnadu Postal Circle  due to evading attitude of the Circle Administration .

Despite the earnest efforts made by Tamilnadu NFPE COC , all CHQs and NFPE to have negotiations across the table with Tamilnadu NFPE COC,  the Tamilnadu Circle administration was reluctant and replied that they would discuss  on the issues only by  second  week of April 2015.

Even they were reluctant in attending the Asst Labour Commissioner (Central) office for conciliatory talks. Despite of summoning the DPS HQ in the afternoon of 25.3.2015,  no body turned up for  discussions. 

Even after issuance of the strike notice, even after  serving notice by the Asst Labour Commissioner for conciliatory  talks, even after summoning of the decision making authority for negotiations by the ALC, the Tamilnadu Circle Administration has failed to respond ignoring the legal obligations.

Having no other go, all the 9 unions under NFPE in Tamilnadu Circle staged a powerful demonstration in front of O/o CPMG, TN at the close of 25.03.2015 and announced total strike throughout Tamilnadu on 26.03.2015 as notified earlier.

Now the reports received from Divisions/Branches / ranks /cadres /wings showSTRIKE is TOTAL in NFPE.  The avoidable Strike was forced on the staff side by the Postal administration of Tamilnadu Circle

Nobody is above law and it is the bounden duty of the Tamilnadu Postal Administration to invite the Tamilnadu NFPE affiliated unions for negotiations to sort out all the issues early.


Thursday, 26 March 2015

 நமது வெற்றியை நாளைய  

சரித்திரம் சொல்லும் ...

இப்படை தோற்கின்

எப்படை வெல்லும் 

 Red salute to all NFPE comrades, Srirangam

Division for their truthful participation in the 

Historic Postal Strike


We don't Read history ....When we can 

create one...





NFPE, Srirangam

தமிழகம் அளவில் 26.03.2015 NFPE - COC ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் மாபெரும் வெற்றி!!!

கொம்பு இருப்பதை மறந்தும்  வண்டி இழுக்கும் மாடுகளாய் ;
குவித்த செந்நெல்  விளைத்த கரங்கள் 
தமதென்று அறிந்திருந்தும்  கும்பிட்டுக் கூழைகளாய் ;
விதி வழி இதுவென்று மதிகேடாய் நடைப்பிணமாய் 
எத்தனை நாள் என் தோழா ? வந்த வழி திரும்பிப்பார் ! 
கண்ட களம் தெரியும் பார் ! கொண்ட வெற்றி புரியும் பார் !
சிங்கமென சிலிர்த்து  எழு !  உன் துன்ப விலங்குகள் தூளாகும் ! 
--------------------------------------------------------------------------------------------------------

பேசிப் பார்த்தோம் ; கேட்டுப் பார்த்தோம் ;
எழுதிப்  பார்த்தோம்  ; SUBJECTS  கொடுத்தோம் ;
அகில இந்திய சங்கத்திற்கு எடுத்துச் சென்றோம் ;
ஆர்ப்பாட்டம் செய்தோம் ;  தார்ணா  இருந்தோம் ;
NOTICE  போட்டோம்  ;  போஸ்டர் போட்டோம் :
வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தோம் ;
கோரிக்கை மனு கொடுத்தோம் ;

தொழிலாளர் நல ஆணையர் முன் சென்றோம் ;
அங்கேயும்  அவர்கள் வரவில்லை ;
மீண்டும் மீண்டும்  அழைத்தும் வரவில்லை  ;
இத்தனை செய்தும் கேளாச் செவியினராய் 
ஒரு மாநில நிர்வாகம் ; அதன் அங்கங்களாய் 
எத்தனை  எத்தனை அதிகாரிகள் ;
எங்களுக்கு TARGET  தான் முக்கியம் ;
அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் 
என்று  அலட்சியமாய் ஒரு கடிதம்  ;

எந்த TARGET  லும் தமிழகமே முதலிடம் ;
CBS  MIGRATION  தமிழகம்  முதலில் ;
CIS  MIGRATION தமிழகம் முதலில் ;
முதல் ATM  தமிழகத்தில்தானே ?
SSA  கணக்கு  பிரதமரின் PILOT  PROJECT 
ஒரு கோடி கணக்குகள்  ஒரு மாதத்தில் வேண்டும் 
இதிலும் தமிழகம்  முதலிடம்  ;

கடந்த 23.03.2015 FINACLE  இல் எடுக்கப் பட்ட கணக்கு 
பிரதம அமைச்சரின் குஜராத்தில்  541
மேற்கு வங்கத்தில்     340
ஓடிஷா வில் 1201
கர்நாடகாவில் 688
தமிழ்நாடு  3349
பிரதம அமைச்சரின் குஜராத்தில் ஞாயிறு  அலுவலகம் 
திறக்க வில்லை என்பதே  செய்தி ;
விளைத்த கரங்கள் எவருடையவை ? 
தோழர்கள்  சிந்திய வியர்வை எவ்வளவு   ?
எடுத்துச் சொல்ல  வார்த்தை உண்டா ?

