NFPE

Thursday 26 November 2015

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ! 

7 ஆவது ஊதியக் குழுவின் பிற்போக்குத்தனமான  பரிந்துரைகளை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனெனில்  10  ஆண்டுகள்  கழித்து வழங்கப்படும் ஊதிய  உயர்வு  வெறும் 14.29% மட்டுமே .  அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் ஊதிய உயர்வினால் அரசுக்கு 1 லட்சம் கோடி மேலும் செலவு  என்று  ஊடகங்களில்  பொய்  பிரச்சாரம் செய்யப்படுவதை  நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது பொது மக்களை  அரசு ஊழியர்களுக்கு எதிராக தூண்டிவிடும்  கேவலமான அரசியல் அன்றி வேறு  எதுவுமாக இருக்க முடியாது.

இந்த நிலைமைகளை கணக்கில் கொண்ட ரயில்வே , பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான  NJCA முதற்கட்டமாக  எதிர்வரும் 27.11.2015 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கறுப்புச் சின்னம்  அணிந்து எழுச்சி மிகு  கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்திட தாக்கீது அனுப்பி உள்ளது . இதனை  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும் , நம்முடைய NFPE சம்மேளனமும்  ஏற்று நடத்திட வேண்டுகிறது. எனவே  

1. நாளை 27.11.2015 அன்று அனைத்து ஊழியர்களும்  கருப்பு சின்னம் அணிந்து  மத்திய  அரசுக்கு  நம்  எதிர்ப்பை  தெரிவிக்க  வேண்டுகிறோம்.

2. திருவரங்க கோட்ட மற்றும் தலைமை அஞ்சலக  வாயிலிலும், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலக வாயிலிலும் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் அனைத்து தோழர்களும், தோழியர்களும் பெருவாரியாக கலந்துக்கொண்டு நமது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.  அந்தந்த பகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். கண்டன ஆர்ப்பாட்ட புகைப்படங்களை உடனடியாக செயலருக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம். 

இது வெறும்  ஆர்ப்பாட்டம்  அல்ல  !                                       உங்களின்  உணர்வு !
இது  வெறும்  போராட்டமல்ல !                                                உங்களின்  வாழ்வு !

எவரும்  இந்த  செய்தி  தெரியவில்லை என்று கூறக் கூடாது . தெரிந்தவர்கள் இந்த  செய்தியை உடனே  அடுத்த  தோழருக்கும்   மற்றும் நிர்வாகிகளுக்கும்  பகிரவும் .

பரவட்டும் !    போராட்ட  தீ  பரவட்டும் !
முழங்கட்டும்  !   உரிமை  முழக்கம்  முழங்கட்டும் !
எட்டட்டும்  46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல் 
மத்திய  அரசின் செவிகளுக்கு எட்டட்டும் !

இன்றில்லையேல்  இனி  அடுத்த பத்து  ஆண்டுகளோ ? 
அல்லது  அதுவும் இல்லையோ ? எவருக்கும் தெரியாது 

        K. கதிர்வேல்                               C. சசிகுமார்                                     V. ஸ்ரீதரன் 
கோட்டத் தலைவர்                கோட்டச்  செயலர்                         நிதிச் செயலர் 

No comments:

Post a Comment