இத்தனை செய்தும்  தொழிலாளி யின் உரிமைகள் 
மறுக்கப் படுகின்றனவே  !

தொழிலாளியின்  கோரிக்கைகள் கேட்கப் படாததால் 
உரத்துச் சொல்லவே  ஆர்ப்பாட்டம்  ! தார்ணா  !
உண்ணாவிரதம்  எல்லாம் ; அந்த  குரல் கூட 
மறுக்கப்படுகிறதே ; குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றனவே !

திறக்கப் படுகின்ற  ஞாயிறுகளுக்குப் பதில் 
இருக்கின்ற நாளில்  வேலை நிறுத்தம் வேண்டாம்  என்று கூறி 
பேச்சு வார்த்தை நடத்திடுவோம்  என்று  இறங்கிவர 
மனமே  இல்லை  ;  தொழிலாளி  என்ன அடிமை இயந்திரமா ?

வேலை நிறுத்தம் விரும்பி ஏற்றதல்ல ; 
வேலை நிறுத்தத்தில் தள்ளியது நிர்வாகம் ;
இது  முடிவல்ல  ! ஆரம்பம் ! தொழிலாளி போர் ஆயுதம் பூண்டு விட்டான்  !
உரிமை கேட்டு போர்  !  உழைக்கும் தொழிலாளி யின் 
உணர்வுகள் மதிக்கப்பட  போர்  !

CORPORATE  கம்பெனி களில்  கூட சனி , ஞாயிறு விடுமுறை உண்டு  !
MODEL  EMPLOYER  ஆன மத்திய அரசுத்துறையில் 
தொடர்ந்து ஞாயிறுகளில்  வேலை நாள்  ! அப்பட்டமான  அரசியல் அமைப்புச் சட்ட மீறல் ! மனித உரிமை மீறல் !
UNFAIR  LABOUR PRACTICE  என்று  தொழிலாளர் நல 
ஆணையரே  பதிவு செய்யும் அவலம்  ;

இதுவா நிர்வாகம் ; இதுவா அரசாங்கம்  ?
நடத்துபவர்கள்  இந்தியர்கள் தானே  ?
அவர்களுக்கு இந்திய  அரசியல் அமைப்பு சட்டங்கள்  
தொழிலாளர் நல சட்டங்கள் செல்லாதா ?
ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு 
அந்த மாறுதலை செய்வதற்கு  நல்ல நாள் இன்று  !

தமிழகமெங்கும்  வெற்றி  ! வெற்றி !  வேலை நிறுத்தம் வெற்றி  !
என்ற சங்கநாதம்  முழங்கப் படுகிறது  !
இந்த வேலை நிறுத்தம்  ஒரு வரலாற்றுப் பதிவு !
இந்த வேலை நிறுத்தம்  தமிழகத்தின் ஓர்  எழுச்சி  !
ஒன்று படுவோம்  !   போராடுவோம் !


தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
தொழிற்ச்சங்க  ஒற்றுமை ஓங்குக!



Wednesday, 25 March 2015

MEETING WITH 7 th CPC


All General Secretaries of affiliated unions and other leaders led by Secretary General, NFPE met the Chairman and team of Seventh CPC on 25.03.2015 at Chatrapathi Shivaji Bhawan NewDelhi on the Invitation of the 7 CPC. Details of the discussions will be published later.

 
 
MEETING OF NFPE LEADERS WITH
7th CENTRAL PAY COMISSION AT NEW DELHI

A meeting of NFPE Leaders consisting Coms. R.N. Parashar Secretary General , Giriraj Singh , General Secretary-R-III, N. Subramainan General Secretary P-III, R. Seethalaxmi General Secretary P-IV, P. Suresh  General Secretary R-IV , Pranab Bhattacharya General Secretary Admn., T. Satyanarayana General Secretary Postal Accounts, Virendra Tiwari General Secretary AIPSBCOEA, Pandu Ranga Rao General Secretary GDS(NFPE), R. Shivanarayana President P-III, S.K. Bardhan President R-III, S.P. Kulkarni President AIPSBCOEA, Balwinder Singh Treasurer P-III, Manohar Lal  Vice President P-IV, was held with Chairman of 7th CPC Justice A.K. Mathur alongwith Smt. Meena Agrawal , Secretary, Shri Jayanyt Sinha Jt. Secretary , Shri Vivek Rae Member, Shri Y. Shukla, Director, Shri Rajeev Mishra Advisor, Shri Mudit  Mittal Director, at 7th CPC Office Chhatrapati Shivaji Bhawan Qutab Institutional Area , New Delhi.

Com. R.N. Parashar, Secretary General NFPE after welcoming Chairman & other members initiated oral evidence on memorandum submitted by NFPE. He narrated all important points related to Postal, RMS, MMS, Admn, Offices, Postal Accounts, SBCO and GDS issues alongwith Casual Labourers issues. All General Secretaries of NFPE affiliated unions presented their sectional issues very nicely.

The most important thing of this meeting was that Chairman gave a patient hearing on GDS issues. Com. P. Panduranga Rao General Secretary, GDS (NFPE) presented the case of GDS in perfect manner and again submitted a copy of memorandum to Chairman. Hon'ble  Chairman  also gave positive assurances on most of the issues.

Meeting was ended in a very cordial environment.

அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப்  போராடாது  
அநீதி களைய முடியாது !

வெல்லட்டும் !  வெல்லட்டும் ! 
தமிழகம் தழுவிய NFPE  சங்கங்களின் 

26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

உணர்வுள்ள தோழர்களே  ! ஒன்று கூடுங்கள் ! 

சங்கத்தை  முன்னிலைப் படுத்துங்கள் ! 

வேறுபாடுகளை தூக்கி எறியுங்கள் !  

இன்றில்லையேல் என்றும் இல்லை !



NFPE, Srirangam

Strike Intimation Letter

From


  

    

To

        The supdt of POs
        Srirangam Division,
        Srirangam - 620 006

Sir,

  As per  the direction of COC of NFPE Tamilnadu, I decided to participate in the proposed one day
strike on 26.03.2015 letter follows.

                                                    Thanking you


Yours faithfully,

Sd

Name

Designation

26.03.2015 வேலை நிறுத்தம் வெல்லட்டும்

தோழர்களே! தோழியர்களே!!

இன்று 25.03.2015 மதியம் 11.30 மணியளவில் லேபர் கமிசனுடன் 9 NFPE சங்கங்களின் செயலாளர்களும், நிர்வாக தரப்பில் அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். லேபர் கமிசன், "நமது சங்கங்களுடன் அஞ்சல் நிர்வாகம் 24.03.2015 க்குள் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்" என்று சொன்ன பரிந்துரையை நமது மாநில அஞ்சல் நிர்வாகம் நிராகரித்துள்ளது.  ஆகவே தோழர்களே! வேலைநிறுத்த ஆயத்த பணிகளை விரைந்து செய்வோம். "ஆணவம் கொண்ட அதிகார வர்க்கம் தனது குணத்தை வெளிப்படுத்தும் பொழுது" அதைவிட சக்திகொண்ட "தொழிலாளிவர்க்கம்" ஆகிய நாம் நமது பலத்தை வெளிப்படுத்தும் நாள் 26.03.2015.
அஞ்சல் ஊழியனே புறப்படு!!!
வேலைநிறுத்த போர் நோக்கி !!!

26.03.2015 வேலை நிறுத்தம் வெல்லட்டும் !!!
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!!!
தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக!!!


24.03.2015 அன்று பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டம்

பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்தில் இன்று மாலை 06.15 மணியளவில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டத்திற்கு திருவரங்கம் அஞ்சல் மூன்றின் உதவித் தலைவர் தோழர் R. கலியன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.  திருவரங்கம் அஞ்சல் மூன்றின் நிதிச் செயலர் தோழர் V. ஸ்ரீதரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர் J. ஜானகிராமன், மாநில உதவித் தலைவர் அஞ்சல் மூன்று, தோழர் R. விஷ்ணுதேவன், மாநில நிதிச்செயலர், NFPE GDS, மற்றும் தோழர் P. பன்னீர் செல்வம், மாநில அமைப்புச் செயலர், NFPE GDS, அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர் C. சசிகுமார், மற்றும் அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர் R. சந்திரன்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு " வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை" எடுத்துரைத்தார்கள்.











NFPE, Srirangam

Tuesday, 24 March 2015

PENSION PAYMENT FOR THE MONTH OF MARCH 2015 THROUGH POSB FUNCTIONING UNDER CBS – REGARDING

No. PF-Misc/2015                                                                         Dated 21th March, 2015

To

The Secretary
Department of Posts
Government of India
Dak Bhawn     
New Delhi – 110001


Sub: Pension payment for the month of March 2015 through POSB functioning under CBS – regarding.

Madam,

Your kind attention is invited to the fact that last year on 1st April, 2014 no payment of pension could be disbursed through POSB on the request of Infosys due to some technical problems in the CBS. In fact all SB transactions were suspended on that day. Many pensioners were made to return home empty handed without drawing their pension on that day.

This year 1st April is followed by two holidays on 2nd and 3rd April for Mahavir jayanthi and Good Friday and therefore any recurrence of previous problem on 1st April will cause heavy hardships on pensioners as they could not draw their pension until 4th April, 2015.

It is therefore requested to kindly intervene in the matter to prevent any such recurrence this year and if suspension of all SB transactions on 1st April is unavoidable, then necessary instructions may please be issued to all concerned for effecting payment of pension on 31st March, 2015 itself irrespective of the fact that no payment or pension payment is normally done on the closing day of the financial year.


Thanking you,
Yours faithfully,
(R.N. Parashar)
Secretary General